தினமும் நடைபயிற்சி செய்து வந்தால் உடல் வலிமை பெறுவதுடன், தேவையான சக்தியும் கிடைக்கிறது. தினமும் செய்ய முடியவில்லை என்றாலும் வாரம் 5 நாட்கள் செய்தால் போதுமானது. நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்..அவை...
* இரத்த ஓட்டம் சீரடையும்
* நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும்
* நாளமில்லா சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறும்.
* அதிகப்படியான கலோரிகளை (Calories ) எரிக்க உதவுகிறது
* முதுகு நரம்புகளை உறுதியாக்குகிறது
* அடிவயிற்றுத் தொப்பையைக் குறைக்கிறது
* மூட்டுக்களை இலகுவாக்குகிறது
* எலும்புகளுக்கு உறுதியளிக்கிறது
* உங்கள் கால்களையும் உடலையும் உறுதியான அமைப்பில் வைக்கிறது
* கெட்ட கொழுப்புச்சத்தின் (Choles terol) அளவை குறைக்கிறது
* மாரடைப்பு சர்க்கரை நோய் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கிறது
* உடல் மற்றும் மனச்சோர்வை குறைக்கிறது
* நல்ல தூக்கம் வர உதவுகிறது
* நல்ல கண்பார்வையை வழங்குகிறது
- முறையாக நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் நலமாக வாழலாம். வீண் மருத்துவச் செலவை தவிர்க்கலாம். முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் நடைப்பயிற்சியை தினமும் 40 நிமிடங்கள் செய்தால் கூட போதுமானது.
No comments :
Post a Comment