தேவையானவை
1. குதிரைவாலி அரிசி - 1 கப்
2. சிகப்பரிசி, உளுத்தம் பருப்பு - தலா கால் கப்
3. வெங்காயம் - 4
4. வெந்தயம், கறிவேப்பிலை - சிறிதளவு
5. உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. குதிரை வாலி அரிசி, சிகப்பரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியாக ஊற வைத்து மூன்று மணி நேரம் கழித்து, ஒன்றாக சேர்த்து அரைக்கவும்.
2. பின்னர் உப்பு சேர்த்து புளிக்க வைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
3. பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள மாவை சேர்த்து கலந்து கொள்ளவும். அடுப்பில் பணியாரச் சட்டியை காய வைத்து, சிறிதளவு எண்ணெய் விட்டு, பின்னர் மாவை ஊற்றி, இரண்டு பக்கமும் நன்றாக வேக வைத்து எடுத்து, பரிமாறவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் உணவு இது.
No comments :
Post a Comment