WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Showing posts with label Tamil cinema news. Show all posts
Showing posts with label Tamil cinema news. Show all posts

Wednesday 4 October 2017

ஸ்பைடர் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல்: Spyder Box Office Collections


ஸ்பைடர் 6 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்:


சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் பிளாக்பஸ்டர் என்பது தெரியவந்துள்ளது.உலகம் முழுவதும் 6 நாட்களில் ஸ்பைடர் 106 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

ஸ்பைடர் படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்தது.முதல் நாளே 51 கோடி வரை வசூல் செய்தது.

புகழ்பெற்ற இந்திய திரைப்படத் துறையின் ரமேஷ் பாலா உறுதிப்படுத்தியுள்ளார்.

ஸ்பைடருக்கு தமிழிலும் நல்ல வரவேற்புக் கிடைத்தது. ஸ்பைடர் படத்தின் வசூல் விவரம் :
AP/TS – ₹ 53 Cr
TN – ₹16.5 C
KA – ₹11.5 C
KE – ₹2.5 C
ROI – ₹6.75 C
USA – ₹9.75 C
ROW – ₹6
C T – ₹ 106 Cr



பிரபல திரைப்பட இயக்குனர் AR முருகதாஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே சமயத்தில் ஒரு படம் எடுப்பது ஒரு கடினமான பணி என்று இயக்குனர் கூறினார்.

மகேஷ் பாபுவுடன் தெலுங்கில் கஜினி மற்றும் துப்பாக்கியை உருவாக்க விரும்புகிறார் இயக்குனர் AR முருகதாஸ்.

ரகுல் ப்ரீத் கதாநாயகியாக​ நடிக்க​, எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். ஹேரீஸ் ஜெயராஜ் இசையமத்திருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் காட்சியில் பார்த்தபோது, ​​"படம் நன்றாக இருக்கிறது,திரைப்படம் நல்ல செய்தியைக் கொண்டுள்ளது." என்றார்.

Thursday 28 September 2017

நடிகர் தனுஷ் உடன் இணையும் ப்ரேமம் நாயகி Actor Dhanush acts with Next Premam Heroin


நடிகர் தனுஷ் உடன் ஏற்கனவே ப்ரேமம் படத்தில் நடித்த​ கதாநாயகிகளில் ஒருவரான​ அனுபமா பரமேஸ்வரன் உடன் கொடி படத்தில் நடித்தார்.


அவரை தொடர்ந்து மற்றொரு கதாநாயகியான மடோனா செபஸ்டியன் உடன் தனுஷ் இயக்கிய​ பா பாண்டி படத்தில் நடித்தார்.


தற்போது அவரை தொடர்ந்து மற்றொரு கதாநாயகியான சாய் பல்லவி மாரி 2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக​ நடிக்கிறார்.இதனை தனுஷின் வுண்டார்பார் நிறுவனம் தயாரிக்கிறது.மேலும் இப்படத்தில் டொவைணொ தாமஸ் வில்லனாக நடிக்கிறார்.


Saturday 23 September 2017

கருக்கலைப்பு பற்றிய படத்தில் சாய் பல்லவி Sai Pallavi in ​​the film about abortion

  கருக்கலைப்பு பற்றிய  படத்தில் சாய் பல்லவி



சாய் பல்லவி "பிரேமம்" மலையால படம் மூலம் தென்னிந்திய முழுவதும் பிரபலமாகிவிட்டார்.அவர் நடித்த "பிடா" தெலுங்கு படம் வசூல் பார்த்தது.அவரது ரசிகர்கள் அவர் எப்போது தமிழில் நடிப்பார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.. இந்நிலையில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகும் "கரு" படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.. இப்படம் கருக்கலைப்பு பற்றிய படம் என்பதால் இந்த​ தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக​ விஜய் கூறினார்

Friday 18 August 2017

நகைச்சுவை நடிகர் 'அல்வா' வாசு காலமானார் - RIP Comedy Actor Alva Vasu


900 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய நகைச்சுவை நடிகர் 'அல்வா' வாசு காலமானார்


900 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணிபுரிந்த ஆல்வா வாசு,மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்தார்..
கல்லீரல் பாதிப்பால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 6 மாதங்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை டாக்டர்கள் காப்பாற்ற முடியாது என்று கூறியதால் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

நேற்று இரவு சரியாக​ 10.45 மணி அளவில் காலமானார்.

தொடக்கத்தில் மணிவண்ணனிடம் துணை இயக்குநராக​ பணியாற்ற​ துவங்கிய அல்வா வாசு பின் குணசித்திர மற்றும் காமெடி வேடங்களில் நடித்து வந்தார்..
ஜாமீன் கடல்லையே இல்லையாம்", இங்க்லிஷ்காரன் படத்துல மைக் 1 மைக் 2 கல்யாண காமெடி..இன்னும் நிறைய எங்களை சிரிக்க வைத்ததற்கு நன்றி..,.

இயக்குநராக அனைத்து தகுதிகளும் இருந்தும் கடைசி வரை தன்னை தாழ்த்தி கோமாளி போல் சித்தரித்து நம்மை சிரிக்க வைத்தவர்.. நடிகர் அல்வா

வாசுவின் மனைவி திருமதி. அமுதா வாசுதேவன். இவர்களுக்கு கிருஷ்ண ஜெயந்திக்கா என்ற மகள் உள்ளார்.

