தேவையானவை:
சிவப்பு அரிசி - ஒரு கப், முதல் தேங்காய்ப் பால் - அரை கப், இரண்டாம், மூன்றாம் தேங்காய்ப் பால் - தலா ஒரு கப், பூண்டு - 15 பல், சீரகம், வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், சுக்கு - சிறிய துண்டு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
சிவப்பரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, குக்கரில் சிவப்பு அரிசியுடன் இரண்டாம், மூன்றாம் தேங்காய்ப் பால், ஒரு டம்ளர் தண்ணீர், பூண்டு, சீரகம், வெந்தயம், சுக்கு, உப்பு சேர்த்து நன்கு வேகவிட்டு இறக்கவும். பிறகு அதில் முதல் தேங்காய்ப்பால் சேர்த்துப் பரிமாறவும்.
வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆற்றும் சத்தான கஞ்சி இது.
No comments :
Post a Comment