WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Showing posts with label Indian Laws. Show all posts
Showing posts with label Indian Laws. Show all posts

Friday 19 May 2017

Community, Income, and Residential Certificates சாதி, வருமானம், மற்றும் இருப்பிடச்​ சான்றிதல்

Community, Income, and Residential Certificates.


சாதி,வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள் பெரும்பாலும் பள்ளி மாணவர்களுக்கு அதிக அளவில் தேவைப்படுவதால், இம்மூன்றையும் ஒரே விண்ணப்பத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இருப்பினும் இவை மூன்றும் எவ்விதத்திலும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. நாம் இங்கு இம்மூன்றையும் தனித்தனியாக எப்படிப் பெறுவது என்பதைத் தனித்தனித் தலைப்புக்களில் பார்ப்போம். வருமானச் சான்றிதழ், பள்ளி கல்லூரியில் சேர்வதற்கும், கல்விக்கடன்கள் பெறுவதற்கும் மாணவர்களுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும் அதிக அளவில் பயன்படுகின்றன. மேலும், வங்கியில் கடன் பெற, மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவித்திட்டம், இரண்டு பெண் குழந்தைகள் நலத்திட்டம் உள்ளிட்ட அரசின் நல உதவிகள் பெறுவதற்கும், நடுவண் அரசுப்பணிகளில் நேரடியாக அல்லது ஒன்றிய அரசுப்பணியாளர் தேரவானையத் தேர்வுகள் வாயிலாகப் பணியமர்த்தப்படுவதற்கும் இன்றியமையாத ஒன்றாகிறது.


இந்த வருமானச் சான்றிதழ் பெறுவதற்கு அதற்கென உள்ள விண்ணப்பத்தில் சரியான நீதிமன்ற வில்லைகள் ஒட்டி, அதனுடன் மனுதாரர் வாக்குமூலத்தையும் இணைத்து வட்டாட்சியருக்கு விண்ணப்பிக்கவேண்டும்.


இந்த விண்ணப்பத்தை இங்கே பெறலாம்: http://www.tn.gov.in/appforms/cert-income.pdf


ஆண்டு வருமானம் பன்னிரெண்டாயிரத்திற்குக் குறைவாக உள்ளவர்கள் ரூபாய் இரண்டுக்கும், அதற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் ரூபாய் பன்னிரெண்டுக்கும் நீதிமன்ற வில்லை ஓட்ட வேண்டும். தமிழக அரசுப் பணியாளர்கள் இந்த முத்திரை வில்லைகளை ஓட்ட வேண்டியது இல்லை.வட்டாட்சியர் இம்மனுவைத் தகுந்த விசாரணைக்கு உட்படுத்தி, மனுதாரரின் தகவல்கள் சரியானவை என்று உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு சான்று வழங்குவார். ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு இலட்சத்திற்குக் குறைவாக இருந்தால் மண்டலத் துணை வட்டாட்சியர்களும், அதற்கு மேல் ரூபாய் மூன்று இலட்சம் வரை வட்டாட்சியரும் சான்று வழங்குவர். இச் சான்றிதழுக்காக அரசு அளித்துள்ள விண்ணப்பப் படிவமும் முழுமையாக இல்லை. அதில் இன்னும் கூடுதல் வினாக்கள் இடம்பெறவேண்டும். உதாரணமாக, விண்ணப்பதாரரின் குடும்பத்தில் வேறு எவருக்கேனும் வருமானம் இருந்தால் அதைக் குறிக்க எந்த வசதியும் இல்லை. குறைந்தது, 'கூடுதல் தகவல்களுக்கு கூடுதல் தாள்கள் இணைக்கவும்' என்ற குறிப்பாவது இருக்க வேண்டும், அல்லது விளக்கமாக, குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களில் வருமானம் பெறும் உறுப்பினர்களின் பெயர்கள், அவர்களின் வயது, வருமானத்திற்கான காரணிகள் என்று சில கேள்விகள் இடம் பெறலாம். இதனால், பல விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதிலிருந்து, சான்றிதழ் பெறத் தேவையான, மேலும் விவரங்களை அளிப்பது வரை மிகுந்த சிரமப்படுகிறார்கள்.


வருமானம் என்பது மாறும் தன்மையுடன் இருப்பதால், வருமானச் சான்றிதழ் ஒரு நிலையான சான்றிதழ் அல்ல. எப்பொழுது என்ன காரணத்திற்காக வருமானச் சான்றிதழ் வாங்கப்படுகிறதோ, அப்பொழுது அந்தக் காரணத்திற்காக மட்டும் அதைப் பயன்படுத்த வேண்டும். பிறகு மீண்டும் வேண்டுமென்றால், இன்னொரு முறை விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளவேண்டும்.


என்னைப் பொறுத்தளவில், வருமானச் சான்றிதழ் வாங்கும் தேதி, வருமானம் உள்ளிட்ட தகவல்களை, விண்ணப்பதாரரின் ஏதாவது ஒரு பதிவேட்டில் பதிவுசெய்ய வேண்டும். உதாரணமாக, குடும்ப அட்டையில் பதிவுசெய்யலாம். ஏனென்றால், பொதுமக்களில் சிலர், அரசிடம் ஏதாவது உதவி தேவைப்பட்டால், குறைந்த அளவு வருமானத்தையும், வங்கியில் கடன் வாங்குவது உள்ளிட்ட வேலைகளுக்கு அதிக வருமானத்தையும் குறிப்பிட்டுச் சான்றிதழ் கேட்கின்றனர். இது அரசை முற்றிலும் ஏமாற்றுவதோடு இல்லாமல், வங்கி உள்ளிட்ட நிறுவனங்களையும் ஏமாற்றுவதாகும். வருமானச் சான்றிதழ் வழங்கும் போது, அதைத் தகுந்த வகையில் பதிவு செய்யும்பொழுது, அதே நபர் மீண்டும் வருமானச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால், முந்தைய விண்ணப்பத்திற்கும் தற்போதைய விண்ணப்பத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை அறிந்து, அதற்கான காரணங்களைக் கேட்டறிந்து, ஏமாற்றுவதைத் தவிர்க்கலாம்.