Wednesday 16 August 2017

வி.ஐ.பி-2 வசூல் வேட்டை பாக்ஸ் ஆபிஸ் Velai Illatha Pattathari 2 Box Office Collections



தனுஷ் ரசிகர்கள் வேலையில்லா பட்டதாரி 2 படத்திற்காக காத்துக் கொண்டு இருந்தனர்..



கடந்த வெள்ளியன்று,வெளியான விஐபி 2 படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்தார்..வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படம் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.. 

தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸின் தொடக்க வார இறுதியில் வசூல் 18Crore ஆனது, இது 2-நீளமான தொடர்ச்சியான விடுமுறை நாட்கள் (திங்கள் - கிருஷ்ணா ஜெயந்தி மற்றும் செவ்வாய்க்கிழமை - சுதந்திர தினம்) 25CR வரை வசூல் செய்துள்ளது. 

கேரளாவில், இந்த திரைப்படம் 4Cr பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்துள்ளது..கேரளாவில் இதுபோன்ற வசூல் தாக்கத்தை ஏற்படுத்திய முதல் தனுஷ் திரைப்படம் இதுதான். 

கலைப்புலி.எஸ்.தானு மற்றும் தனுஷ் ஆகியோர் இணைந்து வேலாயில்லா பட்டதாரி 2 தயாரித்திருக்கிறார்கள்.பாலிவுட்டின் நடிகை கஜோல் மற்றும் சீன் ரால்டன் இசையமைத்திருந்தார்.

