தேவையானவை:
பச்சரிசி கால் கப், மாங்காய் (தோல் சீவியது) 4 துண்டுகள், வெல்லம் (பொடித்தது) 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் 2, பச்சை வேப்பம்பூ ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
மாங்காய் துண்டுகளுடன் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைத்து, வெந்ததும் வெல்லம், பச்சை மிளகாய், வேப்பம்பூ எல்லாம் போட்டு இறக்கிவைக்கவும். பச்சரிசியை முதல் நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் காலை உப்பு சேர்த்து, அம்மியில் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். இத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கட்டிபடாமல் கிளறினால் சில நிமிடங்களில் வெந்துவிடும். அத்துடன் மாங்காய், வெல்லக் கலவையைச் சேர்த்துக் கிளறினால், கஞ்சி ரெடி. புளிப்பு, இனிப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு எல்லாம் சேர்ந்த இந்தக் கஞ்சி, பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு நல்லது. கர்ப்பிணிகளின் வாய்க்கு ருசியான கஞ்சி இது.
No comments :
Post a Comment