நான் வேண்டுமென்றே பழக்கடைகளுக்குச் சென்றால் "இது இம்போர்ட்டடா....?! அப்படீன்னா இது வேண்டாம்னே... இது ஏதோ உடலுக்கு ரொம்பக் கெடுதலாம்..." என்று நாலு கஸ்டமர் இருக்கும்போது சொல்லிவிட்டு வேறுக் கடைக்குச் செல்வேன்.
ஆம் நண்பர்களே...? விவரம் தெரிந்த நாம் இவற்றை சைலண்டாகப் பார்த்துவிட்டு வாங்காமல், தேவையானதைத் தேடி வாங்கிக்கொள்கிறோம். ஆனால், படித்திராத, விழிப்புணர்வற்ற மக்கள் என்ன செய்வார்கள்...? அவர்களுக்கு நம்மால் முடிந்த விழிப்புணர்வைத் தரவே, நான் வலியச் சென்று இதைச் சொல்லிவிட்டு வருகிறேன்.
பப்பாளி, திராட்சை போன்ற இப்போதைய ஹைப்ரிட் வெரைட்டிகள் பலவற்றில் விதையே இருப்பதில்லை. இவை நம் உடலுக்கும், மண்ணுக்கும் நல்லதல்ல. விதையில்லாதப் பழங்களை அதிகம் பயன்படுத்தினால், நாளடைவில் அதேப் பழங்களுக்கான மரங்களற்று செயற்கை முறையிலேயே அப்பழங்கள் தயாரிக்கப்படும் வாய்ப்புகளும் அதிகம்.
முக்கியமாக இறக்குமதி செய்யப்பட்ட பழவகைகளில் விதைகள் இருப்பதில்லை. கவனமாக இருங்கள். விலை குறைவாகக் கிடைத்தாலும் இவற்றை எக்காரணம் கொண்டும் வாங்காதீர்கள்.
நமது மண்ணுக்கு அழகு சேர்க்கக்கூடிய, நம் மண்ணைக் காப்பாற்றக்கூடிய விதையுள்ளப் பழங்களை மட்டும் வாங்கிச் சுவைப்போம்.
நம் நாட்டுக்காக நாம் சுதந்திரப் போரில்தான் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. குறைந்தபட்சம் இதுபோன்ற அன்னிய நாடுகளின் மறைமுகப் போரை புரிந்துக்கொண்டு இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு உணவுப் பொருளையும் வாங்காமல் தவிர்ப்போம். நண்பர்களிடம், உறவினர்களிடம் இதைப் பகிர்வோம்.
நம்மை, நாட்டை, நம் சந்ததியினரைக் காப்பாற்றுவோம்.
No comments :
Post a Comment