WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Wednesday 20 May 2015

10th Standard Results 2015 check here krtamilanz

10th standard results on 21.05.15
Some time 10th standard students or their parents or relatives may or may not know how to check TN 10th standard results or TamilNadu 10th std result publishing websites.
Here we have added all TN 10th standard result publishing website's urls. Main website to check TamiNadu 10th result is www.tnresults.nic.in and other websites are www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in.
List of websites to check TN 10th results are,
  • www.tnresults.nic.in
  • www.dge1.tn.nic.in
  • www.dge2.tn.nic.in
  • www.dge3.tn.nic.in

TN 1OTH RESULTS SERVER 1




TN 1OTH RESULTS SERVER 2




When the 10th standard results announced, automatically SSLC 10th results 2015 link will be added along with the HSC March 2015 Results link. And students can click that link to check your TamilNadu 10th standard results 2015

Study According to your Internal Marks

                                                                    KRTAMILANZ 

Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

In this calculator U calculate ur Internal marks according to the semester examination

All The Best Students

with regards
KRTAMILNZ

Tuesday 19 May 2015

வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் திருத்த​ முடிவு 2015 - Dowry Prohibition Act Decision to Change


"வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு, 498-ஏ-யின் கீழ் குற்றம்.. சாட்டப்பட்டவர், உடனடியாக கைது செய்யப்படுவார்; அவருக்கு ஜாமின் கிடையாது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், மூன்றாண்டு வரை சிறைத் தண்டனையும் கிடைக்கும்.இந்த வழக்கில், நீதிமன்றத்தில் தாங்கள் குற்றமிழைக்காதவர்கள் என கைது செய்யப்பட்டவர்கள் நிரூபிக்கும் வரை அவர்கள் குற்றவாளிகளாகவே கருதப்படுவர். இதற்கிடையில் வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தை, பெண்களில் சிலர் தவறாக பயன்படுத்துவதாக ஏற்கனவே புகார் எழுந்துள்ளது. அதாவது, தங்களுக்கு பிடிக்காத கணவரையும், அவரின் குடும்பத்தினரையும் பழிவாங்க, இந்த சட்ட விதிகளில், தங்களுக்கு சாதகமான பிரிவுகளை பயன்படுத்தி, பொய் புகார் கொடுக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. கணவருடன் வாழப் பிடிக்காமல் விவாகரத்து பெற விரும்பும் பெண்கள், இந்த சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்துவதாக, சுப்ரீம் கோர்ட், ஏற்கனவே ஒரு வழக்கில் தெரிவித்துள்ளது.


இந்தநிலையில் இந்த சட்டத்தை திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.இதுதொடர்பாக மத்திய சட்ட ஆணையம், நீதிபதி மாலிமாத் குழு ஆகியவை மத்திய அரசுக்கு பரிந்துரைகள் அளித்துள்ளன. அந்தப் பரிந்துரைகளின்படி, நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் புகார்தாரரும், குற்றம்சாட்டப்பட்டவரும் வழக்கில் சமரசம் செய்து கொள்ளும் வகையில், அதை சமரசத்துக்குட்பட்ட குற்றம் என திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.


இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில்," இந்திய தண்டனைவியல் சட்டத்தின் (ஐ.பி.சி.) 498ஏ பிரிவை, சமரசத்துக்குட்பட்ட குற்றம் என திருத்தம் செய்வதற்கான மத்திய அமைச்சரவையின் வரைவு, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வரைவு மசோதாவை சட்ட அமைச்சகம் தயாரிக்கும்.தற்போதைய சட்டத்தில், பொய்யான புகார் அளிக்கப்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டால், புகார் அளித்தவர்களுக்கு ரூ.1,000 மட்டுமே அபராதம் விதிக்க முடியும். இந்தத் தொகையை ரூ.15,000 ஆக அதிகரிக்கும் வகையில் அரசு திருத்தம் செய்ய இருக்கிறது. அத்துடன், தண்டனை விதிக்கப்படுபவர்கள் இழப்பீடு வழங்கும்பட்சத்தில் அவர்களுக்கு சிறைத் தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் திருத்தம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது ,"என்று தெரிவித்தன.


வரதட்சிணை கொடுமை எதிர்ப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்ய இருப்பதற்கு உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,"தற்போதைய சட்டத்தின் வாயிலாக பெண்களுக்கு நிவாரணமும், பாதுகாப்பும் கிடைக்கிறது.இதுவே தொடர வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றம் என்பது மனித உரிமை மீறலாகும். இதில் எந்த சமரசமும் செய்யக் கூடாது. மத்திய அரசின் முடிவை எதிர்க்கிறேன் என்றார்.


சுப்ரீம் கோர்ட் உத்தரவு என்ன? கடந்த, 2010ல், வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்கு ஒன்றில்,அம்சங்கள்: *ஆதாரமின்றி, வரதட்சணை கொடுமை வழக்கில் யாரையும் கைது செய்யக்கூடாது. *வரதட்சணை கொடுமை வழக்கில், சம்பந்தபட்ட பெண்ணின் கணவர் மட்டுமல்லாமல் அவரின் உறவினர்கள், தாத்தா, பாட்டி, வெளிநாடுகளில் இருக்கும் சகோதர, சகோதரிகள் கூட கைது செய்யப்படுகின்றனர்; இது, கண்டிக்கத்தக்கது.

Monday 18 May 2015

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை!!

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா?

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகிறது பரோட்டா கடை, அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை, அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா, தூத்துக்குடி பரோட்டா, கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா, சொல்லும்போதே நாவில் நீர் ஊறுமே.
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா..??

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?

மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.

இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை துடங்குகிறது.
பரோட்டா மட்டும் இல்லது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது, நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட.

