900 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணிபுரிந்த ஆல்வா வாசு,மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்தார்..
கல்லீரல் பாதிப்பால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 6 மாதங்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை டாக்டர்கள் காப்பாற்ற முடியாது என்று கூறியதால் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நேற்று இரவு சரியாக 10.45 மணி அளவில் காலமானார்.
தொடக்கத்தில் மணிவண்ணனிடம் துணை இயக்குநராக பணியாற்ற துவங்கிய அல்வா வாசு பின் குணசித்திர மற்றும் காமெடி வேடங்களில் நடித்து வந்தார்..
ஜாமீன் கடல்லையே இல்லையாம்", இங்க்லிஷ்காரன் படத்துல மைக் 1 மைக் 2 கல்யாண காமெடி..இன்னும் நிறைய எங்களை சிரிக்க வைத்ததற்கு நன்றி..,.
இயக்குநராக அனைத்து தகுதிகளும் இருந்தும் கடைசி வரை தன்னை தாழ்த்தி கோமாளி போல் சித்தரித்து நம்மை சிரிக்க வைத்தவர்.. நடிகர் அல்வா
வாசுவின் மனைவி திருமதி. அமுதா வாசுதேவன். இவர்களுக்கு கிருஷ்ண ஜெயந்திக்கா என்ற மகள் உள்ளார்.
No comments :
Post a Comment