Sunday 22 January 2017

இந்திய சட்டத்தின் அட்டவணை Schedule of Indian law


இந்திய சட்டத்தின் அட்டவணை


இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 12 அட்டவணைகள் உண்டு. அவை

முதல் அட்டவணை - இந்திய எல்லைகளைப் பற்றியது.

2-வது அட்டவணை - சம்பளம் மற்றும் இதரப் படிகள் ( குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள்).

3- வது அட்டவணை - பதவிப் பிரமாணம், ரகசியக் காப்பு பிரமாணம்.

4 -வது அட்டவணை - மாநிலங்களவையின் பிரதிநிதித்துவம்.

5, 6-வது அட்டவணைகள் அட்டவணைப் பகுதிகளை நிர்வாகம் செய்தல்.

7 - வது அட்டவணை - பிராந்திய மொழிகள்.

9 - வது அட்டவணை - நில உச்சவரம்பு, ஜாமீன்தரி ஒழிப்பு.

10 - வது அட்டவணை - கட்சி தாவல்தடை , (52 - வது சட்டதிருத்தம்).

11 - வது அட்டவணை - பஞ்சாயத்து ராஜ் (73 - வது சட்டதிருத்தம்).

12 - வது அட்டவணை - நகர் பாலிகா (74 - வது சட்டதிருத்தம்)நன்றி

Sunday 8 January 2017

பெண்களும் குற்றவியல் சட்டமும் Women's law in India


   பெண்களும் குற்றவியல் சட்டமும் 


பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகிக் கொண்டே போகிறதால், பெண்களின் உடல், திருமணம், மதிப்பு, பெண்மை போன்றவற்றை பாதுகாக்கும் வகையில் இது தொடர்பான குற்றங்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 1860 பல பிரிவுகளால் தண்டனை வழங்க வகை செய்துள்ளது.



இந்திய தண்டனைச் சட்டத்தில் அத்தி யாயங்கள் 16,20 மற்றும் 22 ஆகியவை பெண்களுக் கெதிரான குற்றங்கள் பற்றி விவரிக்கின்றன. பிரிவு 304(தீ) மணக்கொடை மரணங்கள் பற்றியது

1) தீக்காயங்கள் அல்லது உடற்காயங்கள் அல்லது சாதாரணமான சூழலில் ஏற்படும் மரணம்

2) அம்மரணம் திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்குள் ஏற்பட்டால் 3) கணவனாலோ அல்லது அவரது உறவினர்களாலோ அப்பெண் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தால்

4) மணக்கொடைக்காக அல்லது அது தொடர்பாக மேற்படி வன்கொடுமை செய்யப்பட்டிருந்தால்

5) அக்கொடுமை அப்பெண் இறப்பதற்கு முன்பு ஏற்பட்டிருந்தால், அந்த மரணம் மணக்கொடை மரணம் எனக் கருதப்பட்டு குற்றவாளிக்கு குறைந்தபட்ச தண்டனையாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ஆயுள் வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனை வழங்கப்படும். குறைந்தது ஏழு ஆண்டு சிறைத் தண்டனை என்பதே குற்றத்தின் கடுமையை சுட்டிக் காட்டுகிறது.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 312 முதல் 318 வரை கருக்கலைப்பு, பிறக்காத குழந்தைக்கு காயம், குழந்தையை கவனிப்பாரற்று விட்டு விடுதல் போன்ற குற்றங்களை விவரிக்கிறது. அதற்கான தண்டனை களையும் விவரிக்கிறது.

கருக்கலைப்பு தடுப்புச் சட்டம் 1971 மற்றும் கருச்சோதனை தடுப்புச் சட்டம் 1994 இயற்றப்பட்டு கருக்கலைப்பு சிசுக்கொலை குற்றங்களாக கருதப்பட்டு தண்டனை தர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் 354-இன்படி ஒரு பெண்ணின் பெண்மைக்கு களங்கம், ஊறு விளைவித்தால் இரண்டாண்டு வரை நீடிக்கக் கூடிய சிறைத்தண் டனையோ, அபராதமோ அல்லது இரண்டும் விதித்து தண்டனை தரப்படும்.

இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 366-இன்படி ஒரு பெண்ணை கட்டாயத் திருமணத்திற்காகவோ, வன் புணச்சிக்காகவோ கடத்திச் சென்றால் பத்தாண்டு வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனைக்கு ஆளாக நேரிடும்.

பதினெட்டு வயதுக்கு குறைந்த சிறுமியை வன் புணர்ச்சிக்காக கடத்திச் சென்றால் பத்தாண்டு வரை சிறைத் தண்டனைக்கு ஆளாக நேரிடும்.

வெளிநாட்டிலிருந்து விபச்சாரத்திற்காக 21 வயதுக்கு குறைந்த பெண்ணை இறக்குமதி செய்தால் பத்தாண்டு வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்க இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 366(ஆ) வகை செய்கிறது.

18 வயதுக்கு குறைந்த பெண்ணை விபச்சாரத்திற்கு விற்றால் பத்தாண்டுவரை சிறைத்தண்டனை என இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 372 கூறுகிறது., 18 வயதுக்கு குறைந்த பையன் ஆனாலும் திருமணம் ஆன பெண் ஆனாலும் இச்சட்டப்பிரிவு பொருந்தும்.

அதைப்போல விபச்சாரத்திற்காக மைனர்களை வாங்கினாலும் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 373 இன் படி குற்றமாகும் .

பெண்களுக்கெதிரான வன்புணர்ச்சி பற்றி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 375 முதல் 376ஞி. 377 மற்றும் 509 விவரிக்கின்றன. ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக வன்புணர்ச்சி செய்தால் குறைந்த பட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது பத்தாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய அல்லது ஆயுள் வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனை வழங்கப்படும் என பிரிவு 376 கூறுகிறது., பாதிக்கப்பட்ட பெண் 16 வயதுக்குக் கீழ் இருந்தால் அவளது விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் குற்றமே.

