(மாம்பழ ஜூஸ் இல்லை)
தேவையானவை:
புளிப்பில்லாத கிளிமூக்கு மாங்காய்—ஒன்று
வேறு வகையானாலும் அதிகம் புளிப்பில்லாத மாங்காயானாலும்.
சர்க்கரை—-4 டீஸ்பூன்.வேண்டிய அளவு அதிகறிக்கவும்.
ஏலக்காய்–1 பொடிக்கவும்.
"காலா நமக்"கென்று சொல்லும் உப்பு அரை டீஸ்பூன்.
இஞ்சி வாஸனைக்குத் துளி
புதினா—4 இலைகள்
செய்முறை:
மாங்காயை அப்படியே முழுதாக குக்கரில் வேகவைத்து எடுக்கவும்.பருப்பு வேகவைக்கும் போது மேலே ஒரு பாத்திரத்தில் துளி தண்ணீருடன் மாங்காயை வைத்தாலும் ப்ரஷரில் நன்றாக வெந்து விடும். ஆறினவுடன் மாங்காயின் தோலையும் கொட்டையையும் எடுத்து விடவும். இப்போது மாங்காயின் உட்பகுதியை கரண்டியினாலோ, க்ரஷ்ஷரினாலோ நன்றாக மசிக்கவும். 2 கப் குளுமையான தண்ணீர் விட்டுக் கறைத்து பெரிய கண் உடைய சல்லடையிலோ, வடிக்கட்டியிலோ வடிக்கட்டவும். சர்க்கரை, காலாநமக்,ஏலக்காய் ஒன்று சேர்த்துக் கலக்கவும். இஞ்சித் துருவலில் 1 ஸ்பூன் தண்ணீர் சேர்த்துப் பிழிந்து கலக்கவும். ருசி பார்க்கவும். புளிப்புக்கு ஏற்ற ஜலம் சேர்க்கவும். இனிப்பும் அப்படியே.
No comments :
Post a Comment