தேவையான பொருட்கள்
முளைக் கொள்ளு பால் - 100 மி.லி
தண்ணீர் - 200 மி.லி
காரட், தக்காளி, வெங்காயம்,
பீன்ஸ், மல்லி, கருப்பிலை, புதினா
இஞ்சி, பூண்டு எல்லாம் கலந்த - 1 கப்
மிளகுத்தூள், சீரகத்தூள், அல்லது
தேன், வெல்லம் - 25 கிராம்
முளைக் கொள்ளுப் பால் செய்முறை
எட்டு மணி நேரம் நீரில் ஊற வைத்து எட்டு முதல் பதினாறு மணி நேரம் ஈரத்துணியில் வைத்துக் கட்டினால் நல்ல வெள்ளை முளை வரும். இதை எடுத்து நீர் கலந்து அரைத்தால் முளைப்பால் ஆகும்.
செய்முறை:
எல்லாக்காய்கறி, கீரைகளைக் கழுவி தோல் சீவி காரட் திருகல் போல் செய்து நீரில் கலந்து சூடுசெய்யவும். கொதி நிலையில் மெதுவாக முளைக் கொள்ளுப்பாலை மெதுவாகக்கலக்கி ய படி வேகவிடவும். இனிப்பு அல்லது மிளகுசீரகத்தூள் கலந்து சூடு ஆறும் முன் வடிகட்டியும் வடிகட்டாமலும் சாப்பிடலாம்.
(காரம் தேவையென்றால் மிளகு, சீரகத் தூள் சேர்க்கலாம். இனிப்பு தேவையென்றால் தேன், வெல்லம் சேர்க்கலாம்)
No comments :
Post a Comment