வன்புணர்ச்சியால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும் அடையாளத்தையும் வெளிப்படுத்தினால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 228(அ)ன்படி இரண்டாண்டுகள் வரை நீடிக்கக் கூடிய தண்டனைக்கு ஆளாக நேரிடும். வன்புணர்ச்சிக்கு ஆளான பெண்ணின் நலனை பாதுகாக்கவே இந்த சட்டப்பிரிவு.

வன்புணர்ச்சி வழக்குகள் திறந்த நீதிமன்றத்தில் நடைபெறக்கூடாது. ரகசியமாக தனி அறையிலேயே நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவியல் காயங்களுக் கான இழப்பீடு வாரியம் ஒன்று அரசியல் சட்டப்பிரிவு 38(1) அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு பல ஆண்டுகள் ஆகியும் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் கவலைக்குரிய விசயமாகும்.

திருமணம் தொடர்பான குற்றங்கள் பற்றி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 493 முதல் 498ல் விவரிக்கிறது.

தனது மனைவியல்லாத இன்னொரு பெண்ணுடன் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து ஏமாற்றி உடலுறவு கொள்வதை குற்றமெனக் கூறுகிறது பிரிவு 493.

தனது வாழ்க்கைத் துணை உயிரோடு உள்ள காலத்தில் இன்னொரு வரை மணப்பது பிரிவு 494,495 இன் கீழ் குற்றமாகும்.

மோசடி எண்ணத்துடன் திருமணம் புரிவது பிரிவு 496ன் கீழ் குற்றமாகும்.

கள்ளத்தொடர்பு கொண்டு வாழுதல் பிரிவு 494-ன் கீழ் குற்றமாகும்.

குற்ற நோக்கோடு ஒரு பெண்ணை கவர்ந்திழுத்தல் அலலது கூட்டிச் செல்லுதல் அல்லது அடைத்து வைத்தல் பிரிவு 498ன் கீழ் தண்டனைக்குரியது.

திருமணமான பெண்ணை கணவனோ அவரது உறவினர்களோ மணக்கொடைக்காக வன்கொடுமை செய்தால் பிரிவு 498(அ)ன் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய வர்களாவர். இச்சட்டப்பிரிவு 1983-இல் இயற்றப்பட்டது.

ஒருவர் ஒரு பெண்ணின் பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு வார்த்தை யாலோ, ஒலி எழுப்பியோ, சைகையின் மூலமோ அல்லது ஏதேனும் பொருளை வெளிப்படுத்தினாலோ அல்லது அப்பெண்ணின் தனிமையில் குறுக்கிட்டோலோ பிரிவு 509ன் கீழ் குற்றம் புரிந்தவராவார். ஓராண்டு வரை சிறைத்தண்டனையோ, அபராதமோ, அல்லது இரண்டும் விதித்து தண்டிக்கப்படுவார்.

Sunday 1 January 2017

தகவல் அறியும் உரிமை சட்டம் - தெரிந்தவைகளும், தெரியாதவைகளும் : 'RIGHT TO INFORMATION ACT' - KNOWN AND UNKNOWN!

"தகவல் அறியும் உரிமை சட்டம் "- தெரிந்தவைகளும், தெரியாதவைகளும் : 'RIGHT TO INFORMATION ACT' - KNOWN AND UNKNOWN!


அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நிலையில் கொண்டு வரப்பட்டதுதான் இந்தியத் தகவல் உரிமைச் சட்டம்-2005.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நமக்குச் சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. அந்த அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நோக்கத்துடன் 2005 ஆம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த உரிமையை பேச்சுரிமையின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்திருக்கிறது. இந்தச் சட்டத்தின்படி மத்திய, மாநில அரசுகள் மற்று அரசு சார்பு நிறுவனங்களிடமிருந்து எந்த மாதிரியான தகவல்களையும் பெற முடியும். அரசுத் துறைகளிடம் தனியார் நிறுவனங்களின் விவரங்கள் இருந்தால் அதையும் இச்சட்டத்தின் கீழ் பெற முடியும். இந்தியக் குடியுரிமை பெற்ற எவரும் இந்தச் சட்டத்தின் வழியாக தகவல்களைக் கோர முடியும். இதன் வழியே 1. அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற நிலையைக் கொண்டு வருதல் 2. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் செயலாற்றுபவர்களிடையே பொறுப்புடமையை மேம்படுத்துதல்.

3. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயலாற்றல் குறித்த தகவல்களைப் பெற விரும்பும் குடிமக்களுக்கு, அதை அளிக்க வகை செய்தல். இதன் மூலம் லஞ்சம், ஊழல் போன்றவற்றை ஒழித்தல்.

4. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களைப் பொறுப்புடையதாக ஆக்குவதோடு உள்ளார்ந்த தகவல்களின் ரகசியத்தைக் கட்டிக் காத்தல். போன்றவை முக்கிய நோக்கங்களாக இருக்கின்றன.

தகவல் என்றால் என்ன?

தகவல் என்பது எதைக் குறிப்பிடுகிறது? என்கிற எண்ணம் நமக்கு வரலாம். தகவல் என்பது பதிவேடுகள், ஆவணங்கள், கடிதங்கள், இ-மெயில்கள், கருத்துகள், அறிவுரைகள், பத்திரிகை வெளியீடுகள், சுற்றறிக்கைகள், உத்தரவுகள், ஒப்பந்தங்கள், மாதிரிகள் உள்ளிட்ட அனைத்துமே “தகவல்” என்ற பிரிவின் கீழ் வைக்கப்படுகின்றன. இதன்படி கீழ்காணும் அனைத்தும் தகவல்கள்தான்.

