தேவையான பொருட்கள் :
கவுனி அரிசி-2 கப்
நெய்- தேவையான அளவு
கருப்பட்டி தூள் -ஒன்றரை கப்
தேங்காய் துருவல்-கால் கப்
செய்முறை :
கவுனி அரிசியை நன்றாக சுத்தம் செய்து இரு முறை அலசி முதல் நாள் மதியமே ஊற வைத்து விட வேண்டும்.மறுநாள் மாலை அதை களைந்து எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் அரிசியைப் போட்டு 2 கப் அரிசிக்கு 4 கப் அதிகமாகவே தண்ணீர் விட வேண்டும்.ஏனென்றால் இந்த வகை அரிசி மட்டும் அவ்வளவு சீக்கிரத்தில் வேகாது.7,8 விசில்களுக்கு கூடவே வேக விட வேண்டும்.
விசில் அடங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு கீழே இறக்கி வைக்க வேண்டும்.ஸ்டீம் போனதும் திறக்க வேண்டும். (நல்ல மணத்துடன் வாசம் வரும்)முக்கால் பதமாக குழைந்திருக்க வேண்டும்.கையால் எடுத்து பார்க்கும் போதே நசுங்கும் பதமாக இருக்கும்.அப்படி வேகவில்லை என்றால் கூட 2 கப் தண்ணீர் விட்டு மறுபடியும் 5 விசில்களுக்கு வேக விட்டு எடுக்கலாம். தப்பில்லை.
இப்பொழுது கரண்டியால் கிளரிக் கொண்டே அதில் நெய்,கருப்பட்டி தூள் சேர்த்துக் கிளற வேண்டும்.கடைசியாக தேங்காய் துருவலை சேர்த்துக்கவும்.சூடாக பறிமாறவும்.
குறிப்பு :
கண்டிப்பாக முதல் நாளே அரிசியை ஊற வைக்க வேண்டும்.
சரியான பதம் வரும் வரை வேக விட வேண்டும்.
இதன் வாசமே சாப்பிட ஆவலை உண்டாக்கும்.
சூடாக பறிமாறினால் தான் நெய் கலவை உறையாது.
No comments :
Post a Comment