தேவையானவை:
தினைப் புழுங்கல் அரிசி - 200 கிராம், பாசிப் பருப்பு - 100 கிராம், பூண்டு - 4 பல், மிளகு, வெந்தயம் - சிறிதளவு, தேங்காய்ப் பால் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
தினை மற்றும் பாசிப் பருப்பைக் கழுவிச் சுத்தம்செய்து, ஒன்றுக்கு ஆறு என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். இதனுடன் வெந்தயம், பூண்டு, மிளகு சேர்த்து 5 அல்லது 6 விசில் வரும் வரை குக்கரில் வேகவைக்க வேண்டும்.
இறுதியாக தேங்காய்ப் பால் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, குழைய வேகவைக்க வேண்டும்.
சுவையான தினை தேங்காய் பால் கஞ்சி தயார்.
நன்றி: பெட்டகம் .
No comments :
Post a Comment