1. அரசிடமுள்ள ஆவணங்களில் இருந்து குறிப்புகள் எடுத்தல்

2. அரசின் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை நகல் எடுத்தல்

3. அரசின் பணிகளைப் பார்வையிடுதல்

4. அரசின் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளைப் பார்வையிடுதல்

5. சான்றளிக்கப்பட்ட மாதிரிகளைப் பெறுதல்

6. தேவையான தகவலைத் தேவைப்படும் வடிவத்தில் பெறுதல்

தகவல்களைப் பெறுவதன் மூலம் என்ன நன்மைகள் கிடைக்கப் போகிறது? என்கிற கேள்வி நமக்குத் தோன்றலாம். ஒரு அரசு நிறுவனத்தில் இருந்து எந்தத் தகவலையும் பெற முடிகிறது. இதன் மூலம் அரசு நிர்வாகத்தின் பொறுப்பும், வெளிப்படையான செயல்களும் அதிகரிக்கிறது. இதன் மூலம் ஓரளவு லஞ்சம் மற்றும் ஊழல் போன்றவை குறைய வாய்ப்பிருக்கிறது. அரசு எப்படிச் செயல்படுகிறது என்பதையும் திட்டங்கள் அனைத்தும் மக்களை முறையாகப் போய்ச் சேருகின்றனவா என்பதையும் நாம் இந்தத் தகவல் உரிமைச் சட்டத்தின் வழியாகத் தெரிந்து கொள்ள முடியும். மேலும் குறைகள் இருப்பின் அதைச் சரி செய்ய வேண்டும் என்கிற பொறுப்பும் அரசுக்கு ஏற்படும். இதன் மூலம் இந்திய அரசியல் அமைப்பில் மக்கள் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்துக் கொள்ள ஒரு வழி ஏற்படுகிறது.

தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 15-ன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத் தகவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் இச்சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது இந்த ஆணையம், ஒரு மாநில தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் இரண்டு மாநில தகவல் ஆணையர்களின் கீழ் கடந்த 07.10.2005 ஆம் தேதி முதல் இயங்கி வருகிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 5, உட்பிரிவு 1-ன்படி, தகவலுக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு, தகவல் அளிப்பதற்காக ஒவ்வொரு அலுவலகத்திலும், பொதுத்தகவல் அலுவலர் என்கிற பொறுப்பில் ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ளார். மேலும் உட்பிரிவு 2-ன்படி, தகவல் கோரும் விண்ணப்பங்களை அல்லது மேல்முறையீடுகளைப் பெற்று, அவற்றைப் பிரிவு 19, உட்பிரிவு 1-ன்படி, பொது தகவல் அலுவலருக்கோ அல்லது மாநில தகவல் ஆணையத்திற்கோ அனுப்பி வைப்பதற்காக அலுவலர் ஒருவர் ஒவ்வொரு உட்கோட்ட அல்லது உள்மாவட்ட நிலையில் உதவி பொதுத்தகவல் அலுவலராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். தலைமைச் செயலகம், துறைத்தலைவர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்கள் போன்றவற்றில் தகவல் பெறுவதற்காக பொதுத்தகவல் அலுவலர், மேல்முறையீட்டு அலுவலர் போன்றவர்களின் அஞ்சல் முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்றவைகள் தரப்பட்டுள்ளன. இவை குறித்த சில விபரங்கள் அரசின் இணைய தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 6-ன்படி, தகவல் பெற விரும்புபவர், ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில், ஒரு வெள்ளைத் தாளில் எழுத்து வடிவிலோ அல்லது மின்னணு வழியிலோ, உரிய அலுவலகத்திலுள்ள பொது தகவல் அலுவலர் அல்லது உதவிப் பொதுத் தகவல் அலுவலர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். அதனுடன், இதற்கான கட்டணமாக ரூ.10/- (ரூபாய் பத்து மட்டும்) வரைவோலை (Demand Draft) அல்லது அரசு கருவூல சீட்டு (Treasury Challan) மூலம் செலுத்தி அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் ரூ.10/-க்கான நீதிமனற வில்லை (Court Fee Stamp) அந்தப் படிவத்தில் ஒட்டிவிட வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் ரூ.10/- செலுத்திய விபரம் தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் தேவைப்படும் தகவலின் விபரங்களை எந்த வடிவத்தில் வழங்க வேண்டும் என்பது குறித்த தகவலுடன் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து வடிவில் விண்ணப்பம் செய்ய முடியாத நிலையில், அதனை எழுத்து வடிவில் செய்திட அனைத்து உதவிகளையும் பொதுத் தகவல் அலுவலர் அல்லது உதவிப் பொதுத் தகவல் அலுவலர் செய்திட வேண்டும். தகவலுக்காக விண்ணப்பம் செய்கிற விண்ணப்பதாரர்களிடம் அந்த தகவலைக் கோருவதற்கான காரணத்தைக் கேட்டல் மற்றும் அவரைத் தொடர்பு கொள்வதற்குத் தேவையான விபரங்களைத் தவிர, தனிப்பட்ட சொந்த விவரங்கள் எவற்றையும் கோருதல் கூடாது. ஒரு தகவலுக்காக அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகம் ஒன்றிடம் விண்ணப்பம் செய்யப்படுகிற நிலையில், அந்தத் தகவல் பிற அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களில் வைத்திருக்கப் பட்டதாக அல்லது அதன் உரிய பொருள் பிற அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயற்பணிகளுடன் மிக நெருங்கிய தொடர்புடையதாக இருக்கும் போது, அந்த விண்ணப்பத்தினை அல்லது அதன் உரிய பகுதியை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு மாற்றல் செய்து அனுப்பி விட வேண்டும். மாற்றல் செய்து அனுப்பப்பட்ட விபரத்தை விண்ணப்பதாரருக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு தகவல் கேட்கும் விண்ணப்பதாரகளுக்கு 30 நாட்களுக்குள் தகவல் அளிக்கப்பட்டாக வேண்டும். தகவல் 30 நாட்களில் கிடைக்காவிட்டால் அதே அலுவலகத்தில் உள்ள மேல் முறையீட்டு அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவரும் 30 நாட்களுக்குள் சரியான தகவல்கள் அளிக்காவிட்டால் தமிழக தகவல் ஆணையத்திற்கு மேல் முறையீடு செய்து தகவல் பெறலாம். தகவல் அளிக்கத் தவறும் அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 250 வீதம் ரூ 25,000 வரை அபராதம் விதிக்கத் தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.

மேல்முறையீட்டிற்கான அலுவலக முகவரிகள்: தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முகவரி: தலைமை ஆணையர், தமிழ்நாடு தகவல் ஆணையம், எண் 375, முதல் தளம், காமதேனு கூட்டுறவு சிறப்பு அங்காடி கட்டிடம் , தேனாம்பேட்டை, அண்ணாசாலை , சென்னை- 18. தொலைபேசி எண்: 044 -24357580.

