தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.அவர் தற்போது நடித்துவரும் சீமராஜா படம் முடிந்தவுடன் அடுத்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்க ஏ.ஆர்.ரகுமான்இசையமைக்கும் படத்தில் நடிக்கிறார்..
அதைத் தொடர்ந்து அவர் விக்னேஷ் சிவன் படத்தில் நடிப்பதாக இருந்தது..இந்நிலையில் அடுத்து அவர் இயக்குனர் ராஜேஷ்.எம் படத்தில் நடிப்பதாகவும்,அதை ஸ்டுடியோகீரின் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பதாகவும்,அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது..ராஜேஷ்.எம் திரைக்கதை எழுதிய "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
No comments :
Post a Comment