WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Saturday, 2 May 2015

வரகு சாமை சர்க்கரை பொங்கல்

தேவையான பொருட்கள்:

வரகு - 1/4 கப்
சாமை அரிசி - 1/4 கப்
பாசிப்பருப்பு - 2 1/2 டேபிள் ஸ்பூன்
பால் - 1/8 கப்
வெல்லம் - 1/2 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன் (முந்திரியை வறுக்க)
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
முந்திரி - 10
உலர் திராட்சை - 15

செய்முறை:

முதலில் வெதுவெதுப்பான நீரில் வெல்லத்தை தட்டிப் போட்டு ஊற வைத்து, அடுப்பில் வைத்து பாகு தயார் செய்து இறக்கி வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, வரகு, சாமை அரிசி மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அதில் தேவையான அளவு நீரை ஊற்றி, மென்மையாக மசிக்கக்கூடிய அளவு வேக வைத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதனை மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் நன்கு வெந்த நிலையில் உள்ள வரகு கலவையில் வெல்லப் பாகு ஊற்றி கிளறி, அடுப்பில் வைத்து, 2 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் பால் சேர்த்து 3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

இறுதியில் அதில் மீதமுள்ள நெய் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் உலர் திராட்டிச சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், வரகு சாமை சர்க்கரை பொங்கல் ரெடி!!!

பொங்கல் குழம்பு


தேவையானவை:

பூசணி, பரங்கி, கத்தரி, காரட், உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு,
வாழைக்காய் - சற்று பெரிதாக நறுக்கிய துண்டுகள் தலா கால் கப்
மொச்சைக் கொட்டை, பட்டாணி - கால் கப்
அவரை, கொத்தவரை, பீன்ஸ் - கால் இன்ச் நீள துண்டுகள் தலா 1/8 கப் (கால் கப்பில் பாதி)
துவரம் பருப்பு - கால் கப்
புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
பெருங்காயம் - ஒரு துண்டு
கடலைப் பருப்பு - 4 தேக்கரண்டி
தனியா - 6 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 10 முதல் 15
துருவிய தேங்காய் - அரை கப்
தாளிக்க:
கடுகு - 4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை
கொத்தமல்லி தழை

செய்முறை:

புளியுடன் 4 கப் நீர் சேர்த்துக் கரைக்கவும். மேலே குறிப்பிட்டுள்ள காய்கறிகளை அதன்படி நறுக்கி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். 3 மேசைக்கரண்டி எண்ணெயில் முறையே பெருங்காயம், கடலைப் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல், தேங்காய் முதலியவற்றை தனித் தனியே சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்தவற்றை ஆற வைத்து மிக்ஸியில் பொடியாக்கவும்.

காய்கறித்துண்டுகளை நீர் சேர்த்து நசுங்கும் பதத்திற்கு வேக வைத்து வடிகட்டவும்.புளிக்கரைசலைக் கொதிக்கவிட்டு சற்று புளிவாசனை போனதும் பாதி வெந்த காய்கறிகள், தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து சேர்ந்து கொண்டதும், அதில் பொடி செய்த கலவை, வெந்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

10 நிமிடம் கொதித்ததும் இறக்கி, ஒரு மேசைக்கரண்டி எண்ணெயில் கடுகு, வாய் கீறிய பச்சைமிளகாய் சேர்த்து தாளித்து போடவும். மேலே கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்க்கவும்.

கமகமக்கும் பொங்கல் ஸ்பெஷல் குழம்பு ரெடி. விருப்பப்பட்டால் இதில் ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்க்கலாம். எல்லா காய்கறிகளும் கிடைக்காவிட்டால் இருக்கும் காய்கறிகளை வைத்தும் இந்தக் குழம்பு செய்யலாம். முருங்கை, முள்ளங்கி, வெங்காயம் இதில் சேர்ப்பதில்லை.

எல்லாரும் சர்க்கரைப் பொங்கலுடன் இந்த ஸ்பெஷல் குழம்பும் செய்து பொங்கலை கோலாகலமாகக் கொண்டாடுங்கள்!