மத்திய தகவல் ஆணையத்தின் முகவரி: மத்திய தகவல் ஆணையர். மத்திய தகவல் ஆணையம், ஆகஸ்ட் கிராந்திபவன் 2 வது தளம், பி-பிரிவு. நியு பிகாஜி காமா பேலஸ் டெல்லி-110056

Thursday 8 December 2016

பிரிவு 293 இந்திய தண்டனை சட்டம் Section 293 of Indian Law act


பிரிவு 293:

இதற்கு முன் சொல்லப்பட்ட பிரிவின்படி குற்றம் என்று கொள்ளத்தக்க ஆபாசப் பொருளை இருபட்து வயதுக்குக் குறைந்தவர்களுக்கு விற்பதும் வாடகைக்கு கொடுப்பதும் வழங்குவதும் காட்டுவதும் அவர்கள் மத்தியில் புழங்க விடுவதும் அல்லது அவர்களிடையே இத்தகைய செயல்களைப் புரிவதற்கு முயற்ச்சி செய்வதுன் குற்றமாகும்.

இந்தக் குற்றத்துக்கு ஆறு மாதங்கள் வரை சிறைக் காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தம் படி பொருளை கொடுப்பது மட்டுமல்ல பரப்பினாலும் தண்டனைக்கு உரிய குற்றமாகும்.

3 ஆண்டு வரை சிறைத்தண்டனை கொடுக்கப்படுகின்றது

பிரிவு 292 இந்திய தண்டனை சட்டம் Section 292 of Indian Law act


பிரிவு 292:

ஆபாசமான புத்தகத்தை, விளக்கத்தை, படத்தை, ஓவியத்தை, பொருளை அல்லது அமைப்பதும் விற்பதும் வாடகைக்குத் தருவதும் பிறருக்கு வழங்குவதும் பொதுமக்களுக்குக் காட்டுவதும் பொது மக்கள் அடையும் படி செய்வதும், உருவாக்குவதும், உற்பத்தி செய்வதும் தம் வசம் வைத்திருப்பதும் குற்றமாகும்.

அத்தகைய ஆபாசமான பண்டத்தை மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்காக இறக்குமதி செய்வதும் ஏற்றுமதி செய்வதும் குற்றம்

மேலே கூறப்பட்ட ஆபாசப் பொருட்களை மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்காக உண்டாக்கும் உற்பத்தி செய்யும், வாங்கும், வைத்திருக்கும், இறக்குமதி ஏற்றுமதி செய்யும், பிறருக்கு வழங்கும் அல்லது பொது மக்களின் பார்வையில் படும்படி அல்லது காட்டும் படி வைத்திருப்பது இதன் மூலம் வியாபாரத்தில் லாபம் பெறுவதும் குற்றமாகும்.

மேலே குறிப்பிட்டுள்ளபடி பிரிவின் கீழ் குற்றம் என்று கொள்ள தகும் எந்தக் காரியத்தையும் செய்கிறேன் அல்லது செய்ய தயாராக இருக்கிறேன் என்று விளம்பரம் செய்வதும் பிறருக்கு அறிவிப்பதும் குற்றமாகும்.இத்தகைய ஆபாசப் பொருட்கள் இன்னாரிடம் கிடைக்கும் என்று தெரியப்படுத்துவதும் குற்றமாகும்.

இந்த பிரிவின் கீழ் குற்றம் செய்ய முயற்சிப்பதும் குற்றமாகும். மூன்று மாத சிறைக் காவல் மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

விளக்கம்: மத சம்பந்தமான புத்தகம் வெளியீடு, எழுத்து, படம், ஓவியம் ஆகியவற்றிற்கும்; கோவிலில் அல்லது கோவில் ரதங்களில் பொறிக்கப்பட்டுள்ள செதுக்கப்பட்டுள்ள அல்லது உருவாக்கியுள்ளவற்றுக்கும் விளக்கப்பட்டுள்ளவையும் இந்த பிரிவில் பொருந்தாது

Wednesday 16 March 2016

அரசியலமைப்பு சட்ட​ வரைவு குழு Constitutional Legal draft group

அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு தொகுப்பு "1947, ஆகஸ்ட் 29 -ல் அரசியல் நிர்ணய சபை ஒரு தீர்மானம் நிறைவேற்றியது.
அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத பீ. இரா. அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு (Drafting committee) உருவாக்கப்பட்டது.

பீ. இரா. அம்பேத்கர்
கோபால்சாமி ஐயங்கார்
அல்லாடி கிருஷ்ணமூர்த்தி
கே. எம். முன்ஷி
சையது முகமது
சாதுல்லா மாதவராவ்
டி. பி. கைதான்
ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றனர்.

இக்குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21-ல் ஒப்படைத்தது.
நவம்பர் 4-ல் அரசியல் நிர்ணய சபைக்கு ஒப்படைக்கப்பட்ட இவ்வறிக்கை, முழு வடிவம் பெற்று 1949 நவம்பர் 26-ல் அரசியல் நிர்ணய சபையின் தலைவர் இராஜேந்திரப் பிரசாத்தின் கையொப்பம் பெற்றது.
ஜனவரி 24-ல் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபையின் கடைசிக் கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

Wednesday 9 March 2016

yes anyone can arrest without warrants ஆம், வாரண்ட் இல்லாமல் ஒருவரைக் கைது செய்ய முடியும்


"ஆம், வாரண்ட் இல்லாமல் ஒருவரைக் கைது செய்ய முடியும்"?


ரிமாண்ட் என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. ஒன்று காவலில் வை, சிறைப்படுத்து. மற்றொன்று ஒரு வழக்கை உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் அல்லது அதற்கு கீழுள்ள நீதிமன்றத்துக்குத் திருப்பி அனுப்பி மறு விசாரணைக்கு உத்தரவிடு என்பது. வாரண்ட் என்றால் பிடி ஆணை. ஒருவரைக் கைது செய்ய நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு தான் வாரண்ட்.