VIP 2 Success Meet ல் தனுஷ்,சௌந்தர்யா,தாணு,விவேக் பேசியது



கலைப்புலி எஸ்.தாணு அவர்களின் வி கிரியேஷன்ஸ் மற்றும் நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இணைந்து தயாரித்து, சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான படம் ‘வேலையில்லா பட்டதாரி–2’.
‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், கஜோல், அமலாபால், சமுத்திரக்கனி மற்றும் விவேக் நடித்துள்ளனர்.
கடந்த 11-ம் தேதி வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. மேலும் இந்த படத்தின் ஹிந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷன்கள் இம்மாதம் 18-ம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் வெற்றியை கொண்டாடும்வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று மதியம் தி பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ், விவேக், இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் கலந்து கொண்டார்.
படத்தின் கதாநாயகன் தனுஷ் பேசியபோது, “இந்தப் படத்தின் கதையை இயக்குநரிடம் கொடுக்கும்பொழுதே வி.ஐ.பி. முதல் பாகம் அளவிற்கு இந்த இரண்டாம் பாகத்தின் கதை இருக்காது என்று சொல்லிதான் கொடுத்தேன்.
முதல் பாகத்தோடு தான் அனைத்து விஷயங்களையும் ஒப்பிடுவார்கள் என்பது தெரியும். ரீமேக் படங்கள் செய்யும் போதும், ஒரிஜினல் படத்தில் நடித்தவர்களின் நடிப்புதான் சிறப்பாக இருந்ததாக கருதுவார்கள். இது இயல்புதான்.
இருந்தாலும் படத்திற்குக் கிடைத்துள்ள இந்த மிகப் பெரிய வெற்றி எனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. படத்திலிருக்கும் வலுவான கதைதான் படத்தின் வெற்றிக்கு முதல் காரணம்.
எனது திரையுலக வாழ்வில் முதன்மையான 3 வெற்றிப் படங்களில் இப்படமும் இருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் நேர்மறையான விஷயங்களைச் சொன்னது மட்டுமே. அன்பைப் பரப்பியதால் மட்டுமே மக்கள் குடும்பமாக வந்து படத்தைப் பார்க்கிறார்கள்.
பாஸிட்டிவிட்டிக்கு என்றைக்குமே ஒரு எனர்ஜி இருக்கும், அதுதான் இந்தப் படத்தில் ஒர்க் அவுட்டாகி இருக்கிறது. ஒரு தாய் இல்லாத வீட்டில் ஒரு தந்தை தாயாகவும், மகனுக்கு நல்ல தோழனாகவும் இருக்க வேண்டும். அதேபோல, படத்தின் இறுதியில் வில்லியாக வரும் பெண் தோற்பதுதான் தமிழ் சினிமாவின் வழக்கமான கிளைமாக்ஸ். ஆனால் இதில் அப்படி இருக்கக் கூடாது. ஆண், பெண் இருவருமே சமம் என்று கருத்தினை வலியுறுத்திதான் கதையை மாற்றி அமைத்திருந்தேன்.
ஒரு சிலர் படத்தில் சொல்லப்பட்ட திருக்குறள் பாக்களுக்கு அர்த்தம் சொல்லியிருக்கலாமே என்றார்கள். அப்படி சொல்லியிருந்தால் யாருமே அதற்கான அர்த்தம் என்னவென்று பார்த்திருக்க மாட்டார்கள். வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களுமே திருக்குறளில் இருக்கிறது என மக்களுக்கு தெரிந்து, படித்துப் பார்க்க வேண்டும். எனது நண்பர்கள் பலர் இப்போது திருக்குறள் புத்தகம் வாங்கிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவே இப்படத்தின் வெற்றியாக கருதுகிறேன்.
இப்படத்தின் கதையைத் தாண்டி, முதுகெலும்பு என்றால் தாணு சார் என் மீது வைத்திருந்த நம்பிக்கை. ஒரு நடிகராக எனக்கொரு மார்க்கெட் இருக்கிறது. அதைத் தாண்டி கதையின் மீது நம்பிக்கை வைத்து தாராளமாக செலவு செய்தார் தாணு சார். இந்தளவுக்கு பிரம்மாண்டமான வெற்றி என்பது தாணு சார் இல்லாமல் நடந்திருக்குமா என்று தெரியவில்லை.
இந்த ‘வி.ஐ.பி-2’ படம் தென்னிந்தியாவில் பெரும் வெற்றியைப் பெற்றதையடுத்து வட இந்தியாவில் முதலில் 420 தியேட்டர்களை கிடைத்திருந்த நிலையில், இப்போது 1600 தியேட்டர்கள் புக் ஆகியுள்ளது. கண்டிப்பாக இந்தப் படம் ஹிந்தியிலும் நல்ல வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.
‘வேலையில்லா பட்டதாரி 3’ கண்டிப்பாக வெளிவரும். எப்போது என்பது சரியாக தெரியவில்லை. இரண்டாம் பாகத்துக்கு இருந்த பிரச்சினை, 3-ம் பாகத்துக்கு இருக்காது. அப்படத்தையும் நான் எழுதி முடித்தவுடன்தான் மற்ற விஷயங்கள் முடிவு செய்யப்படும்…” என்றார் தனுஷ்.
நடிகர் விவேக் பேசும்போது, “தாணு சாரிடம் ஒரு இன்டியூஷன் இருக்கிறது. ஏனெனில் வளர்ந்து வருகின்ற கதாநாயகனாக இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அப்போதே அவர் சூப்பர் ஸ்டார் என்று இனம் கண்டவர். இப்போது அவருடைய ஆசிர்வாதமான கரங்கள் தனுஷிற்கு கிடைத்துள்ளது.
மேலும் டாப் 10 ஹீரோக்களில் தனுஷ் அவர்கள் இப்போது இடம் பிடித்திருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. வைரமுத்து அவர்கள் ஒரு பாடலில் சொன்னது போல் ‘சிங்கத்தின் பாலாகவே இருந்தாலும் அதை தங்கக் கிண்ணத்தில் வைத்துதான் கொடுக்க வேண்டும்.’ அதே போல் தனுஷ் சிங்கத்தின் பால்.. தாணு ஸார் ஒரு தங்கக் கிண்ணம்…” என்று கூறினார்.
மேலும் “பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் நிறுவனங்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். நீங்கள் தயாரித்து வெற்றியடையும் படங்களின் வியாபரத்தின் ஒரு சிறு பகுதியை, ஒரு சதவிகிதத் தொகையையாவது கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் செலவிட வேண்டும்…” என்று கேட்டுக் கொண்டார்.
இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசுகையில், “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் இப்போது பெரும் வெற்றியடைந்துள்ளது. இதற்கு முதல் காரணமாக இருந்த தாணு ஸாருக்கு எனது முதல் நன்றி. என்னை தன்னுடைய மகள் போல் பார்த்துக் கொண்டார்.
பொதுவாகவே சீக்வல் படங்கள் எடுப்பதில் பெரிய சவால் இருக்கும். அதைத் தாண்டி நான் இயக்கிய படம் வெற்றி அடைந்திருப்பதில் எனக்கு பெரிய மகிழ்ச்சி. தாணு சார் பாக்ஸ் ஆபிஸ் விவரம் பற்றி சொன்னதை கேட்டபோது இது நான் இயக்கிய படமா என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் ‘வி.ஜ.பி-3’-ம் பாக்த்தையும் நானே இயக்குவேன்..” என்றார்.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது, “இந்த ‘வி.ஐ.பி-2’ திரைப்படம் தற்போது உலகமெங்கும் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் இருந்து அழைத்த நண்பர் டாப் 10 ஹீரோ லிஸ்ட்டில் ‘வி.ஐ.பி-2’ படத்தின் மூலமாக தனுஷூம் இடம் பிடித்துள்ளார் என்று கூறினார். ‘வி.ஐ.பி-2’ தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது…” என்று அவர் கூறினார்.
பின்னர் வெளிநாட்டிலும், தமிழ்நாட்டிலும் (மாவட்ட வாரியாக) ‘வி.ஐ.பி.-2’ படத்தின் வசூல் பற்றிய புள்ளி விவரங்களை கூறினார். இந்தப் படத்தின் வெற்றிக்கு மிகவும் பலமாக இருந்த நடிகர் தனுஷ், இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விவேக் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
நடிகர் விவேக் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இந்தப் படத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தில் பத்து லட்சம் ரூபாயை கிராமப்புற பள்ளிகளை சீரமைக்கு தருவதாகவும் மேடையிலேயே ஒத்துக் கொண்டார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.

