தேவையான பொருட்கள்:
வரகு - 1/4 கப்
சாமை அரிசி - 1/4 கப்
பாசிப்பருப்பு - 2 1/2 டேபிள் ஸ்பூன்
பால் - 1/8 கப்
வெல்லம் - 1/2 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன் (முந்திரியை வறுக்க)
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
முந்திரி - 10
உலர் திராட்சை - 15
செய்முறை:
முதலில் வெதுவெதுப்பான நீரில் வெல்லத்தை தட்டிப் போட்டு ஊற வைத்து, அடுப்பில் வைத்து பாகு தயார் செய்து இறக்கி வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, வரகு, சாமை அரிசி மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அதில் தேவையான அளவு நீரை ஊற்றி, மென்மையாக மசிக்கக்கூடிய அளவு வேக வைத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதனை மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் நன்கு வெந்த நிலையில் உள்ள வரகு கலவையில் வெல்லப் பாகு ஊற்றி கிளறி, அடுப்பில் வைத்து, 2 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் பால் சேர்த்து 3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
இறுதியில் அதில் மீதமுள்ள நெய் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் உலர் திராட்டிச சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், வரகு சாமை சர்க்கரை பொங்கல் ரெடி!!!
No comments :
Post a Comment