குற்றமிழைத்தவர்களை விசாரித்து தண்டிக்க வேண்டிய அதிகாரம் நீதிமன்றத்துக்கு உண்டு. குற்றத்தைப் புலனாய்வு செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. காவல் துறை தன் புலனாய்வின் போது குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் வைத்து விசாரிக்க அவசியம் ஏற்படும் தருவாயில் அவரைக் கைது செய்யலாம். குற்றம் சாட்டப்பட்டவர் சாட்சியங்களை கலைத்து விடக் கூடாது என்ற காரணத்தாலும் கைது செய்யப்படுவதுண்டு.


அதே போல் குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணை முடிந்து தண்டிக்கப்படும் வரை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.அவர் தப்பித்து ஓடி விடக் கூடாது. அதற்காகவும் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படுவதுண்டு. எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றாலும், முன் எச்சரிக்கை காரணமாக ஒருவர் கைது செய்யப்படலாம். இருப்பினும் சுதந்தர நாட்டில் யாரை வேண்டுமானாலும், எதற்கு வேண்டுமானாலும் கைது செய்து விடமுடியாது.


இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி இந்தியக் குடிமகன் இந்திய ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளில் எங்கு வேண்டுமானாலும் சுற்றித் திரியலாம். இது அந்த குடிமகனின் அடிப்படை உரிமை (Fundamental Right under Article 19(1)(d) of the Constitution of India). ஒருவரைக் கைது செய்தல் அவரது அடிப்படை உரிமைக்கு எதிரான செயலாகும். தகுந்த காரணம் இல்லாமல் ஒருவர் கைது செய்யப்படக்கூடாது. காவல் துறையினரேகூட எல்லா விதமான வழக்குகளிலும் வாரண்ட் இல்லாமல் கைது செய்ய முடியாது. Cognizable offence அதாவது புலன் கொள் குற்றம்/பிடி ஆணை தேவையில்லாக் குற்றம் நடைபெற்றால் ஒழிய காவல் துறையால் சம்மந்தப்பட்ட குற்றாவாளியை வாரண்ட் இல்லாமல் கைது செய்யமுடியாது. இதுவே Non-cognizable offence, அதாவது புலன் கொள்ளா குற்றம்/பிடி ஆணை தேவைப்படும் குற்றம் நடைபெற்றால் காவல்துறை அதிகார வரம்பு கொண்ட மாஜிஸ்ட்ரேட்டிடம் (Jurisdictional Magistrate) சென்று வாரண்ட் பெற்ற பிறகே ஒருவரைக் கைது செய்யமுடியும்.


எதுவெல்லாம் பிடி ஆணை தேவையில்லாக் குற்றம் அல்லது பிடி ஆணை தேவைப்படுகின்ற குற்றம் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் (Criminal Procedure Code) முதல் அட்டவணையில் வரையறை செய்யப்பட்டிருக்கிறது. அந்த அட்டவணையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் படி என்னென்ன குற்றங்களுக்கு என்னென்ன தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது, அவற்றில் எது புலன் கொள் குற்றம், எது புலன் கொள்ளா குற்றம் என்பதும், எது ஜாமீனில் விடக்கூடியக் குற்றம் அல்லது எது ஜாமீனில் விட முடியாத குற்றம் என்பதும் விவரிக்கப்பட்டிருக்கும். இந்திய தண்டனைச் சட்டம் மட்டுமல்லாமல் ஏனைய சட்டங்களிலும் பெரிய குற்றங்கள் அதாவது மூன்று ஆண்டுகளுக்கு அல்லது அதற்கும் மேலாக சிறை தண்டனை வழங்கப்படக்கூடிய (மரண தண்டனை உட்பட) குற்றங்கள் எல்லாம் cognizable offence என்று வரையறை செய்யப்பட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு கீழ் தண்டனை கொண்ட குற்றங்கள் non-cognizable offence என்று அழைக்கப்படுகிறது. மேற்சொன்ன விதிமுறையில் விதிவிலக்குகளும் உண்டு. உதாரணத்துக்கு, பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் குற்றத்துக்கு மூன்றாண்டுகளுக்குக் குறைவாகத்தான் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அந்தக் குற்றம் cognizable குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்கு நேர்மாறாக இருதாரம் செய்து கொண்டவர்கள், அடல்ட்ரி போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கும் மேலான சிறை தண்டனை வழங்கப்படும். ஆனால் இது போன்ற குற்றங்களை Non- cognizable குற்றம் என்று சட்டம் வரையறை செய்திருக்கிறது.


இன்னொன்று தெரியுமா? காவல் துறையினர்தான் குற்றவாளியைக் கைது செய்யவேண்டும் என்பதில்லை.பொதுமக்களில் யாரேனும் ஒருவரோஅல்லது பலரோ சேர்ந்தும்கூட, குற்றம் நடந்த சமயத்தில் அல்லது குற்றம் நடக்கவிருக்கின்ற சமயத்தில் (காவலர்கள் யாரும் இல்லாத நிலையில்) குற்றவாளியைக் கைது செய்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம். ஆக, கைது என்பது ஒரு குற்றவாளியைச் சுதந்திரமாக நகர விடாமல் கட்டுப்படுத்தி வைத்திருப்பதே ஆகும்.


குற்றவாளியைக் கைது செய்கிறேன் பேர்வழி என்று குற்றவாளியின் உயிரை மாய்த்துவிடக் கூடாது. இது பொது மக்களுக்கு மட்டுமல்ல, காவல் துறைக்கும் பொருந்தும். ஒரு குற்றவாளியைக் கைது செய்வதற்கு எவ்வளவு பலம் தேவைப்படுகிறதோ அவ்வளவு பலத்தைதான் பிரயோகிக்கவேண்டும். யாரேனும் ஒருவரைத் தகுந்த காரணமில்ல பொது மக்கள் கைது செய்து வைத்திருந்தால், முறையின்றி சிறை வைத்ததற்காக அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும். ஜாக்கிரதை!


