ஸ்மார்ட் போன்-கள் பிரபலமாகிவிட்ட நிலையில் அடுத்து மெதுவாக பரவலாகி வருகிறது ஸ்மார்ட் வாட்ச்கள்.
கால் செய்வது, ஈமெயில், பேஸ்புக் பார்ப்பது, உங்கள் பிட்னஸ்-ஐ டிராக் செய்வது, இசையை ரசிக்க என பல்வேறு உபயோகங்களுடன் ஸ்மார்ட் வாட்ச்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் Asus நிறுவனம் VivoWatch என்ற ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்டைன்லெஸ் ஸ்டீலால் ஆன, டச் வசதி கொண்ட இந்த வாட்ச் ஆண்டிராயிட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. இதில் உள்ள லைட் சென்சார் brightness அளவுகளை பல்வேறு லைட்டிங் கன்டிசனுக்கு ஏற்றார் போல் தானாக கட்டுப் படுத்துகிறது.
தினசரி ஆக்டிவாக எவ்வளவு நேரம் இருக்கிறீர்கள், ஓய்வு நிலை எவ்வளவு நேரம். தோராயமாக எவ்வளவு கலோரிகள் செலவழிக்கிறீர்கள், உங்கள் உறங்கும் நேரம் போன்றவற்றை கண்காணித்து பிட்னஸ் மானிட்டராக, உங்களை பிட்டாக வைத்துக் கொள்ள இந்த வாட்ச் உதவும். இது ஹாட் ரேட் சென்சாருடன் வருகிறது.
பார்ப்பதற்கு அழகாக உள்ள இந்த வாட்ச் பயன்படுத்த எளிமையாக இருக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. முக்கிய அம்சமாக இதன் பேட்டரி திறன் அதிகம். அதாவது இதன் சார்ஜ் 10 நாட்கள் வரை நிலைத்து நிற்க கூடியவை.
இது இன்னும் இந்தியாவில் வெளியாகவில்லை. இதன் விலை சுமாராக ரூ 9,700 இருக்கலாம் என்று ஊகிக்கப் படுகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
Thanx : Techmalar.com
No comments :
Post a Comment