தேவையானவை:
பொன்னாங்கண்ணிக் கீரை, பசலைக்கீரை (பாலக்), முளைக்கீரை - தலா ஒரு கட்டு, வெல்லம் - 500 கிராம்.
செய்முறை:
கீரைகளை மிக்சியில் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள கீரைக் கலவையை, பச்சை வாடை போகும் அளவுக்கு, வதக்க வேண்டும். நீர் வற்றியதும், பொடியாக்கிவைத்துள்ள வெல்லத்தைச் சேர்த்து, தொடர்ந்து 15 முதல் 20 நிமிடம் வரை கிளறவும். ஜாம் போல இறுகியதும் இறக்கவும்.
இந்த ஜாமை ஃப்ரிட்ஜில் 3 மாதம் வரை வைத்துப் பயன்படுத்தலாம். பிரட், சப்பாத்தி போன்றவற்றில் தடவிச் சாப்பிடலாம்.
குறிப்பு: கொத்துமல்லி, புதினாவுக்கு துவர்ப்புத்தன்மை அதிகம் இருப்பதால், சேர்க்க வேண்டாம். சுவையை மாற்றும் தன்மை கொண்டவை இவை.
பலன்கள்: இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, கால்சியம், நீர்ச் சத்து, பாஸ்பரஸ் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. உடலுக்கு மிகவும் நல்லது.
No comments :
Post a Comment