தேவையானவை:
சிவப்பு அவல் - 100 கிராம், வெல்லம் - 50 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், உப்பு - சிறிதளவு, பொடித்த சுக்கு, ஏலக்காய் - ஒரு சிட்டிகை, முந்திரி, திராட்சை - சிறிதளவு.
செய்முறை:
சிவப்பு அவலைத் தண்ணீரில் சுத்தப்படுத்தி, சிறிதளவு உப்பு சேர்த்து ஈரத்துடன் 10 நிமிடம் ஊறவைக்கவும். வெல்லத்தை இடித்துப் பொடியாக்கி சேர்த்து, சுக்கு, ஏலக்காய் பொடியைக் கலந்து நன்றாகக் கிளறவும். கடைசியில் இதில் முந்திரி, திராட்சை சேர்த்து உண்ணலாம்.
பலன்கள்: சிவப்பு அவலில் கலோரி, கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளது. வெல்லத்தில் இரும்புச்சத்து இருப்பதால் உடலுக்கு நல்லது. காலை உணவாக இதைச் சாப்பிடுவதன் மூலம், அந்த நாளுக்குத் தேவையான முழுச் சத்துக்களும் கிடைத்துவிடும்.
No comments :
Post a Comment