உலகமெங்கும் உள்ள பல தகவல்களை விரல் நுனியில் அறிந்து கொள்ள இணைய தளங்கள் பல சேவைகளை வழங்கி வருகின்றன. அவற்றில் கூகிள் வழங்கும் இலவச சேவைகள் மகத்தானவை.
அந்த வகையில் வீட்டில் இருந்து கொண்டே நாம் செல்ல வேண்டிய இடத்திற்கான மொத்த கிலோ மீட்டர் மற்றும் அதன் வழிகள் மற்றும் பல தகவல்கள் தெரிந்து கொள்ளும் உதவுவது கூகிள் மேப் https://maps.google.co.in/ இணையதளம்.
வெளியூரோ, உள்ளூரோ... பயணம் செய்யும் பெரும்பாலானவருக்கு இது பயனுள்ள ஒன்று. மொபைலில் GPS ஆன் செய்து கொண்டே கூகிள் மேப் உதவியுடன் நாம் விரும்பும் இடத்திற்கு செல்ல முடியும். உங்களில் பலரும் அதனை பயன்படுத்தி இருப்பீர்கள்.
தற்போது கூகிள் நிறுவனம் இதில் கூடுதலாக இந்திய ரயில்வேயில் உள்ள 12000 ரயிலின் கால அட்டவணைகளை கூகிள் மேப்-ல் அப்டேட் செய்துள்ளது. எந்த ரயில் எத்தனை மணிக்கு எந்த ஸ்டேசனுக்கு வரும்? எத்தனை மணிக்கு வரும்? சென்றடையும்? என எல்லா விபரங்களையும் காண முடியும்.
அகமதாபாத், பெங்களூர், சென்னை, ஐதராபாத், கொல்கத்தா, மும்பை, டெல்லி மற்றும் புனே போன்ற 8 இந்திய நகரங்களில் பப்ளிக் டிரான்ஸ்போர்ட் தகவல்களை அப்டேட் செய்துள்ளது.
கூகிள் ட்ரான்சிட் (Google Transit) http://google.comtransit/ தளத்திற்கு சென்று புறப்படும் இடம், செல்லும் இடம் கொடுத்து பயன்படுத்தி பாருங்கள். கூகிள் மேப்-ன் கூடுதல் அம்சமான இது நமது பயணத்தை எளிதாக்கும் என்பதில் ஐயமில்லை.
கூகிள் மேப் தற்போது வரை உலக அளவில் 2,800 நகரங்களில் உள்ள 1 மில்லியன் நிறுத்தங்களுக்கான பப்ளிக் டிரான்ஸ்போர்ட் கால அட்டவணைகளை அப்டேட் செய்துள்ளது. இதில் நியூயார்க், டோக்கியோ, லண்டன் மற்றும் சிட்னி போன்றவை அடங்கும்.
Thanks : Techmalar.com
No comments :
Post a Comment