மேக் ஓஎஸ், லினக்ஸ் என பல இயங்குதளங்கள் இருந்தாலும் பெருவாரியான மக்கள் பயன்படுத்துவது மைக்ரோசாப்ட்-டின் விண்டோஸ் இயங்குதளத்தைதான்.
மைக்ரோசாப்ட் வெளியிட்ட விண்டோஸ் 8.1 பதிப்பு பெரும்பாலான பயனர்களை திருப்தி படுத்தவில்லை. அதனால் விரைவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான விண்டோஸ் 10 ஓ.எஸ்-ஐ வெளியிடவுள்ளது.
இதற்கான அனைத்து வேலைகளும் மும்முரமாக நடந்து கொண்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஓஎஸ் மார்க்கெட்டில் பெரும் வெற்றி அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது
நிக்ஸான் சிகாஹோவில் நடந்த நிறுவனத்தின் சந்திப்பில் மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரி ஜெர்ரி நிக்ஸன் மற்றும் டெவலப்பர் ஈவன்ஜெலிஸ்ட் "விண்டோஸ் 10 இந்த ஓ.எஸ்-ன் இறுதி பதிப்பு, இதற்கான வேலைகள் இது வரை மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது" என்று கூறினர்.
அத்துடன் விண்டோசின் புதிய சிறப்பம்சங்கள் குறித்தும் தெரிவித்தனர்.
நிறுவனம் ஏற்கனவே உள்ள விண்டோஸ்-ஐ மேம்படுத்தப்பட்டதாக உருவாக்கி கொண்டிருக்கிறது. உதாரணமாக start மெனு மற்றும் செயலிகள்(apps) துரிதமாக செயல்படும் வண்ணம் தனித்தனியாக மேம்படுத்தப்படுகிறது.
இதனால் விண்டோஸ் 10 மேம்படுத்தப்பட்ட பதிப்பாக சிறந்த முறையில் வரும் என உறுதி அளித்துள்ளது
விண்டோஸ் 10 கணினி, மொபைல், டேப்லட், HoloLens, மற்றும் Xbox One போன்றவைகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இது பரிசோதனை கட்டத்தில் (Testing Stage) உள்ளது.
Thanx-Techmalar.com
No comments :
Post a Comment