Monday 14 August 2017

Na.Muthukumar 1st Year முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி-நா.முத்துக்குமார்
ஆங்கிலம் இல்லாத நிறைய நல்ல தமிழ் பாடல்களை நமக்கு தந்தவர்...
காதல் பாடலாக இருந்தாலும் சரி,அப்பாக்கள் பற்றிய பாடலாக இருந்தாலும் சரி,அம்மாக்கள் பற்றிய பாடலாக இருந்தாலும் சரி,மகன்,மகள்கள் பாடலாக இருந்தாலும் சரி.
இன்னும் நிறைய பாடல்கள் இருக்கிறது.
அனைத்தும் ஆங்கிலம் இல்லாத தூய தமிழ் பாடல்கள்..
நீங்கள் மண்ணைவிட்டு மறைந்திருந்தாலும்
உங்கள் பாடல்களால் எங்கள் மனதில்
என்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்


Saturday 19 December 2015

2015ஆம் ஆண்டின் சூப்பர் ஹீரோக்கள்: கமல், அஜித், தனுஷ்!


   
இந்தாண்டு முடிய இன்னும் இரண்டு வாரங்களே கூட இல்லை. இந்நிலையில் இந்தாண்டின் சூப்பர் ஹீரோக்கள் யார்? என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டாமா?

உலகநாயகன் கமல்ஹாசன்.

இந்த வருடம் முழுவதும் தன் ரசிகர்களை பரபரப்பாக இருக்க செய்தவர் இவர். கமல் நடிப்பில் இவ்வருடம் மட்டும் மூன்று படங்கள் வெளியாகின.

உத்தமவில்லன் பாக்ஸ் ஆபிஸில் தோற்றாலும் கலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் மகா கலைஞன் இவன் என்பதை நிரூபித்தது அப்படம். படத்தின் ஒவ்வொரு ப்ரேமிலும் தன் கண்களை கூட நடிக்கச் செய்திருந்தார். கூடவே யூத் கமலாகவும் தோன்றி இளம் நடிகர்களுக்கு சவால் விட்டுக் கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மலையாள ரீமேக் பாபநாசம் படத்தை வெகு விரைவில் நடித்துக் கொடுத்தார். ஒரு மூத்த நடிகர் என்று பாராமல் எந்த ஹீரோயிசமும் காட்டாமல் க்ளைமாக்ஸில் போலீசிடம் அடிவாங்கி நம்மை கலங்கடித்தார். இப்படம் தமிழக குடும்பங்களை மிகவும் கவர்ந்தது.

இவற்றைத் தொடர்ந்து தூங்காவனம் என்ற மாறுபட்ட காவியத்தையும் கொடுத்தார். முதல்படத்தில் குடும்பத்திற்காக ஏங்கியவர் இதில் மகனுக்காக போராடி வெற்றியும் பெற்றார். ஒரு யதார்த்த போலீஸ் ஆக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அடுத்த ஹீரோ தல அஜித்…

இந்தாண்டின் தொடக்கத்திலும் இறுதியிலும் இரண்டு மாபெரும் ஹிட்டுக்களை கொடுத்துவிட்டு அமைதியாக இருக்கும் நடிகர் அஜித். என்னை அறிந்தால் என்ற குடும்ப சார்ந்த கதையை கம்பீரத்துடன் கொடுத்தார்.

வில்லனுக்கும் சமவாய்ப்பு கொடுத்து அதிலும் தன்னை உயர்த்தி காண்பித்தார். படத்தின் பாடல்களும் அஜித்தின் விதவிதமான கெட்டப்புகளும் படத்திற்கு பக்கபலமாய் அமைந்தது.

தனது அடுத்த வேதாளம் படத்தை தீபாவளிக்கு கொடுத்துவிட எண்ணி, தனக்கு ஏற்பட்ட விபத்தையும் பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்தார். படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்ததை போன்று படமும் வசூலில் தெறிக்க விட்டது.

இவர்களைத் அடுத்து தனுஷ்…

அனேகன், ஷமிதாப், மாரி ஆகிய 3 படங்களைத் தொடர்ந்து இன்று (டிச. 18) தங்கமகன் படத்தையும் வெளியிட்டுள்ளார். இதனிடையில் வை ராஜா வை படத்தில் கொக்கி குமார் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்து பரபரப்பை உண்டாக்கினார்.

இதில் மாரி படம் தனுஷ் ரசிகர்களுக்கான மாஸான படம் என்றால் தங்க மகன் ஒட்டு மொத்த குடும்பத்திற்கான படம் என்றே சொல்லலாம். இப்படம் இன்று வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

இவை மட்டுமில்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் தரமான படங்களை கொடுத்து வருகிறார் தனுஷ். தான் நடித்த படங்களை தயாரித்தது மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை, விஜய்சேதுபதி நடித்த நானும் ரௌடிதான் உள்ளிட்ட கமர்ஷியல் வெற்றிப் படங்களையும் தயாரித்து இந்த வருடத்தில் கொடுத்திருந்தார்.

