தற்போது பெரும்பாலான இளைய தலைமுறைக்கு தலையாய பிரச்சினையே தலை முடிதான். தலை முடி உதிர்வது, இள நரை, பொடுகு போன்றவைதான். இவை பெரும்பாலும், சுற்றுச்சூழல் கெட்டிருப்பது மற்றும் பணிச் சுமை காரணமாக ஏற்படுகிறது. இளநரையைப் போக்கும் தன்மை இலந்தை இலைக்கு உண்டு. இதை நன்கு அரைத்து தலையில் தடவி 10 நிமிடங்கள் வரை ஊறவிட்டு தலையை அலச இளநரை மாறும்.
இலந்தை இலையையும் சிறுகிளைகளையும் நன்கு அரைத்து கட்டிகள், கொப்புளங்களின் மீது வைத்துக் கட்ட அவை சீக்கிரம் பழுத்து உடையும். மேலும், இள நரை ஏற்பட்டதும் மனம் கலங்கிவிடாமல், உணவில் அதிகமான அளவு கறிவேப்பிலையை சாப்பிட்டு வர வெள்ளை முடிகள் மீண்டும் கருப்பாக மாறும்.
No comments :
Post a Comment