ஆர்கானிக் ஃபுட் அப்படீன்னு (அதாங்க இயற்கையா விளையற காய்கள், பழங்கள், விதைகள், பருப்புகள்) இப்போ எங்க பாத் தாலும் கடையை பரப்பி வச்சுகிட்டு கல்லா கட்ட ஆரம்பிச் சிருக்காங்க நிறைய பேரு. மக்களுக்கும் ஏதோ இதுபற்றிய ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுப்போன மாதிரி ஆர்வமா தேடிப்போய் வாங்க ஆரம்பிச்சிருக்காங்க.
ஒரு சில நிறுவனங்கள் தவிர மத்தவங்கெல்லாம் கொஞ்சமா இந்த ஆர்கானிக் உணவுப் பொருட்களை வாங்கிட்டு அதனோட மருந்துகள் போட்டும், பூச்சி மருந்துகள் தெளித்தும் உற்பத்தி செஞ்ச பழங்கள் விதைகள், காய்களை விற்பனை செய்யறாங்க. வாங்கற யாரும் எல்லாத்துக்கும் தரச்சான்றிதழ் கேட்பதோ இது ஒரிஜினல் ஆர்கானிக் உணவு வகைகளைச் சார்ந்ததா என்றோ கேள்விகள் கேட்பதும் இல்லை. அந்த உணவு பொருட்களில் ஒட்டியிருக்கும் லேபிள்கள் உண்மையானதா பொய்யானதா என்றும் ஆராய்ச்சி செய்வதில்லை..
ஆர்கானிக் புட் விற்பனையில் பொதுவா 25 சதவீதம் லாபம் கிடைக்குது. இதனோட சாதாரணமாக கிடைக்கிற ஐயிட்டங் களையும் சேத்து ஆர்கானிக் ஃபுட்டுன்னு வித்தா அந்த பொருளோட விலையில டபுள் மடங்கு லாபம். அதனால சில பேரு பெரிய அளவுல கடைகளை எடுத்து அதுக்கு பல ஆயிரங்கள் வாடகை கொடுத்து இந்த தொழிலை நடத்த ஆரம்பிச்சுட்டாங்க.
இந்த ஆர்கானிக் ஃபுட் விற்பனை செய்யறவங்க பெரும்பாலும் அரசின் தரச்சான்றிதழ் ஒண்ணு ரெண்டு பொருட்களுக்கு மட்டும் காண்பிச்சுட்டு அதனோட மத்த பொருட்களையும் சேத்து விக்கிறாங்க. எத்தனை பேரு இதைஎல்லாம் உன்னிப்பா கவனிச்சு வாங்கறாங்க? எல்லா கடைகளையும் அரசாங்கமோ அல்லது அரசின் விவசாயத்துறை சார்ந்த அதிகாரிகளோ கண்காணிக்கவும் முடியறது இல்ல..
சரி, உணவுகள் சாப்பிட ஆரம்பிச்சு 30 வருஷமோ 40 வருஷமோ இந்த செயற்கை உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகள் தெளித்த உணவுகளை தொடர்ந்து சாப்ட்டு இப்போ உடல் ஆரோக்கியத் துக்காக நான் ஆர்கானி ஃபுட்டுக்கு மாறிட்டேன்னு சொல்றது ஏற்கெனவே பலஆண்டுகள் கெமிக்கல்கள் ஊறிப்போன உடம்புக்கு பயனளிக்குமான்னு தெரியல.. இயற்கையா விவசா யம் பண்ணி விளையற பொருட்கள் உடலுக்கு நல்லதுதான். ஆனா இத்தனை வருஷங்களுக்கு பிறகு இந்த உணவு வகைகள் உண்பது என்பது கண்ணு போனப்பறம் சூரிய நமஸ்காரம் செய்யறதுக்கு சமம்னு தெரியுது..
எது எப்படியோ இன்னும் கொஞ்ச நாட்கள்லயோ, மாசங் களிலோ இந்த ஆர்கானிக் ஃபுட் மோசடிகள் பற்றியும் அது சார்ந்த புகார்கள், குற்றச்சாட்டுகள் பத்திரிகைகளில் பரபரப்பு செய்திகளாக வெளிவரக்கூடும்..
No comments :
Post a Comment