திருமணப் புடவை வாங்கும்போது, அவை குறைந்தது 2 ஆண்டுகளாவது அணிய வேண்டியிருப்பதால், தரமான புடவையாக பார்த்து வாங்குங்கள்.
அவை நீங்கள் அணியும் நகைகளுக்கு பொருத்தமாக இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.
உதாரணமாக, அரக்கு நிற ஜரிகை பார்டர் போட்ட பட்டுப்புடவை கறுப்பாக சற்று குண்டான பெண்களுக்கு பொருத்தமாக இருக்காது.
சிவந்த மேனியுடைய பெண்களுக்கு மிளகாய் பழ சிவப்பில் மெல்லிய ஜரிகை பார்டர் போட்ட பட்டுப்புடவை எடுப்பாக இருக்கும்.
போட்டோவில் பளிச்சென்று தெரியக்கூடிய வகையில் உடைகளைத் தேர்வு செய்யுங்கள். வாடாமல்லி, மயில் கழுத்து நிறம், தேன் நிறம் போன்ற வண்ணங்கள் ரிசப்ஷனுக்கு ஏற்றவை. பட்டு சேலைக்கு 'ரா' சில்க், பருத்தி வகையில் உள்ள சோளிகள் அணியலாம்.
மார்டனை விரும்புபவர்கள் தங்களுக்கு பொருத்தமான காக்ரா சோளி அணியலாம்.
No comments :
Post a Comment