பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன. பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்பரே. இதில் பலவகையான மருத்துவ குணங்கள் உள்ளன. இது ஒரு சிறந்த கிருமி நாசினி. வியர்வையை பெருக்கும், உடற்சக்தியை அதிகப்படுத்தும், தாய்பாலை விருத்தி செய்யும், சளியை கரைத்து சுவாச தடையை நீக்கும், ஜீரண சக்தியை அபிவிருத்தி செய்யும், ரத்த கொதிப்பை தணிக்கும். உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும்.
இதய அடைப்பை நீக்கும். நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்கும். ஆண்களின் ஹார்மோன் உற்பத்தியைப் பெருக்கி வீரியம் அதிகரிக்கக் கூடியது பூண்டு. பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் வெள்ளணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது. உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. ரத்தத்தை தூய்மை படுத்துகிறது.
உடல் பருமன் குறைக்க உறுத்துணை புரிகிறது. உடலில் நல்ல கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது. ரத்த குழாய்களில் கொழுப்பு படிந்து அடைக்காமல் தடுக்க உதவிபுரிகிறது. வாயுத்தொல்லையை ஏற்படாமல் தடுக்கிறது. அஜீரணக் கோளாறுகளை ஏற்படாமல் தடுக்கிறது. புளிப்பு சேருவதால் உண்டாகும் வயிற்று எரிச்சலைபோக்குகிறது. வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். குடலில் உள்ள புழுக்களை அகற்றுகிறது. மலச்சிக்கலைப் போக்கி மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும். வியர்வையை பெருக்கி கழிவுகளை வெளியேற்றுகிறது. பித்தம் ஏற்படாமல் தடுக்கிறது.
ஒற்றைத்தலைவலியை போக்குகிறது. கருப்பையை வலுப்படுத்தும். சோர்வை போக்கி உடற் சக்தியை அதிகப்படுத்துகிறது. மூளையை பலம்பெறச் செய்கிறது. சளித்தொல்லையில் இருந்து பாதுகாக்கிறது. தாய்ப்பாலை விருத்தி செய்ய செய்கிறது. கைகால் மூட்டுவலி மற்றும் முடக்கு வாதம் ஏற்படாமல் தடுக்கிறது. தாதுவை விருத்தி செய்யும். நீரழிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே நல்லது.
நாட்டுப்பூண்டையே அதிகமாக பயன்படுத்துங்கள். சைனா பூண்டை விட நாட்டுப்பூண்டிலேயே அதிக சத்து உள்ளது. பூண்டை மறைமுகமான விதத்தில் பூண்டு ஊறுகாய், பூண்டு மாத்திரை போன்ற வடிவில் சாப்பிடுவதை விட நேரடியாக சாப்பிடுவதே நல்லது. பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும். பூண்டின் காரம் போக சிறிது மோர் அருந்தலாம் இல்லை என்றாலும் ஒன்றும் பாதிப்பில்லை.
No comments :
Post a Comment