மேலும் தேசிய விருது பெற்ற காக்கா முட்டை கமர்ஷியலாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. வெனிஸ் திரைப்பட விழா உள்ளிட்ட பல விருதுகளை வென்ற விசாரணை படத்தையும் இவரே தயாரித்து இருக்கிறார். இம்மாத இறுதியில் வெளியாகவிருந்த விசாரணை தற்போது அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Tuesday 3 November 2015

Tamil Actors And Actress List-2015 by Wikipedia

List of Tamil Actors and Actresses
For the list of all actors who are or were active in Tamil cinema, irrespective of origin, see List of Tamil film actors.
This list outlines the names of notable film actors and actresses of ethnic Tamil origin. The names are ordered by the actors' first or stage name.
Actors:
Arjun
Ajith Kumar
Aravind Akash
Arulnithi
Arun Pandian
Arvind Swamy
Ashok Selvan
Aari
Bala Saravanan
Bharath
Bobby Simha
Dhanush
Dinesh
Ganja Karuppu
Gautham Karthik
Gemini Ganesan
Goundamani
Jai
Jaishankar
Janagaraj
Jayaprakash
Johny Rajasekar
Jay Chandrasekhar
Jeevan
K. A. Thangavelu
Kaali Venkat
Kalaiyarasan
Kamal Haasan
Karthik Kumar
Karthik Muthuraman
Karthi
Karunas
Karunakaran
Karan
Lawrence Raghavendra
Livingston
M. K. Thyagaraja Bhagavathar
M. S. Bhaskar
Madhan Bob
Madhavan
Manivannan
Manobala
Mayilsamy
Muthuraman
Manobala
Nandha
Napoleon
Narain
Nassar
Nithin Sathya
Nizhalgal Ravi
NS Krishnan
Parthiban
Pasupathy
Prabhu Ganesan
Prasanna
Prashanth
Premgi Amaren
Pandiarajan
Poornam Viswanathan
T. Rajendar
Thiagarajan
Ramanathan
Ramarajan
Ramesh Thilak
Radha Ravi
Ramki
Ravichandran
Richard Rishi
Shiva
S. S. Rajendran
S. Ve. Shekher
Sakthi Vasu
Sampath Raj
Santhanam
Santhana Bharathi
Sasikumar
Sathish
Sathyan
Shanthanu Bhagyaraj
Soori
Srinath
Sarath Kumar
Sathyaraj
Sendhil Ramamurthy
Senthil
Shaam[1]
Siddharth
Silambarasan Rajendar
Sivakarthikeyan
Sivakumar
Sivaji Ganesan
Sibiraj
Sri[2]
Srikanth
Suriya
Suresh Joachim
Suruli Rajan
Thengai Srinivasan
Thambi Ramaiah
Udhayanidhi Stalin
V. K. Ramaswamy
Vadivelu
Vidharth
Vignesh
Vijay
Vijay Sethupathi
Vijay Vasanth
Vijayakanth
Vijayakumar
Vikram
Vikram Prabhu
Vikranth
Vimal
Vishnu
Vivek
Y. G. Mahendran

Actresses
Abhirami[3][4]
Adah Sharma[5]
Anu Hasan
Anuja Iyer
Chandini Tamilarasan[6]
Devadarshini
Dhansika
E. V. Saroja
Hema Malini[7]
Gayathrie
Jayalalithaa
Janani Iyer[8]
Kalpana Iyer
Kanika
Karthika
Keerthy Suresh[9]
Lakshmi
Lakshmi Priyaa Chandramouli[10]
M. N. Rajam
M. S. Subbulakshmi
Malavika Avinash[11]
Manochitra[12]
Manorama
Meena Durairaj[13]
Meenakshi Seshadri[14]
Meera Vasudevan[15]
Menaka[16]
Mrudhula Bhaskar[17]
Nayanthara
N. C. Vasanthakokilam
Padma Lakshmi[18]
Padmapriya Janakiraman[19]
Padmini
Pearle Maaney[20]
Priya Anand[21]
Priyamani
Regina Cassandra[22]
Rekha[23]
Rekha
Rukmini Vijayakumar
Rupa Manjari[24]
S. N. Lakshmi
Sachu
Saritha
Shammu[25]
Shruti Haasan
Sridevi
Sridevi Vijayakumar
Sripriya
Srividya
Sruthi Hariharan[26]
Sukanya
Suhasini Mani Ratnam
Swarnamalya
T. A. Madhuram
T. R. Rajakumari
Tharini Mudaliar
Trisha Krishnan
Vennira Aadai Nirmala
Vijayalakshmi[27]
Vijayalakshmi Agathiyan
Varalakshmi
Vasundhara Devi
Vidya Balan
Vimala Raman[28]
Vyjayanthimala

Source:Wikipedia

Monday 7 September 2015

தனி ஒருவன் ரீமேக் ஹீரோ யார்?


மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா நடித்து கடந்த மாதம் 28ம் தேதி வெளியான தனி ஒருவன் படம் இரண்டாவது வாரத்தைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
முதல் வார முடிவில் இப்படத்தின் வசூல் சுமார் 30 கோடி வரை இருக்கும் என தெரிகிறது. இந்த வெற்றியை அறிந்த டோலிவுட் நடிகர்களும், பாலிவுட் நடிகர்களும் படத்தைப் பார்த்துள்ளனர். தெலுங்குத் திரையுலகில் ராம் சரண் இந்தப் படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது.
ரீமேக் உரிமையை வாங்குவதற்கான பேச்சு வார்த்தையையும் ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அப்படி நடந்தால் ராம்சரண் தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கில் நடிப்பார்.
தென்னிந்திய ரீமேக்குகளில் நடித்துத் அதிக வசூலை அள்ளும் சல்மான்கான் அவருடைய தயாரிப்பு நிறுவனங்கள் படத்தைப் பார்த்துள்ளனர். ஆனால், அதன் பின் அது பற்றிய எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை.
தனி ஒருவன் படம் தெலுங்கு, ஹிந்தியில் ரீமேக்கானால் மோகன் ராஜாவே இயக்குவாரா அல்லது வேறு இயக்குனர்கள் இயக்குவார்களா என்பது படத்தின் ரீமேக் விற்பனை முடிந்த பிறகே தெரிய வரும்.

Sunday 19 July 2015

‎Thala‬ nxt with ‪#‎KvAnand‬!! Confirmed!!


கே.வி.ஆனந்த் சொன்ன கதை பிடித்துவிடவே, அவரது இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் அஜித். அப்படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது தான் தற்போதைய அனைவரின் கேள்வியாக இருக்கிறது.
ஒரு முன்னணி நிறுவனத்திடம் கேட்ட போது, "பட்ஜெட் அதிகம். அதுமட்டுமன்றி, படத்தை விளம்பரப்படுத்துவது உள்ளிட்ட எந்த ஒரு விஷயத்தில் கலந்து கொள்ள மாட்டார் அஜித். அப்படியிருக்கும் போது இவ்வளவு பெரிய பட்ஜெட் படம் தயாரிப்பது என்பது கஷ்டம்" என்று கூறி அனுப்பிவிட்டார்கள்.
தற்போது வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தயாரிப்பு நிறுவனம் உறுதியான உடன் முறைப்படி அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
Source : The Hindu.

Endiran2 padathin villan vikram

'எந்திரன் 2' படத்தின் வில்லனாக விக்ரம் நடிக்க, தயாரிப்பாளரை சம்மதிக்க வைக்க இயக்குநர் ஷங்கர் முயற்சி செய்து வருகிறார்.
'ஐ' படத்தைத் தொடர்ந்து, ஷங்கர் தனது அடுத்த படமாக 'எந்திரன் 2' என்று முடிவு செய்து பணியாற்றி வருகிறார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
'எந்திரன் 2'வில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் விக்ரம். இப்படத்தின் கதைக்கு இறுதிவடிவம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் ஷங்கர். ஆனால் பிரம்மாண்ட தயாரிப்பு என்பதால் வில்லனாக விக்ரம் நடித்தால் சரியாக இருக்குமா என்பதை தயாரிப்பு தரப்பு யோசிக்க வைத்திருக்கிறது.
'எந்திரன் 2' படத்துக்கு சுமார் 320 கோடி ரூபாய் பட்ஜெட் என்று முடிவு செய்திருக்கிறது லைக்கா நிறுவனம். ரஜினி நாயகன் என்பது முடிவாகி விட்டாலும், பெரிய நாயகர் ஒருவர் ரஜினிக்கு வில்லனாக நடித்தால் மட்டுமே போட்ட காசை எடுக்க முடியும் என்று தயாரிப்பு நிறுவனம் நினைக்கிறது.
மேலும், ரஜினி என்ற பெயரை தவிர வில்லன், நாயகிகள் ஆகியோரை பாலிவுட்டில் இருந்து நடிக்க வைத்தால் சுமார் 5000 திரையரங்குகள் வரை வெளியிடலாம் என்று தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.
'எந்திரன் 2'வில் வில்லனாக நடிக்க விக்ரம் சம்மதித்து விட்டார். ஆனால், தயாரிப்பு நிறுவனம் விக்ரம் நடித்தால் சரியாக இருக்காது, அதனால் பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் யாரிடமாவது பேசுங்கள் என்று இயக்குநர் ஷங்கரை கேட்டுக் கொண்டுள்ளது. விக்ரம் நடித்தால் சரியாக வரும் என்று தயாரிப்பு நிறுவனத்தை சம்மதிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் ஷங்கர்.
தற்போது இருக்கும் 'எந்திரன் 2' சூழ்நிலையைப் பார்த்தால் அமீர்கான், கமல் ஆகியோரைத் தொடர்ந்து விக்ரமும் இப்படத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்பது போல தெரிகிறது.

வசூலில் மாரி புரிந்த மாபெரும் சாதனை!

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாரி திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழகத்தில் இப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ. 6 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தனுஷ் படங்களில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படமாக மாரி உருவெடுத்துள்ளது.

