வரப் போகிறதா...? கூகிளுக்கு போட்டியாக பேஸ்புக் தேடல் எந்திரம்...
கூகிள் நிறுவனம் பல சேவைகளை வழங்கி வந்தாலும் தேடல் எந்திரம்தான் (Search Engine) அவர்களின் அடிப்படை. யாகூ, பிங் என தேடல் எந்திரங்கள் போட்டி போட்டாலும் கூகிளை அசைக்க முடியவில்லை.
பேஸ்புக் தேடல் எந்திரம் துவக்கலாம் என்பது நீண்ட காலமாக வதந்தியாகவே இருக்கிறது. இப்போது அந்த வதந்திக்கு வலு சேர்க்கும் மற்றொரு தகவல்.
பேஸ்புக் சில IOS (Apple IPhone) பயனர்களுக்கு, Status, Photo/Video போடுவது போன்று "Add Link" என புதியதொரு வசதியை சோதனை முயற்சியாக வழங்கி உள்ளது.
இந்த வசதி மூலம் பயனர்கள் பேஸ்புக் உள்ளேயே வேண்டியவற்றை தேடி முடிவுகளை நாம் இடும் ஸ்டேடஸ்-களில் இணைத்துக் கொள்ள முடியும்.
இந்த வசதி அமெரிக்காவில் உள்ள சில பயனர்களுக்கு மட்டும் சோதனைக்காக வழங்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் படிப்படியாக எனைவருக்கும் வழங்கப்படும் எனவும் பேஸ்புக் அறிவித்து உள்ளது.
தேடல் முடிவுகளை தங்களிடம் பகிரப்பட்டு (Share) உள்ள 1 டிரில்லியன் பக்கங்களில் இருந்து வழங்குவதாக கூறி உள்ளனர்.
இது பேஸ்புக் தேடல் எந்திரத்திற்கான முன்னோட்டமா? என இணைய வல்லுனர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கூகிள் தேடல் எந்திரம் நிரலிகளால் தானியங்கியாக செயல்படுவது. பேஸ்புக் தேடல் எந்திரம் அளித்தால் தங்களிடம் ஷேர் செய்யப்பட்ட, லைக் செய்யப்பட்ட இணைய பக்கங்களில் இருந்து முடிவை காட்டுவார்கள். அது கூகிளை விட மேம்பட்டதாக, துல்லியமானதாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.
கூகிளே சிறப்பாகத்தான் உள்ளது. பேஸ்புக் தேடல் எந்திரம் வந்தால் இணையம் மேலும் பயனுள்ளதாகும். எளிமையாகும்.
Thanx : techmalar.com
No comments :
Post a Comment