திராட்சையில் பல வகைகள் உண்டு. சில பச்சை நிறமாகவும், சில கருப்பு நிறமாகவும் உள்ளன.
திராட்சையை உலர்த்திப் பக்குவப்படுத்தி விற்பனை செய்கிறார்கள்
திராட்சை எத்தனை வகையாக இருப்பினும் அதை பச்சையாகவோ அல்லது உலர்ந்த நிலையிலோ சாப்பிட்டாலும் அதற்கு நல்ல மருத்துவ இயல்பு அமைந்திருக்கிறது.
பல வகையான குடல் கோளாறுகளுக்கு பச்சைத் திராட்சை நல்ல வகையில் பயன்படுகிறது.
நரம்பு தளர்ச்சி காரணமாக ஏற்படுகிற உடல் நடுக்கத்தை சீர் செய்யும் வல்லமையும் இதற்கு உண்டு.
பச்சைத் திராட்சையின் சாறு எடுத்து பகல் உணவுக்குப் பிறகு சாப்பிட்டு வர நாக்குப் புண், வாய்ப்புண் ஆறும்.
கருப்புத் திராட்சையில் பச்சைத் திராட்சையை விடச் சில வகை சத்துக்கள் அதிகமாக உள்ளன.
உலர்ந்த திராட்சையை அப்படியே சாப்பிடுவதை விட சுட வைத்த பசுவின் பாலில் இட்டு சிறிது நேரம் ஊறச் செய்து பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் அதன் இயல்பான சத்து சற்றுக் கூடுதலாகும்.
வளரும் குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையைக் கொடுத்து வந்தால் அவற்றின் தசை வளர்ச்சி நல்ல முறையில் இருக்கும். மற்றும் அவற்றின் எலும்புகளின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.
முதுமைப் பிராயத்தினர் உலர்ந்த திராட்சையைப் பாலுடன் சேர்த்து சாப்பிடுவதால் அவர்கள் ஆரோக்கியம் காக்கப்படும்.
பயனுள்ளதாயின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்
No comments :
Post a Comment