காவல் துறையினர் வாரண்ட்டை நிறைவேற்றும் போது (குற்றவாளியைக் கைது செய்யும் பொழுது) குற்றம் சாட்டப்பட்டவரோ அல்லது பொதுமக்களோ காவல் துறையினருக்கு ஒத்தழைப்பு வழங்கவேண்டும். வாரண்டை நிறைவேற்ற விடாமல் காவல் துறையினருக்கு இடையூறு செய்தால் அதுவும் குற்றமாகும்.

Friday 18 December 2015

பிறப்புச் சான்று முதல் இறப்புச் சான்று வரை Birth Certificate to Death Certificate


இந்தியா: தமிழகத்தில் சான்றிதழ்களைப் பெறுவதும் விண்ணப்பங்களை அளிப்பதும் எப்படி? வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் பொழுது, அவை ஒவ்வொன்றிற்கும் சரியான சான்றுகள் தேவைப்படுகின்றன. சான்றளிப்பதில், சான்றளிப்பவர் யாராகவேனும் இருக்கலாம். ஆனால், சான்றளிப்பதும், அதற்காக விண்ணப்பிப்பதும் ஒவ்வொரு தனி மனிதனின் முதன்மைத் தேவைகளில் ஒன்று. இப்படிச் சான்றளிப்பதில் பெரும்பாலும், பெரும்பாலான உரிமைகளை அரசுகள் தங்களகத்தே கொண்டுள்ளன. பிறப்புச் சான்று முதல் இறப்புச் சான்று வரை வாழ்க்கையின் பல நிலைகளில் பல சான்றுகள் நமக்குத் தேவைப்பட்டாலும், அவற்றைப் பெறுவதில் உள்ள நடைமுறைகள் பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை என்பதால் பல இன்னல்கள் ஏற்படுகின்றன.



பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு என்பது ஒவ்வொருவரின் சொந்த ஊரில் அல்லது நிலையான இருப்பிடத்தில் தான் பதிவு செய்யப்பட வேண்டும் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இது தவறு. ஒரு குழந்தை எங்கு பிறக்கிறதோ அங்கு தான் அதன் பிறப்புப் பதிவு செய்யப்பட வேண்டும். அதே போல், ஒருவர் இறந்து விட்டாலும் அவர் எங்கு இறக்கிறாரோ அங்குதான் அவரது இறப்புப் பதிவு செய்யப்பட வேண்டும். ஒருவர் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் பொழுது இறந்து விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், அவர் இறந்து விட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை என்ற நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற பிறகு அங்கு பரிசோதித்த மருத்துவர் நோயாளி ஏற்கனவே சுமார் அரைமணி நேரத்திற்கு முன்னரே இறந்து விட்டார் என்று சொன்னால்? சுமார் அரை மணி நேரத்திற்கு முன்னாள் தங்களது மருத்துவ அவசர கால இயக்கூர்தி எந்த ஊரில் வந்து கொண்டிருந்திருக்கும் என்றெல்லாம் குழம்பத் தேவையில்லை; மாறாக, எங்கு முதன் முதலில் ஒரு மருத்துவர் 'ஒருவர் இறந்து விட்டார்' என்று கருதுகிறாரோ அங்கேயே அந்த இறப்பைப் பதிவு செய்யலாம். இறந்தவர் வீட்டிலிருந்து கிளம்பியவுடன் கூட இறந்திருக்க முடியும். அதற்காக அங்கே சென்று தான் அவருடைய இறப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்றெல்லாம் இல்லை. அவருடைய இறப்பு எங்கு முதன் முதலில் ஒரு பதிவு பெற்ற மருத்துவரால் உறுதி செய்யப்படுகிறதோ அங்குதான் அவர் இறந்ததாகக் கருதப்படுவார்.


பிறப்புச் சான்றிதழ் அல்லது இறப்புச் சான்றிதழில் பிறந்தவர் அல்லது இறந்தவர் பெயர் உள்ளிட்ட தகவல்களைப் பதிவு செய்யும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிறந்த குழந்தையின் தாய் தந்தையர் அல்லது முகவரியில் ஏதேனும் தவறு இருந்தால், அதைச் சரியான சான்றுகள் அளித்து மாற்றிக்கொள்ளலாம்; அதே வேளையில் குழந்தையின் பெயரில் ஏதேனும் மாற்றம் தேவையென்றால் அப்படி மாற்ற முடியாது. எனவே, குழந்தையின் பெயரை உறுதி செய்த பின்னரே அதைப் பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்யவேண்டும். ஒருமுறை பதிவு செய்துவிட்டால், அதை மாற்றுவது அவ்வளவு ஒன்றும் எளிதானது அல்ல. பெற்றோர் சரியான தகவல்களை அளித்திருந்தும், பதிவு செய்யும் அலுவலர் ஏதேனும் தவறு செய்திருந்தால் மட்டும், பதிவு செய்கையில் பெற்றோர் அளித்த விண்ணப்பத்தில் உள்ள தகவல்களைப் பரிசோதித்துவிட்டு அதை மாற்றித் தருவர். எனவே, பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு செய்யும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்



இந்தியப் பெற்றோர்களுக்கு வெளிநாட்டில் குழந்தைகள் பிறந்தால், அந்நாட்டில் உள்ள தூதரகம் வாயிலாகப் பதிவு செய்ய வேண்டும். அதாவது இந்தியாவில் உள்ள ஒரு கணவனும் மனைவியும் பணி நிமித்தமாக, அல்லது குழந்தைப்பேறு மருத்துவத் தேவைகளுக்காக வெளிநாட்டில் உள்ள ஒரு மருத்துவமனைய்ல் மருத்துவம் பார்த்து அங்கேயே குழந்தை பெற்றுக்கொண்டால், அக்குழந்தையின் பிறப்பு அங்குள்ள தூதரக அலுவலகம் வாயிலாகப் பதிவு செய்ய வேண்டும். இறப்பும் அவ்வாரே பதிவு செய்யப்படவேண்டும். ஒருவர் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது அவருக்கு உயர் மருத்துவக் காரணங்களுக்காக அவருடைய உறவினர்கள் வெளிநாட்டில் உள்ள மருத்துவமனைகளை நாடுகின்றனர் என்று வைத்துக்கொள்வோம். அப்படி வெளிநாட்டில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ நடவடிக்கைகளின் போது அந்த நபர் இறந்து விட்டால், அங்குள்ள தூதரகம் வாயிலாகப் பதிவு செய்து சான்றிதழ் பெற்றுக்கொள்ளவேண்டும்.