பொங்கலோ பொங்கல்!!

வரகு சக்கரை பொங்கல்

தேவையானவை:

வரகு -100 கிராம்
பாசி பருப்பு- 25கிராம்
நெய் - தேவையான அளவு
ஏலக்காய்-சிறிது
வெல்லம்- 50 கிராம்
முந்திரி, பாதாம், பிஸ்தா, உலர்ந்த திராட்சை - சிறிது

செய்முறை:

வரகு மற்றும் பாசிபருப்பை களைந்து குக்கரில் வேக வைக்கவும். வெல்லத்தை மண் நீக்கி இளம் பாகாக எடுத்துக் கொள்ளவும்.

வாணலியை சூடாக்கி, நெய் விட்டு, முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை இவற்றை வறுக்கவும். வரகு, பாசி பருப்பு கலவையை சேர்க்கவும்.

பின்னர், வெல்லப்பாகையும் சேர்த்து நன்கு கிளறி எடுக்கவும்.

அடுப்பிலிருந்து இறக்கி, பிஸ்தா பருப்புகளை, இரண்டு துண்டுகளாக குறுக்கே நீள வாக்கில் வெட்டி, தூவவும்.

சுவையான வரகு பொங்கல் தயார்.

நுங்குவின் மருத்துவ குணங்கள் :-

பனைமரத்தின் பரிசான நுங்கு, பல நன்மைகளை அள்ளி வழங்குகிறது. அவை பற்றி...

* நுங்கு குளிர்ச்சியூட்டக்கூடியது. இதற்கு, கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம்.

* நுங்கு நீர், வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டும். இதனால் சாப்பிடப் பிடிக்காமல் இருப்பவர்களுக்கு நல்ல பசி ஏற்படும்.

* மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு இரண்டுக்குமே நுங்கு ஒரு சிறந்த மருந்து.

* சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கைச் சாப்பிட்டால் தாகம் அடங்கிவிடும்.

* ரத்தசோகை உள்ளவர்கள் நுங்கைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும்.

* நுங்கில் 'அந்த்யூசைன்' எனும் ரசாயனம் இருப்பதால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்க் கட்டிகள் வருவதைத் தடுக்கும்.

* வெயில் காலத்தில் அம்மை நோய்கள் வருவதைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.

* கோடை காலத்தில் ஏற்படும் வியர்க்குருக்கள் மீது நுங்கைத் தடவினால் அவை மறைந்துவிடும்.

* நுங்கில் வைட்டமின் ஏ, பி, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துகள் நிறைந்திருக்கின்றன.

* கோடை காலத்தில் உடம்புக்குத் தேவைப்படும் சர்க்கரையையும், தாதுப் பொருட்களையும் சரிசம அளவில் கொடுக்கக்கூடியது நுங்கு. எனவே கோடைக்கு ஏற்ற வரப்பிரசாதமாக இது விளங்குகிறது.

சிறுதானிய இட்லி (கவுனியும் சேர்த்தது)


தேவையானவை
வரகு, திணை, சாமை , குதிரைவாலி, பனி வரகு எல்லாம் கலந்து -2 1/2 கப்

கவுனி அரிசி 1 1/2 கப்
கைகுத்தல் 1 கப்
இட்லி அரிசி 1 கப்

உளுந்து 1 1/4 கப்

கவுனி அரிசியை மட்டும் 10 மணி நேரம் ஊற வைக்கணும். அது போல அரிசி போட்டு அரைக்கும் போதும் , கவுனி போட்டு 2 /3 நிமிடம் கழித்து மற்ற எல்லா அரிசிகளையும் போட வேண்டும். 10 மணி நேரம் ஊறுவதால் எளிதில் மசிந்து விடும் . மற்றவை எல்லாம் வழக்கம் போலவே ....ஊறவைப்பதும், அரைப்பதும் ,கலப்பதும் ......சுவைப்பதும்.

Related Posts Plugin for WordPress, Blogger...