இந்தநிலையில் இந்த சட்டத்தை திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.இதுதொடர்பாக மத்திய சட்ட ஆணையம், நீதிபதி மாலிமாத் குழு ஆகியவை மத்திய அரசுக்கு பரிந்துரைகள் அளித்துள்ளன. அந்தப் பரிந்துரைகளின்படி, நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் புகார்தாரரும், குற்றம்சாட்டப்பட்டவரும் வழக்கில் சமரசம் செய்து கொள்ளும் வகையில், அதை சமரசத்துக்குட்பட்ட குற்றம் என திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில்," இந்திய தண்டனைவியல் சட்டத்தின் (ஐ.பி.சி.) 498ஏ பிரிவை, சமரசத்துக்குட்பட்ட குற்றம் என திருத்தம் செய்வதற்கான மத்திய அமைச்சரவையின் வரைவு, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வரைவு மசோதாவை சட்ட அமைச்சகம் தயாரிக்கும்.தற்போதைய சட்டத்தில், பொய்யான புகார் அளிக்கப்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டால், புகார் அளித்தவர்களுக்கு ரூ.1,000 மட்டுமே அபராதம் விதிக்க முடியும். இந்தத் தொகையை ரூ.15,000 ஆக அதிகரிக்கும் வகையில் அரசு திருத்தம் செய்ய இருக்கிறது. அத்துடன், தண்டனை விதிக்கப்படுபவர்கள் இழப்பீடு வழங்கும்பட்சத்தில் அவர்களுக்கு சிறைத் தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் திருத்தம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது ,"என்று தெரிவித்தன.
வரதட்சிணை கொடுமை எதிர்ப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்ய இருப்பதற்கு உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,"தற்போதைய சட்டத்தின் வாயிலாக பெண்களுக்கு நிவாரணமும், பாதுகாப்பும் கிடைக்கிறது.இதுவே தொடர வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றம் என்பது மனித உரிமை மீறலாகும். இதில் எந்த சமரசமும் செய்யக் கூடாது. மத்திய அரசின் முடிவை எதிர்க்கிறேன் என்றார்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு என்ன? கடந்த, 2010ல், வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்கு ஒன்றில்,அம்சங்கள்: *ஆதாரமின்றி, வரதட்சணை கொடுமை வழக்கில் யாரையும் கைது செய்யக்கூடாது. *வரதட்சணை கொடுமை வழக்கில், சம்பந்தபட்ட பெண்ணின் கணவர் மட்டுமல்லாமல் அவரின் உறவினர்கள், தாத்தா, பாட்டி, வெளிநாடுகளில் இருக்கும் சகோதர, சகோதரிகள் கூட கைது செய்யப்படுகின்றனர்; இது, கண்டிக்கத்தக்கது.
No comments :
Post a Comment