சகோதர சகோதரிகளே!
சீமையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல பண்பாட்டு மற்றும் கலாச்சாரச் சீரழிவுகளை விட அதிகமான சீரழிவுகளைத் தருவது வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த விஷச் சீமைக்கருவேல மரங்களே!
இந்தச் சீமைக் கருவேலமரங்கள் சுற்றுப் புறச்சூழலுக்கு ஏற்படுத்தி வரும் அதிகமான பாதிப்பைக் கொண்டே அமெரிக்க தாவரவியல் பூங்கா "வளர விடக் கூடாத நச்சு மரப் பட்டியலில்"
இந்த கருவேல மரத்தைப் பட்டியலிட்டதோடு அதை ஒழிப்பதற்கான தீவிர பிரச்சாரத்தையும் செய்து வருகிறது அதன்படி
1) இது எந்த வித வறட்சியான சூழலிலும் வளரவும் விரைந்து பரவவும் கூடிய விஷச் செடி.
2) பூமியின் அடி ஆழம் சென்று நிலத்தடி நீரை உறுஞ்சுவதோடு மட்டுமல்லாது, காற்றிலுள்ள ஈரப்பசையையும் உறிஞ்சி, தான் வளகிற பகுதியையே வறட்சிப் பகுதியாக மாற்றிவிடும் கொடூரத்தனமை கொண்டது.
3) இந்த மரத்தின் இலை காய் விதை எதுவும் எதற்கும் பயன்படாதவை மட்டுமல்ல பயன்படித்தினால் தீங்கு விளைவிக்கும் தன்மையும் கொண்டவை.
4) இதனை விறக்குக்காக எரிக்கையில் ஏற்படும் புகை ஆஸ்துமா மூச்சுத் திணறல் முதலான நோய்களை ஏற்படுத்தக் கூடியது.
5) இது மிகக் குறைந்த அளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்தாலும் அதிக அளவு கரிமில வாயுவை (கர்பன் டை ஆக்ஸைடை) வெளியேற்றுவதால் சுற்றுப் புறச் சூழல் அதிக விஷத்தன்மை உடையதாக மாறிப் போகிறது.
6) அதன் காரணமாக இதன் நிழலில் கட்டி வைக்கப் படும் கால் நடைகள் மலட்டுத் தனமை அடைவதோடு கரு அடைத்திருக்கும் பட்சத்தில் ஊனமான கன்றுகளை ஈனவும் செய்கின்றன்.
இந்தத் தீமைகள் குறித்து மிகத் தெளிவாகப் புரிந்துகொண்ட அதிக படிப்பறிவு விகிதத்தில் இருக்கிற கேரள மாநில மக்கள் அரசின் ஒத்துழைப்போடு
அவர்கள் மாநிலத்தில் கருவேல மரங்களை முற்றிலுமாக அழித்துவிட்டார்கள்
அதனாலயே அந்த மாநிலம் பசுமையான இயற்கைச் சுழலை தொடர்ந்து பராமரிக்கமுடிகிறது.
இந்தத் தீய விஷச் செடியின் தீமைகளை முற்றிலும் அறிந்து உச்ச நீதி மன்றமும் உடன் இந்த கருவேல மரங்களை முற்றிலும் அழிக்கும் படியான அறிவுரையையும் உத்திரவையும் மாநில அரசுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வழங்கியுள்ளது.
கருவேலம் புதர்களை முற்றிலுமாக வேரோடு அழிக்கும் திட்டத்தைத் துவக்கிவைத்ததோடு மாவட்டத்தில் இந்த விஷச் செடியை வேரோடு அழிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறார்.
பொது மக்களின் பூரண ஒத்துழைப்போடு இதுவரை 10000 ஏக்கருக்கும் மேலாக இந்த கருவேலம் மரத்தை வேரோடு அழித்ததோடு மட்டுமல்லாது தொடர்ந்து அகற்றியும் வருகிறது
தற்சமயம் சுற்றுப் புறச் சூழலைப் பாதுகாக்கும் திட்டத்தின் அடிப்படையில் கருவேல மரங்களை அடியோடு அழிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
இந்தக் தீமையை அவரவர் பகுதிகளில் மக்களின் ஒத்துழைப்போடு ஒழித்து தமிழகத்தையும் ஒரு செழிப்பான பூமியாக மாற்ற ஆவன செய்யவேண்டும் என்கிற அன்பான கோரிக்கையோடு அதிகப் பட்சமாக இந்தத் தகவலை அனைவரிடமும் கொண்டு செல்ல எங்கள் விழிப்புணர்வுப் பேரணிக்கான நகலையே
தகவலுக்காக பதிவு செய்திருக்கிறோம் இதனை தங்கள் தளங்களில் பகிர்வு செய்ய வேணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Services
WELCOME
Important Services
- Home
- AnnaUnivNews
- Cricket News
- தமிழில் தொழில்நுட்ப தகவல்கள்
- School News
- Examination Tips
- Health Tips
- Samaiyal Tips
- Facebook Tricks
- Blogger Tips
- Computer Tricks
- SIM details
- Celebrity Birthdays(Daily)
- Cinema News
- watch trailers
- Colleges Info(தமிழ்நாடு)
- Langauges Learning
- GTA Save Games
- Earn Money Online
- Model Letters
- Dote News
- General Knowledge
- Placement Info
- Gate Books
- About
- Contact
- Privacy Policy
Monday, 4 May 2015
சீமைக் கருவேல மரங்களின் தீமைகள்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment