தேவையான பொருட்கள்
வரகு, சாமை, தினை, பனிவரகு, குதிரைவாலி - தலா 1 தேக்கரண்டி (குருணையாக)
சின்ன வெங்காயம் - 6
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி மற்றும் புதினா - தலா 1 கைப்பிடி
இஞ்சி- பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
சிறு தானியங்களை ஒன்றாகச் சேர்த்து, அதில் தண்ணீர் விட்டு வேகவைக்கவும் அல்லது காய்ச்சவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், தக்காளி, உப்பு போட்டு நன்கு வதக்கவும். புதினா, கொத்தமல்லி சேர்க்கவும். நன்கு வதங்கியதும் வேகவைத்த சிறுதானிய கலவையை இதில் சேர்க்கவும். எளிதாக,சிறுதானிய மசாலா கஞ்சி தயார்!
உடலுக்குப் பொலிவூட்டும். இது ஒரு சத்தான உணவு. சரிவிகித உணவு. காலை உணவிற்கும் இரவு உணவிற்கும் ஏற்றது.
நன்றி: தாளாண்மை.
No comments :
Post a Comment