வான் ஊர்தியில் அல்லது கப்பலில் பயணிக்கும் பொழுது குழந்தை பிறந்தால் அல்லது ஒருவர் இறந்துவிட்டால், அந்தப் பயணம் அதிகாரப்பூர்வமாக எங்கு முடிகிறதோ அங்குதான் அந்தப் பிறப்பு அல்லது இறப்புப் பதிவு செய்யப்படவேண்டும். எரிபொருள் நிரப்ப அல்லது அச்சுறுத்தல் காரணமாக அந்த வான் ஊர்தி அல்லது கப்பல் ஏதாவது ஒரு நிலையில் நிறுத்தப்பட்டால் அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. உண்மையில் பயணியை அதிகாரப்பூர்வமாக எங்கு இறக்கிவிடுகிறார்களோ அங்கு தான் பதிவு செய்யவேண்டும்.

Wednesday 9 December 2015

இந்திய தண்டனை சட்டம் 153A(1) Indian Punishment Act 153A (1)


தயவுசெய்து சிந்தனை வேண்டும் இந்திய தண்டனை சட்டம் 153A(1)
*********************************************************************

பிரிவு 153A(1): பேச்சாலோ எழுத்தாலோ அல்லது சைகையாலோ, மத இன மொழி சாதி சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளைத் தூண்டி விட முயற்சி செய்வது குற்றமாகும். குற்றத்தினை புரிபவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறைக்காவலுமடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்

Tuesday 19 May 2015

வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் திருத்த​ முடிவு 2015 - Dowry Prohibition Act Decision to Change


"வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு, 498-ஏ-யின் கீழ் குற்றம்.. சாட்டப்பட்டவர், உடனடியாக கைது செய்யப்படுவார்; அவருக்கு ஜாமின் கிடையாது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், மூன்றாண்டு வரை சிறைத் தண்டனையும் கிடைக்கும்.இந்த வழக்கில், நீதிமன்றத்தில் தாங்கள் குற்றமிழைக்காதவர்கள் என கைது செய்யப்பட்டவர்கள் நிரூபிக்கும் வரை அவர்கள் குற்றவாளிகளாகவே கருதப்படுவர். இதற்கிடையில் வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தை, பெண்களில் சிலர் தவறாக பயன்படுத்துவதாக ஏற்கனவே புகார் எழுந்துள்ளது. அதாவது, தங்களுக்கு பிடிக்காத கணவரையும், அவரின் குடும்பத்தினரையும் பழிவாங்க, இந்த சட்ட விதிகளில், தங்களுக்கு சாதகமான பிரிவுகளை பயன்படுத்தி, பொய் புகார் கொடுக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. கணவருடன் வாழப் பிடிக்காமல் விவாகரத்து பெற விரும்பும் பெண்கள், இந்த சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்துவதாக, சுப்ரீம் கோர்ட், ஏற்கனவே ஒரு வழக்கில் தெரிவித்துள்ளது.


இந்தநிலையில் இந்த சட்டத்தை திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.இதுதொடர்பாக மத்திய சட்ட ஆணையம், நீதிபதி மாலிமாத் குழு ஆகியவை மத்திய அரசுக்கு பரிந்துரைகள் அளித்துள்ளன. அந்தப் பரிந்துரைகளின்படி, நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் புகார்தாரரும், குற்றம்சாட்டப்பட்டவரும் வழக்கில் சமரசம் செய்து கொள்ளும் வகையில், அதை சமரசத்துக்குட்பட்ட குற்றம் என திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.


இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில்," இந்திய தண்டனைவியல் சட்டத்தின் (ஐ.பி.சி.) 498ஏ பிரிவை, சமரசத்துக்குட்பட்ட குற்றம் என திருத்தம் செய்வதற்கான மத்திய அமைச்சரவையின் வரைவு, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வரைவு மசோதாவை சட்ட அமைச்சகம் தயாரிக்கும்.தற்போதைய சட்டத்தில், பொய்யான புகார் அளிக்கப்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டால், புகார் அளித்தவர்களுக்கு ரூ.1,000 மட்டுமே அபராதம் விதிக்க முடியும். இந்தத் தொகையை ரூ.15,000 ஆக அதிகரிக்கும் வகையில் அரசு திருத்தம் செய்ய இருக்கிறது. அத்துடன், தண்டனை விதிக்கப்படுபவர்கள் இழப்பீடு வழங்கும்பட்சத்தில் அவர்களுக்கு சிறைத் தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் திருத்தம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது ,"என்று தெரிவித்தன.


வரதட்சிணை கொடுமை எதிர்ப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்ய இருப்பதற்கு உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,"தற்போதைய சட்டத்தின் வாயிலாக பெண்களுக்கு நிவாரணமும், பாதுகாப்பும் கிடைக்கிறது.இதுவே தொடர வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றம் என்பது மனித உரிமை மீறலாகும். இதில் எந்த சமரசமும் செய்யக் கூடாது. மத்திய அரசின் முடிவை எதிர்க்கிறேன் என்றார்.


சுப்ரீம் கோர்ட் உத்தரவு என்ன? கடந்த, 2010ல், வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்கு ஒன்றில்,அம்சங்கள்: *ஆதாரமின்றி, வரதட்சணை கொடுமை வழக்கில் யாரையும் கைது செய்யக்கூடாது. *வரதட்சணை கொடுமை வழக்கில், சம்பந்தபட்ட பெண்ணின் கணவர் மட்டுமல்லாமல் அவரின் உறவினர்கள், தாத்தா, பாட்டி, வெளிநாடுகளில் இருக்கும் சகோதர, சகோதரிகள் கூட கைது செய்யப்படுகின்றனர்; இது, கண்டிக்கத்தக்கது.
Related Posts Plugin for WordPress, Blogger...