இதன்மூலம் மிகுந்த உற்சாகமடைந்துள்ள தனுஷ் டிவிட்டரில் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இது தனது வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சிகரமான நாள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாரி படத்தில் அனிருத்தின் இசையும் ரோபோ ஷங்கரின் நகைச்சுவை காட்சிகளும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Thursday 9 July 2015

தன்னுடைய சாதனையை தானே முறியடித்த தனுஷ்


யூடியூப் தளத்தை தன் படத்தின் பப்ளிசிட்டிக்கு எப்படி பயன்படுத்துவது என்பதை தனுஷ் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார். அவரது கொலவெறி பாடல் உலக அளவில் பேசப்பட்டதற்கு அப்பாடலை யூடியூபில் வெளியிட்டதே காரணம்.
அதன் பிறகு தன் ஒவ்வொரு படத்தின் டீசர், டிரைலர், சிங்கிள் ட்ராக் என எதுவாக இருந்தாலும் யூடியூபிலேயே வெளியிடுகிறார். அவரின் 25வது படமான வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றிக்கும் இந்த அணுகுமுறையே அடிப்படையான காரணமாக அமைந்தது.
2014 ஆம் ஆண்டின் உண்மையான வெற்றிப்படம் வேலையில்லா பட்டதாரி படம்தான். கடந்த வருடம் ஜூன் 17ஆம் தேதி வேலையில்லா பட்டதாரி படத்தின் டிரைலர் யூடியூபில் வெளியிடப்பட்டது. அந்த டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது.
அப்படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய ஓபனிங்கிற்கு இந்த டிரைலரும் ஒரு காரணம். விஐபி டிரைலரை இந்த ஒரு வருட காலத்தில் இதுவரை 30 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளார்கள்.
விஐபி படம் செய்த சாதனையை தனுஷ் நடிப்பில் வரும் 17ஆம் தேதி வெளியாகவிருக்கும் மாரி படம் முறியடித்திருக்கிறது. விஐபியின் ஒரு வருடத்தின் சாதனையை இரண்டே வாரத்தில் முறியடித்திருக்கிறது மாரி டிரைலர்.
ஜூன் 25ஆம் தேதி யூடியூபில் வெளியான மாரி டிரைலரை இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கண்டுகளித்துள்ளனர். தனுஷ் படங்களின் டீஸர்/டிரைலரைப் பொறுத்தவரை இதுவே அதிகபட்ச எண்ணிக்கை. முதல்முறையாக 30 லட்சம் என்ற மைல்கல்லையும் எட்டியிருக்கிறார் தனுஷ்.

Wednesday 1 July 2015

விஐபி 2 -ன் கதை என்ன? வேல்ராஜ் பதில்

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற படம் வேலையில்லா பட்டதாரி அதன் வெற்றி, பரபரப்பு, புகழ், இயக்குநர் பதவி எல்லாவற்றையும் கழற்றிவைத்து விட்டு விஷால் நடிக்கும் பாயும் புலி க்காக மரக்காணம் அருகே கொளுத்தும் வெயிலில் பிரமாண்ட செட்டில் ஒளிப்பதிவு செய்து கொண்டிருக்கிறார் வேல்ராஜ்.
அவரிடம் இயக்குநராகி விட்டு மீண்டும் ஒளிப்பதிவாளராக வேலைபார்ப்பது பற்றிக் கேட்ட போது... இதை ஒன்றும் நான் டிபிரமோஷனாக நினைக்கவில்லை. ஒளிப்பதிவாளர் ஆவது தான் என் கனவு விருப்பம்.
இயக்குநரானதே இடையில்தானே? இந்தப் படத்தைப் பொறுத்தவரை நான் ஒளிப்பதிவாளர் மட்டுமே. ஒளிப்பதிவாளர் பணியில் என்னுள்ளே இருக்கும் இயக்குநர் வெளிப்படவே மாட்டார்.
இயக்குநர் என்கிற விஷயத்தை நான் சுமப்பதில்லை அதை நான் என் தலைக்குள் ஏற்றுவதில்லை. நான் என்றும் ஒளிப்பதிவாளர்தான், இயக்குநர் வாய்ப்பு இடையில் வந்ததுதான் என்றார்.
விஐபி 2 எந்த நிலையிலுள்ளது என்றபோது விஐபி2 என்று எல்லாரும் சொல்கிறார்களே தவிர அது முற்றிலும் வேறு கதை. அதற்கும் வேலையில்லா பட்டதாரிக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. பலரும் விஐபி2என்று சொல்லி வருகிறார்கள். விஐபி2 என்று தான் கேட்கிறார்களே தவிர நான் பார்ட் 2 என்று சொல்ல வில்லையே" என்றார்.

Wednesday 17 June 2015

விஜய் படத்தில் ஷாலினியின் தங்கை ஷாமிலி!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் ஃபேண்டஸி திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா நடித்து வரும் இப்படத்திற்கு இசை தேவிஸ்ரீபிரசாத்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசருக்காக காத்திருக்கும் தருவாயில் அடுத்த கட்ட தகவலாக படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் ஷாமிலி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் ஷாமிலி சுதீப்புக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.

ஷாலினியின் தங்கையும், அஜித்தின் மைத்துனியுமான ஷாமிலி, ராஜநடை படம் மூலம் சினிமாவிற்கு நுழைந்தார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'அஞ்சலி' படம் மூலம் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்காக தேசிய விருது பெற்றவர். தமிழில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தார்.

