Services
- Home
- AnnaUnivNews
- Cricket News
- தமிழில் தொழில்நுட்ப தகவல்கள்
- School News
- Examination Tips
- Health Tips
- Samaiyal Tips
- Facebook Tricks
- Blogger Tips
- Computer Tricks
- SIM details
- Celebrity Birthdays(Daily)
- Cinema News
- watch trailers
- Colleges Info(தமிழ்நாடு)
- Langauges Learning
- GTA Save Games
- Earn Money Online
- Model Letters
- Dote News
- General Knowledge
- Placement Info
- Gate Books
- About
- Contact
- Privacy Policy
Wednesday, 11 October 2017
Wednesday, 20 May 2015
10th Standard Results 2015 check here krtamilanz
List of websites to check TN 10th results are,
- www.tnresults.nic.in
- www.dge1.tn.nic.in
- www.dge2.tn.nic.in
- www.dge3.tn.nic.in
Tuesday, 12 May 2015
Cut Off Marks Calculation Procedure
What is the use of Cutoff mark??
The main use of the cutoff mark in TNEA 2015 engineering counseling is that this mark is one of the criteria which will be used to calculate Random numbers and they will assign random numbers to each and every student who applied for the counseling. To know what is random number Just CLICK HERE: RANDOM NUMBER
How to calculate cutoff marks??
Cutoff marks will be calculated by three main subjects which you have written in the 12th examinations
First Subject is Maths
Second Subject is Physics
Third Subject is Chemistry
Procedure for calculating cutoff marks:
Divide your Mathematics mark with 2 = 1st Answer
Divide your Physics mark with 4 = 2nd Answer
Divide your Chemistry mark with 4 = 3rd Answer
Adding 1st Answer + 2nd Answer + 3rd Answer = YOUR CUTOFF MARK
Example for Cut-Off mark Caclulation
SL.NO | SUBJECTS | MARKS | CALCULATION | CUTOFF MARKS |
1 | MATHEMATICS | 196 | 198 / 2 | 99 |
2 | PHYSICS | 192 | 192 / 4 | 48 |
3 | CHEMISTRY | 196 | 196 / 4 | 49 |
Your Cut Off Mark is:196
Online Cut Off Marks Calculator
Online Cut-off mark calculator | 12th std cuttoff marks calculator
Krtamilanz Plus2 Results 2015
Wednesday, 6 May 2015
தமிழகம் முழுவதும் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் மே 4
தமிழகம் முழுவதும் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (மே 4) முதல் தொடங்குகிறது.
கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (மே 4) முதல் தொடங்குகிறது. விண்ணப்பக் கட்டணம் ரூ. 25, பதிவுக் கட்டணம் ரூ. 2 என மொத்தம் ரூ. 27 செலுத்தி விண்ணப்பத்தை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் பதிவுக் கட்டணமாக ரூ. 2 மட்டும்
செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். தமிழகம் முழுவதும் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. முன்கூட்டியே மாணவர் சேர்க்கை... பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கக் கூடிய மாணவர்களை ஈர்க்கும் வகையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இம்முறை முன்கூட்டியே மாணவர் சேர்க்கையை நடத்த கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அரசு கல்லூரி முதல்வர்கள் கூறியது: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் தலைசிறந்த பேராசிரியர்கள் பலர் உள்ளனர். உள்கட்டமைப்பு வசதிகளும் பெருமளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முன்கூட்டியே ஆரம்பித்துவிடுவதால், பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களும், படிப்பில் மிகுந்த ஆர்வமுள்ள மாணவர்களும் பிரபல தனியார் கல்லூரிகளில் சேர்ந்து விடுகின்றனர். இந்த நிலை காரணமாக அரசு கல்லூரிகளில் உள்ள முழுமையான திறன், வெளிப்படாமலே போய்விடுகிறது. இந்த நிலையை மாற்றும் வகையில், தனியார் கல்லூரிகளைப் போல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையை முன்கூட்டியே நடத்த இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால், திங்கள்கிழமை விண்ணப்ப விநியோகம் தொடங்கப்பட்டு, மே இறுதி வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்துக்குள் மாணவர் சேர்க்கை நடைமுறைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விடும் என்றனர். விண்ணப்பக் கட்டணம் முறைப்படுத்தப்படுமா? இதுபோல் தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான அரசு உதவி பெறும் கலை,அறிவியல் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளிலும் விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்குகிறது. சில கல்லூரிகள் புதன்கிழமை (மே 6) விண்ணப்பங்களை விநியோகிக்க உள்ளன. இந்தக் கல்லூரிகளில் பெரும்பாலானவை விண்ணப்பக் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி வசூலிப்பதை ஒவ்வோர் ஆண்டும் வாடிக்கையாகக் கொண்டுள்ளன. அரசு உதவி பெறும் கல்லூரிகள், அரசு கல்லூரிகளில் உள்ளது போன்றே விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், இந்தக் கல்லூரிகள் விண்ணப்பத்துக்கான கட்டணத்தை ரூ. 250 முதல் ரூ. 500 வரை நிர்ணயிக்கின்றன. இந்த நிலையில், இந்த ஆண்டிலும் பல கல்லூரிகள் விண்ணப்பக் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி நிர்ணயித்திருப்பது தொலைபேசித் தகவல் மூலம் தெரியவந்ததாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர். விண்ணப்பக் கட்டணத்தை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தினர்.