மைதா எப்படித் தயாரிக்கிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக பற்ற கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள், அதுவே மைதா.

Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது.

இது தவிர Alloxan என்னும் இரசாயனம், மாவை மிருதுவாக கலகபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபயகரமகுகிறது.

இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைபதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது.

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல, மைதாவில் நார் சத்து கிடையாது, நார் சத்து இல்லா உணவு நம் சிரண சக்தியை குறைத்து விடும்.

இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது, எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உன்ன தவிர்பது நல்லது.

Europe union, UK, China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .

மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநிரக கள், இருதய கோளறு, நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர். மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

இப்போது ஆவது நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேள்வரகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம்.

இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.

இனி திருந்துமா இந்தியா?

ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் வசிக்கும் நண்பர் ஒருவர், சமீபத்தில் சென்னை வந்திருந்தார். பெங்களூர் தான் அவரது சொந்த ஊர். ஜெர்மனியில் குடியேறி 20ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அங்கு 'பென்ஸ்' தொழிற்சாலையில் பொருத்துனர் (fitter)ஆக வேலை செய்கிறார்.அரைகுறை தமிழில் பேசுவார்.
பிட்டராக இருந்தாலும் விவரமானவர்; பல துறைகளில் ஞானம் உள்ளவர் அவரிடம் பேசிக் கொண்டிருக்கையில்
பல அரிய தகவல்கள் கிடைத்தன.

அவர் கூறியது;
சார்.... இப்போது இந்தியாவிலே 'பென்ஸ்' கார் 45 லட்ச ரூபாய்க்கு கூட கிடைக்குது....
அஹா.... ஜெர்மன் நாட்டு கார் ன்னு பணக்காரர்களும், பெரிய தொழிலதிபர் களும் போட்டி போட்டுக்கிட்டு வாங்குறாங்க.இந்த கார்ல இருக்கற பல முக்கியமான பாகங்கள், கியர்பாக்ஸ் உள்பட, இந்தியாவில், இருக்கும்' டாடா'(TATA) கம்பெனியிலே செஞ்சு, ஜெர்மனிக்கு வருது.... நாங்க அதை அங்கே பொருத்தி,பல நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம்!
இதுக்கு காரணம் என்ன தெரியுமா? ஜெர்மனியிலே அந்த பாகங்களை உற்பத்தி செய்ய ஆகும் செலவில் கால்வாசி செலவு கூட ஆகாது நம் நாட்டில்..நாங்கள், எங்களுக்கு தேவையான டிசைன் மற்றும் மூல பொருட்களைக் கொடுத்து விடுகிறோம்....
இங்கே இந்தியாவில் லேபர், ரொம்ப "சீப்!' அது ஜெர்மானியர்களுக்கு பெரிய, "அட்வான்டேஜ்' ஆகிவிடுகிறது.
இந்தியாவில் லேபர் எவ்வளவு, "சீப்' எனபதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் கேட்டுக்குங்க சார்....' என்றவர், தன் சட்டைப் பையில் இருந்து, ஒரு காகிதத்தை எடுத்து படித்து காட்டினார். அப்படியே ஒரு கனம் அதிர்ந்து போனேன்!

ஒரு ஜெர்மன் தொழிலாளிக்கு குடுக்கற சம்பளத்திலே இரண்டு அமேரிக்க தொழிலாளியை வேலைக்கு அமரத்தலாம்.
இல்லையென்றால், தைவான் நாட்டு தொழிலாளி ஐந்து பேரையோ, பிரேசில் நாட்டு தொழிலாளி எட்டுப் பேரையோ வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும்....
ஆனால், இந்தியத் தொழிலாளியின் நிலையோ பரிதாபம் ?
..ஒரு ஜெர்மன் தொழிலாளியின் சம்பளத்தில் "128" இந்திய தொழிலாளர்களை(வெட்ககேடு) வேலைக்கு வைத்துக் கொள்ளலாம் என்றால் பாருங்கள்.

இந்திய தொழிலாளியின் சம்பளம் மணிக்கு 25 ரூபாய் என்றால் ,ஜெர்மன் தொழிலாளியின் குறைந்தபட்ச சம்பளம் மணிக்கு 1,150 ரூபாய்!
அப்புறம் ஏன் ஜெர்மன் தொழில் அதிபர்கள் , புதிய பொருளாதாரக் கொள்கை வந்த பின்னே இங்கே மூலதனத்தைக் கொட்ட தயங்கப் போறாங்க!

கடந்த 20 ஆண்டுகளில், இந்தியாவில் பல தொழில்களில் முதலீடுகளை செய்துள்ளனர் ஜெர்மானியர்கள்... ஆனால், இதில் சோகமான விஷயம் என்னவென்றால், சுற்றுப்புறச் சூழ்நிலைக்கும், உடல் நலத்திற்க்கும் (கேன்ஸர்,ஆஸ்துமா போன்று)கேடு விளைவிக்க கூடிய பாதுகாப்பு அம்சம் குறைந்த, ஜெர்மனி நாட்டு சட்டப்படி அங்கு தடை செய்யப்பட்ட தொழில்கள் தான் இந்தியாவிற்கு வந்து உள்ளன; என்றார் அந்த நண்பர்.

புதிய பொருளாதார கொள்கை என்கிற பேரில் வெளிநாட்டு குப்பைகளை கொட்ட இந்தியா என்ன குப்பை தொட்டியா? நம் நாடு அந்நிய நாட்டின் குப்பைக்கொட்டும் கிடங்கு ஆகாமல் பார்த்துக்கொள்வது ஒவ்வொறு இந்தியனின் கடமை அல்லவா. ...நண்பர்களுக்கும் பகிருங்கள்
நன்றி உங்கள் சந்.பிரபு.

Related Posts Plugin for WordPress, Blogger...