தேவையானவை:
கருப்பு உளுந்து (தோலுடன்),
சிறுபருப்பு (தோலுடன்), கேழ்வரகு,
கம்பு, கோதுமை, கருப்பு மற்றும் வெள்ளைக் கொண்டைக்கடலை,
காராமணி - தலா 1 டீஸ்பூன்,
புளிப்பில்லாத தயிர் - தேவைக்கேற்ப,
மிளகு, சீரகத் தூள் - சிறிது,
பொடியாக நறுக்கிய இஞ்சி,
பச்சை மிளகாய், கொத்தமல்லி - சிறிது,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப,
பச்சை கொத்தமல்லி சட்னி - சிறிது,
இனிப்பு சட்னி அல்லது சாஸ் - சிறிது.
செய்முறை:
தானியங்களை ஊற வைத்துக் கரகரப்பாக அரைக்கவும். அத்துடன் உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி சேர்த்துப் பிசைந்து எண்ணெயில் வடைகளாகத் தட்டிப் போட்டுப் பொரித்தெடுக்கவும். தயிரை நன்கு அடிக்கவும். வடைகளை பாதி தயிரில் ஊற வைக்கவும். மீதி தயிரை வடைகளின் மீது ஊற்றி, கொத்தமல்லி சட்னி, இனிப்பு சட்னி அல்லது சாஸ் விட்டு அலங்கரித்து, மிளகு, சீரகத் தூள் தூவிப் பரிமாறவும்.
No comments :
Post a Comment