தேவையான பொருட்கள் :
பால் - 1 லிட்டர்.
கல்கண்டு - 100 கி.
ஏலக்காய்த்தூள் - 5கி.
பாதாம் பருப்பு - 5கி
பிஸ்தா பருப்பு - 5கி
வெள்ளரி விதை - 5கி
சீதாப்பழம் - 2.
செய்முறை :
பாலை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி நன்கு கிளறிக் கொண்டே காய்ச்சவும். தீயை குறைத்து வைக்கவும். பால் பாதியளவிற்கு சுண்டியவுடன் அதில் கல்கண்டு சேர்த்து கிளறவும். சக்கரை கரைந்தவுடன் கீழே இறக்கி வைத்து ஆற விடவும். பாதாம், பிஸ்தா, வெள்ளரி விதை அனைத்தையும் சன்னமாக சீவி அதில் சேர்க்கவும். ஏலக்காய் பொடியும் சேர்க்கவும். சீதாப்பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு பழக்கூழை மட்டும் பாசந்தியுடன் சேர்த்து கலக்கவும்.சில்லென்று பரிமாறவும்.
இதன் கலோரி அளவு 460.
நன்றி: பவள சங்கரி திருநாவுக்கரசு.
No comments :
Post a Comment