அதற்கு பின் ஒளிந்து கிடக்கும் கொள்ளையை அறிந்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறீர்களா ? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தை கொஞ்சம் கவனியுங்கள். இங்கு Hull என்பது நெல்லின் மீது இருக்கும் உமி, இதை நம்மால் உணவாக எடுத்து கொள்ள முடியாது. அடுத்த பகுதியான Bran என்பதில் தான் Protein, Fibre, Minerals, Calcium, Iron என அத்தனை சத்துக்களும் அடங்கி உள்ளது. இந்த பகுதிதான் பாலிஷ் என்ற பெயரால் நீக்கப்பட்டு வெள்ளை தீட்டபடுகிறது. அடுத்த பகுதிதான் கடைகளில் விற்கப்படும் வெள்ளை நிற சிறுதானியங்கள். இந்த நெல்லை மண்ணில் மீண்டும் விளைவிக்க உதவும் பகுதிதான் Germ. பாலிஷ் என்ற பெயரில் இந்த Bran என்னும் பகுதிதான் நீக்கபடுகிறது, அரிசியில் இருந்து நீக்கபடும் இந்த பகுதி எங்கு செல்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா நண்பர்களே ? Google பக்கத்திற்கு சென்று Bran Products என்று தேடி பாருங்கள். பின்பு உங்களுக்கே தெரியும். இது சிறு தானியங்களுக்கு மட்டுமல்ல, அரிசி மற்றும் கோதுமைக்கும் பொருந்தும்.
ஒரு கிலோவில் இருந்து எடுக்கப்படும் Bran பகுதியை கொண்டு மதிப்பு கூட்டி தயாரிக்கப்படும் பொருளும் உங்களிடமே விற்கபடுகிறது. இதை விட இன்னும் அதிக விலைக்கு. இது தான் நுகர்வு கலாச்சாரத்தின் உச்சகட்ட மோசடி.
No comments :
Post a Comment