WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Showing posts with label beauty tips. Show all posts
Showing posts with label beauty tips. Show all posts

Sunday 17 May 2015

முழங்கையை அழகுபடுத்த

ஒரு பெண் என்னதான் சிகப்பானவராக இருந்தாலும் முழங்கை மட்டும் காய்ப்பு காய்த்தால் அலங்கோலமாகத்தான் இருக்கும் சரியான பராமரிப்பு இல்லாததே இதற்குக் காரணம்.

முழங்கைகளை தினமும் குளிக்கும் போது தவறாமல் சோப்பு மற்றும் பீர்க்கங்காய் நாரால் கழுவவும். 

அதன்பிறகு தண்­ணீரால் சுத்தம் செய்துவிட்டு மாஸ்சரைசரால் நன்கு மாலீஷ் செய்யவும் எலுமிச்சைப் பழத்தை இரண்டாக நறுக்கி மேஜை மீது வைத்து அதன்மீது முழங்கைகளை சிறிது நேரம் ஊன்றிக் கொண்டிருக்கவும். 

இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முழங்கைகளில் உள்ள கருமை நிறம் மெல்ல மெல்ல மறைந்து விடும்.

ஆண், பெண் உதடுகள் அழகாக...அழகு குறிப்புகள்.,

பத்து கிராம் ரோஜா இதழ்களையும், பத்து கிராம் டீத்தூளையும், தண்ணீரில் கொதிக்க வைக்கவும்.
இதை ஆற வைத்து, உதடுகளுக்கு ஒத்தடம் கொடுத்தால், கறுத்த உதடுகள் சிவந்து காணப்படும்.
* பீட்ரூட் மற்றும் மாதுளம் பழத்தின் சாற்றை, முறையாக உதடுகளின் மேல் தடவி வர, உதடுகள் அழகாகும்.
* தினமும், உதடுகளின் மேல், நெய் அல்லது வெண்ணெய் தடவி வந்தால், உதடு கள் வறண்டு போகாமல் இருக்கும்.
* ஆலிவ் ஆயிலுடன், சிறிது தேனும், பன்னீரும் கலந்து தடவி வந்தால், சொர சொரப்பான உதடுகள் பொலிவு பெறும்.
* கொத்தமல்லி சாற்றை, தினமும் இரவு படுக்க செல்வதற்கு முன், உதடுகளில் தடவி வந்தால், உதடுகள் லிப்ஸ்டிக் உதவியின்றி இயற்கை சிவப்பழகு பெறும்.
* உதடுகளில் போட்ட லிப்ஸ்டிக்குடன் தூங்கச் செல்லக் கூடாது. முகத்தை நன்றாக கழுவிய பின்னரே, தூங்க செல்ல வேண்டும்.
* உதடுகளை கடிப்பது மற்றும் நாக்கினால் ஈரப்படுத்திக் கொண்டே இருப்பது போன்ற பழக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

ஆண், பெண் ...முடி உதிர்தல்.........நீங்க

* ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி உதிர்தல், நரைமுடி குறையும், செம்பட்டை முடி கருமையாகும், பொடுகு நீங்கும்.
* நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்திக் காட்டலாம். பேலன்ஸ்டு டயட் என்பது மிக மிக அவசியம். வைட்டமின்கள், தாதுப் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காய்கறி, பழங்களையும் அதிகளவில் சாப்பிட வேண்டும்.

திருமணப் புடவை:

திருமணப் புடவை வாங்கும்போது, அவை குறைந்தது 2 ஆண்டுகளாவது அணிய வேண்டியிருப்பதால், தரமான புடவையாக பார்த்து வாங்குங்கள். 
அவை நீங்கள் அணியும் நகைகளுக்கு பொருத்தமாக இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். 
உதாரணமாக, அரக்கு நிற ஜரிகை பார்டர் போட்ட பட்டுப்புடவை கறுப்பாக சற்று குண்டான பெண்களுக்கு பொருத்தமாக இருக்காது. 
சிவந்த மேனியுடைய பெண்களுக்கு மிளகாய் பழ சிவப்பில் மெல்லிய ஜரிகை பார்டர் போட்ட பட்டுப்புடவை எடுப்பாக இருக்கும்.
போட்டோவில் பளிச்சென்று தெரியக்கூடிய வகையில் உடைகளைத் தேர்வு செய்யுங்கள். வாடாமல்லி, மயில் கழுத்து நிறம், தேன் நிறம் போன்ற வண்ணங்கள் ரிசப்ஷனுக்கு ஏற்றவை. பட்டு சேலைக்கு 'ரா' சில்க், பருத்தி வகையில் உள்ள சோளிகள் அணியலாம். 
மார்டனை விரும்புபவர்கள் தங்களுக்கு பொருத்தமான காக்ரா சோளி அணியலாம்.