’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் தபுவுக்கு தங்கையாக நடித்ததோடு பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல படங்களில் நடித்தார். கடைசியாக 2009ல் தெலுங்கில் வெளியான ஓய் படத்திற்கு பிறகு பெரிதாக பட வாய்ப்பு ஏதும் இல்லை. தற்போது ’புலி’ படம் மூலம் மீண்டும் தமிழில் காலடி எடுத்து வைக்க இருக்கிறார்.

Sunday 14 June 2015

நல்ல படங்களில் தொடர்ந்து நடிப்பேன்: சோனியா அகர்வால்

சோனியா அகர்வால் ‘காதல் கொண்டேன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, திருட்டுபயலே உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தார்.
தற்போது விவேக் ஜோடியாக நடித்த பாலக்காட்டு மாதவன் படம் ரிலீசுக்கு தயாராகிறது. மேலும் இரு தமிழ் படங்களிலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
சோனியா அவர் கூறியதாவது:–
பன்னிரெண்டு வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். சிறிய இடைவெளிக்கு பிறகு ‘பாலக்காட்டு மாதவன்’ படத்தில் நடித்தேன். காமெடி படமாக தயாராகியுள்ளது. இதற்கு முன்பு இப்படி கலகலப்பான காமெடி படத்தில் நடித்தது இல்லை.
சினிமாவுக்கு மீண்டும் வந்ததை தொடர்ந்து கடும் உடற்பயிற்சிகள் செய்து உடம்பை குறைத்துள்ளேன். தினமும் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். பாலக்காட்டு மாதவன் படத்தில் கொஞ்சம் குண்டாக தெரிய வேண்டும் என்பதற்காக உணவில் ‘சிக்கன்’ சேர்த்து சாப்பிட்டேன்.
நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. அதுமாதிரி படங்களில் தொடர்ந்து நடிப்பேன்.
இப்வாறு சோனியா அகர்வால் கூறினார்.

Saturday 6 June 2015

சூர்யாவின் மாசு படத்தை மேலும் மாஸாக்கிய இளைய தளபதி விஜய்!! :


வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ”மாசு என்கிற மாசிலாமணி” பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று உலகெங்கும் வெளியாகியுள்ளது. இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் சூர்யா, நயன்தாரா, ப்ரனிதா, பார்த்திபன், பிரேம்ஜி, சமுத்திரகனி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொதுவாக வெங்கட் பிரபு தான் இயக்கும் அனைத்து படங்களிலும் விஜய் பட வசனங்களையோ, பாடல்களையோ இணைப்பது வழக்கம். வழக்கம்போல் தற்போது மாஸ் படத்திலும் சூர்யாவின் இன்ட்ரோ காட்சிற்கு கத்தி படத்தின் BGMமியூசிக்கும், துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் இடம்பெற்ற மேகமாய் வந்து போகிறேன் பாடல் சுமார் 1 நிமிடமும், அழகிய தமிழ்மகன் படத்தின் டையலாக்ஸ் என சிலவற்றை படத்தில் இணைத்துள்ளார். இதனால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் விஜய் ரசிகர்கள்.

முதல் அரையாண்டில் கலக்கிய, சொதப்பிய படங்கள

முதல் அரையாண்டில் கலக்கிய, சொதப்பிய படங்கள்- ஒரு பார்வை -
இந்த வருடம் தமிழ் சினிமாவில் நாம் விரும்பிய பல நடிகர்களின் படங்கள் ரிலிஸானது, அது மட்டுமின்றி நாம் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த சில படங்களும் ரிலிஸானது. இதில் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இவ்வருடத்தின் அரையாண்டு கூட முடியாத நிலையில் எதிர்ப்பார்த்ததை விட அதிகமாக படங்கள் ஹிட் வரிசையில் இடம்பெற்றுள்ளது.இதில் ஐ, என்னை அறிந்தால், தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், டார்லிங், அனேகன், காக்கிசட்டை, 36 வயதினிலே, டிமான்டி காலனி, காஞ்சனா-2, ஓ காதல் கண்மணி ஆகியவை ஹிட் வரிசையில் இடம்பிடித்துள்ளது. இதில் ஐ, என்னை அறிந்தால், அனேகன், காக்கிசட்டை, காஞ்சனா-2, ஓ காதல் கண்மணி ஆகிய படங்கள் பெரிய வசூலை தந்ததுள்ளது.வசூலையும் தாண்டி நல்ல கதையம்சம் கொண்ட படங்களாக உத்தம வில்லன், 36 வயதினிலே, புறம்போக்கு, கள்ளப்படம் ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் சகாப்தம், டூரிங் டாக்கிஸ், வஜ்ரம், திறந்துடு சீசே, வலியவன், எனக்குள் ஒருவன் ஆகிய படங்கள் படு தோல்வியடைந்தது. பெரிதும் எதிர்ப்பார்த்த நண்பேண்டா ரசிகர்களை ஏமாற்றியது.இவனுக்கு தண்ணில கண்டம், ராஜதந்திரம், ஆம்பளம், கொம்பன் ஆகிய படங்கள் டீசன்ட்டான லாபத்தை கொடுத்த படங்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...