WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Monday, 4 May 2015

அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 29-ந்தேதி வரை 25 நாட்கள் நீடிக்கிறது. இந்த கால கட்டத்தில் வெயில் வாட்டி வதைக்கும்.

கோடை காலம் தொடங்கிவிட்டதால் தண்ணீர் தாகம் அதிகரிக்கும். காய்ச்சி வடிகட்டிய குளிர்ந்த நீர், மோர், உப்பு போட்ட எலுமிச்சை பழச்சாறு குடிக்கலாம், வெள்ளரி, தர்பூசணி மற்றும் பிறவகை பழங்கள் சாப்பிடலாம்.

மீன்கள் சாப்பிடுவதால் சிலருக்கு அலர்ஜியும், சைனஸ் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது. இதனால் அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் மீன்கள் சாப்பிடாமல் இருப்பது நல்லது. கடும் வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு சென்ற உடன் சிறிது நேரம் மின்விசிறியின் கீழ்அமர்ந்து, தலையில் உள்ள வியர்வை காய்ந்த பின்னர் பானங்கள் அருந்துவது நல்லது.

குளிர்பானங்களை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும். காய்ச்சி வடிகட்டிய நீர் 10 அல்லது 15 டம்ளர் தினசரி குடிக்க வேண்டும். காரமான உணவு வகைகள் மற்றும் பான்பராக், பாக்கு போடுவதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது.

கோடை காலங்களில் இவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் அக்னி நட்சத்திர வெப்பத்திலிருந்து ஓரளவு நம்மை காத்துக்கொள்ள முடியும் என்று இயற்கை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...