நீ சிரித்தால் சிரிப்பழகு:

சிரிக்கும் பொழுது முகத்துக்கு அழகு கூட்டுவது பற்கள் தான்.
பற்களில் எப்பொழுதும் பிளாக்யு என்ற மெல்லிய கிருமிகள் இருக்கும். இதனை தடுக்க தினமும் உணவு சாப்பிட்ட பின்பு வாயினை நன்றாக கொப்பளிக்கவும். இரண்டு முறை பல் துலக்கவும். 
இரவில் வெந்நீரில் உப்பு போட்டு வாய்கொப்பளிக்கவும். இதன் மூலம் பல்லின் இடுக்கில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும். 
அதிக சூடான உணவுகளோ அல்லது அதிக குளிர்ச்சியான உணவுகளையும் சாப்பிட வேண்டாம்.

முடி கொட்டுவது இயல்பானதா?

தலை முடியின் வளர்ச்சிக் காலம் 2 முதல் 6 ஆண்டுகள். ஒவ்வொரு முடியும் 1 செ.மீ. அளவுக்கே வளரும். மண்டை ஓட்டில் முடி முளைத்து, 2 அல்லது 3 மாதங்களில் தானாக உதிர்வது இயல்பானது. முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி முளைக்கும்.
ஆனால், சில காரணங்களால் நாள் ஒன்றுக்கு 20 முடி கொட்டினால் அலட்சியமாக இருக்காதீர்கள். காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெறும் நிலையில் முடி கொட்டுவதைத் தடுக்க முடியும்.
முகத் தோற்றத்துக்கு அழகு சேர்ப்பது முடி. முடி கொட்டுதல் பிரச்சினையால் அவதிப்படுவோருக்கு மன உளைச்சல் ஏற்படுவது இயல்பானது.
குறிப்பாக ஆண்களுக்கு இளம் வயதிலேயே முடி அதிகமாகக் கொட்டி, வழுக்கை ஏற்படும் நிலையில் முதுமைத் தோற்றம் உருவாகி விடும். இதனால் அவர்கள் நண்பர்களின் கிண்டலுக்கு ஆளாவதும் உண்டு.
இந் நிலையில் முடியின் இயல்பான வளர்ச்சி, முடி கொட்டும் பிரச்சினை ஏற்படுவது ஏன், முடி கொட்டுவதைத் தடுக்க சிகிச்சை உண்டா என்பது குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்வதன் மூலம் தகுந்த நிவாரணத்தைப் பெற முடியும்.

பருக்களையும், பருக்களால் வந்த தழும்புகளையும் நீக்க...

உடலில் உள்ள நச்சுக்களை இயற்கையான வழியில் நீக்க சிறந்த வழி க்ரீன் டீ அருந்துதலே ஆகும். 
தினமும் ஒன்று அல்லது இரண்டு கப் க்ரீன் டீ அருந்தி வந்தால், முகத்தில் உள்ள கருப்பான தழும்புகள் மறைந்துவிடும்.
சிறிது சமையல் சோடாவை எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது தண்ணீரை சேர்த்து பசை போல கலக்கவும். 
இதனை முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் இருக்க விடுங்கள். 
பிறகு சற்று வெதுவெதுப்பான நீரில் முகத்தை நன்கு கழுவிடுங்கள். இதனாலும் பருக்களும், தழும்புகளும் மறையக்கூடும்.

வீட்டிலேயே காணப்படும் 5 மிகச்சிறந்த மேக்கப் நீக்கும் பொருட்கள்

ஒளி பொருந்தியவாறும், பார்வைக்கு பளிச்சிடும் வகையிலும இருக்கும் சருமத்தை பெற வேண்டுமானால், அதை நாம் கவனமாக பாதுகாக்க வேண்டும். 
இவ்வாறு சருமத்தை பாதுகாக்கும் பொருட்களை கவனத்தில் வைத்திருப்பதும், பராமரிப்பதும் இன்றியமையாத விஷயமாகும்.
தேங்காய் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய்
சோயா பால் மற்றும் வாழை
வெள்ளரிக்காய்
பாதாம்
மேற்கூறிய பொருட்களை நீங்கள் உங்கள் வீட்டிலேயே கண்டறிய முடியும் என்பதால், இவற்றை எளிதில் முயற்சி செய்து பார்க்கலாம். அதன் பின்னர், நீங்கள் புதிதாக மேக்கப் நீக்கும் சாதனங்களை வாங்க வேண்டிய அவசியம் கூட இருக்காது!

வார இறுதியிலாவது சருமத்தை பாதுகாக்க விரும்புறீங்களா?

அப்ப இத ட்ரை பண்ணுங்க... 
காபி ஸ்கரப் 1/2 கப் 
காபி தூள், 1/2 கப் 
சர்க்கரை, 1 டேபிள் ஸ்பூன் 
ஆலிவ் ஆயில், 2 டேபிள் ஸ்பூன் 
தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து, அதனை உடல் முழுவதும் தடவி ஸ்கரப் செய்தால், அது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிடுவதோடு, அதில் உள்ள எண்ணெய்கள் நல்ல மாய்ஸ்சுரைசராகவும் இருக்கும்.
Related Posts Plugin for WordPress, Blogger...