தேவையானவை
குதிரைவாலி அரிசி - ஒரு கப்.
இட்லி அரிசி - ஒரு கப்
வெந்தயம் - 3 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
புதினா - ஒரு கட்டு
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
செய்முறை
அரிசி வகைகள், வெந்தயம், உளுத்தம்பருப்பு ஆகிய மூன்றையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். புதினாவை சுத்தம் செய்து கொள்ளவும். பச்சைமிளகாய் மற்றும் இஞ்சியை நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் சிறிது நெய்விட்டு புதினா, இஞ்சி மற்றும் பச்சைமிளகாயை வதக்கி அரைத்துக்கொள்ளவும். இந்தக்கலவை மற்றும் உப்பு சேர்த்து மாவில் ஒன்றாக கலக்கவும். பணியாரக்குழியில் நெய்விட்டு மாவை ஊற்றி இருபுறமும் வெந்தபின் எடுக்கவும்.
No comments :
Post a Comment