சரியாக காலை 8 மணி, மதியம் 2 மணி, மாலை 8 மணி என மணியடிக்கும் போதெல்லாம் அலாரம் வைத்தார்போல சாப்பிடுவோர் உண்டு. பசிக்கிதோ இல்லயோ, சரியான நேரத்தில் மணியடித்தார் போல சாப்பிட வேண்டுமென்கிற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. ஆனால் அவ்வாறு நாம் பசி எடுக்காமல், சரியான நேரத்தில் சாப்பிட வேண்டுமென்று எண்ணி சாப்பிடுவது மிகவும் தவறானது என தன் கருத்தினை முன்வைக்கிறார், அக்குஹீலர் செல்வி. சௌ. ஜெயவள்ளி அவர்கள். புதுமையான கருத்தை எடுத்துரைக்கும் இவரை நமது பாராட்டுக்கள்.
அவர் கூறியதாவது,
நாம் உண்ணும் உணவு தான் நம் உடலில் ஏற்படும் அத்தனை மாற்றத்துக்கும் காரணமாக அமைந்துள்ளது. நமக்கு பசி எடுக்காதபோது சாப்பிட்டால், அது உடலுக்கு தேவையற்ற வேலையைக் கொடுக்கிறது. இதனால்தான் உடலில் நோய்கள் ஏற்படுகின்றது. நம்முடைய உடலில் இன்சுலின் சுரக்கவில்லை என்றால் சக்தியானது உடலால் உபயோகப்படுத்த முடியாமல் கழிவுகளாக தேங்கும். இந்த கழிவுகள் உடலில் எந்தெந்த இடங்களில் தேங்குகிறதோ அங்கெல்லாம் அது நோயாக மாறும். அதையே மருத்துவத் துறையில் வெவ்வேறு பெயர்கள் வைத்து அழைக்கப்படுகின்றன. தோன்றும் இடம் எதுவானால் என்ன? நோய் என்பது ஒன்று தான். கழிவுகளின் தேக்கத்தால் ஏற்படும் குறைபாடே நோயாகும்.
நுரையீரலில் தேங்கும் கழிவுகளே சளியாகவும், இருமலாகவும், ஆஸ்துமா வாகவும் மாற்றம் அடை கிறது. கணையம் இன்சுலினை சுரக்காததால் தேங்கும் கழிவுகளே தினம் தோறும் நாம் அனுபவிக்கும் கண் பார்வை பிரச்சனை, காது கோளாறு, தலைவலி, உடல் வலி, முட்டுவலி, அரிப்பு, கை கால் மரத்து போகுதல், கை கால் விரல்களில் எரிச்சல், தோல் நோய்கள், படபடப்பு, தலைசுற்றல், அதிகமான தாகம், பசி, மயக்கம் போன்ற பல நோய்களுக்கு காரணிகளாக அமைகிறது. உடலில் தேங்கும் கழிவுகளை உடலை விட்டு, நீக்கினால் நோயின் வெளிப்பாடு தானே காணாமல் போய் விடும்.
அதேநேரம் நாம் மருந்து மாத்திரைகள் சாப்பிடும் போது, அது அந்த நோயை நம் உடலில் இருந்து அழித்து விடாது, மாறாக அதை கட்டுப்பாட்டுக்குள்ளாகவே வைத்திருக்கும். உதாரணத்திற்கு சக்கரை நோயாளிகள் தினம்தினம் மருந்துகள் எடுத்தாலும், அது அவர்களுக்கு தீர்வாக இருக்காது என சொல்லலாம்.
இதுபோன்ற பிரச்சனை களுக்கு நாம் நம் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். எல்லா நோய்க்கும் மூலக் காரணம் வயிறுதான். வயிற்றிலிருக்கும் கழிவுகளை அகற்றினாலே போதும், அது நமக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.
- அன்புடன் அக்குஹீலர் ஜெயவள்ளி
No comments :
Post a Comment