தேவையான பொருட்கள்:
கம்பு - 100 கிராம்,
வெல்லம் - 200 கிராம், நெய் - 1 டீஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,
முந்திரி, பாதாம் - சிறிதளவு.
செய்முறை:
கம்பை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் கழுவி, தண்ணீரை வடித்து, மிக்சியில் ஒரு சுற்று ஓட விடவும். ரொம்பவும் நைசாக அரைக்கக் கூடாது. பிறகு அதில் 3 பங்கு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து பிரஷர் குக்கரில் 5 விசில் வைத்தெடுக்கவும். வெல்லத்தில் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி, பொங்கலில் சேர்க்கவும். நெய்யில் முந்திரி, பாதாம் வறுத்துச் சேர்த்துப் பரிமாறவும்.
1. கம்புக்கு இயல்பிலேயே ஒரு நல்ல மணம் உண்டு என்பதால், வாசனைக்காக ஏலக்காய் கூடத் தேவையில்லை.
2. நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து என எல்லாம் நிறைந்தது இது.
No comments :
Post a Comment