கறிவேப்பிலை சட்னி:
*******************************
கறிவேப்பிலை ஒரு பெரிய கொத்து
வரமிளகாய் 4
புளி நெல்லிக்காய் அளவு
உப்பு
எண்ணெய்
செய்முறை:
*****************
கறிவேப்பிலையை நல்லா கழுவி ஆறவெச்சுக்கணும், ஒரு சட்டில கொஞ்சமா எண்ணெய் ஊத்தி காஞ்சதும் அதுல வரமிளகாய் புளி உப்பு போட்டு நல்லா வறுக்கணும், பின்பு கறிவேப்பிலையை போட்டு பாதி வேக்காடா வறுத்து எடுக்கணும், பின்பு அம்மில, என்னது அம்மி ஆமாம் அம்மில நல்லா மையா தண்ணி ஊத்தாம அரைக்கணும், அவ்வளவுதான் கறிவேப்பிலை சட்னி ரெடி,
இது அருமையான சுவை உடம்புக்கும் நல்லது,
கம்மங்கூழுக்கு அருமையான காம்பினேஷன். ஒரு வாரம் வெச்சாலும் கெடாது, செஞ்சு அசத்துங்க.
No comments :
Post a Comment