தேவையானவை:
அத்திப்பழம் - 8,
சிறுதானிய சப்பாத்தி மாவு - 2 கப்,
கருப்பட்டித்தூள் - 2 கப்,
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை,
உப்பு, நெய் அல்லது எண்ணெய் - தேவைக்கேற்ப,
தேங்காய்ப் பால் - 1 கப்
செய்முறை:
அத்திப் பழத்தின் தோல் நீக்கி மசிக்கவும். சிறுதானிய சப்பாத்தி மாவுடன் உப்பு சேர்த்து கலக்கவும். அதில் கருப்பட்டித்தூளை பாகாகக் காய்ச்சி அதையும் விட்டு தேங்காய்ப் பால், ஏலக்காய் தூள் சேர்த்து அப்பம் மாவு பதத்துக்குக் கலக்கவும்.
குழிப்பணியாரக் கல்லில் நெய் அல்லது எண்ணெய் விட்டு மாவை ஊற்றி சுட்டு எடுக்கவும். வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
No comments :
Post a Comment