Thanks:kalvimalar
மருத்துவ படிப்பில் சேர மே 11-ந்தேதி முதல் விண்ணப்பம்
மருத்துவ படிப்பில் சேர மே 11-ந்தேதி முதல் விண்ணப்பம். தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்க மே 29-ந்தேதி (மாலை 5 மணி வரை) கடைசி நாள் . இந்த ஆண்டும் ஜூன் 19-ந்தேதி மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவ படிப்பில் சேர மே 11-ந்தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகளில் 2,555 இடங்கள் உள்ளன மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம் மே 11-ந்தேதி முதல் வழங்கப்படுகிறது. அரசு
மருத்துவக்கல்லூரிகளில் மொத்தம் 2,555 இடங்கள் உள்ளன என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவ படிப்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 86 ஆயிரத்து 27 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவு மே 7-ந்தேதி வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை மருத்துவக்கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி உள்பட 19 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன.இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேருவதற்கு 2,555 இடங்கள் உள்ளன. அதில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 15 சதவீதம், அதாவது 383 இடங்கள் ஆகும். இந்த இடங்கள் போக மீதமுள்ள 2,172 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரலாம்.ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரிதனியார் மருத்துவக்கல்லூரிகள் 12 உள்ளன. இந்த ஆண்டு தனியார் மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கான இடங்கள் இன்னும் முடிவாகவில்லை. அரசு மருத்துவக்கல்லூரிகளில் மாணவர்கள் எம்.பி.பி.எஸ். சேருவதற்கு 2,555 இடங்கள் இருந்தாலும், புதிதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அந்த கல்லூரியை இந்திய மருத்துவ கவுன்சிலை சேர்ந்த குழு வந்து ஆய்வு நடத்திவிட்டு சென்றுள்ளது. மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பம் வழங்குவது குறித்து மருத்துவக்கல்வி தேர்வுத்துறை செயலாளர் டாக்டர் சுகுமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-மே 11-ந்தேதி முதல் விண்ணப்பம்எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு விண்ணப்பம் வழங்குவது குறித்து மே 10-ந்தேதி அறிவிப்பு வெளியாகிறது. அதன்பின்னர், விண்ணப்பம் மே 11-ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் வழங்கப்படும்.பல் மருத்துவப்படிப்புக்கான விண்ணப்பம் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரியில் வழங்கப்படும். விண்ணப்பம் மே 28-ந்தேதி வரை வழங்கப்பட உள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்க மே 29-ந்தேதி (மாலை 5 மணி வரை) கடைசி நாள் ஆகும்.விண்ணப்ப படிவங்கள் கடந்த ஆண்டை போலவே இந்தஆண்டும் ரூ.500-க்கு விற்கப்படும். ஆனால் ஆதிதிராவிடர், பழங்குடி இன மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் சாதி சான்றிதழுக்கான ஜெராக்ஸ் கொடுத்து விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.தரவரிசை பட்டியல்கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் மாணவ-மாணவிகள் விண்ணப்பிப்பார்கள் என்று தெரிகிறது. பிளஸ்-2 தேர்வு முடிவு 7-ந்தேதி வெளியானாலும், விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிந்த பிறகு இறுதி மதிப்பெண் பட்டியலை அரசு தேர்வுத்துறை சி.டி. வடிவில் எங்களிடம் ஒப்படைக்கும்.அதன்பின்னர் தான் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். ஜூன் 12-ந்தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிட உத்தேசமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு டாக்டர் சுகுமார் கூறினார்.இந்த பேட்டியின்போது, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் கீதாலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர். கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஜூன் 19-ந்தேதி மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Thanks:kalvimalar
பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் 06.05.2015 (புதன்கிழமை) அன்று தொடங்குகிறது.
பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் 06.05.2015 (புதன்கிழமை) அன்று தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 60 விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 60 விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை மறுநாள் (7-ம் தேதி) வெளியாகிறது. பள்ளிப் படிப்பை முடிக்கும் பெரும்பாலான
மாணவ,மாணவிகள் பொறியியல் படிப்பில் சேரவே ஆசைப்படுகின்றனர். மாநிலத்தில் 570-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சுமார் 2 லட்சம் பிஇ, பிடெக் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன. பொறியியல் கலந்தாய்வை ஆண்டுதோறும் அண்ணா பல் கலைக்கழகம் நடத்தி வருகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளி யாகும் தேதி அறிவிக்கப்பட்ட தைத் தொடர்ந்து, இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் மே 6-ம் தேதி தொடங்கும் எனஅண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதற்காக 2 லட்சத்து 40ஆயிரம் விண்ணப் பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அறிவித்தபடி, பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப படிவங்கள் தமிழகம் முழுவதும் 60 மையங்களில் நாளை முதல் விநியோகம் செய்யப்படுகின்றன. விற்பனை மையங்கள் மற்றும் முகவரி விவரங்கள், அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.annauniv.edu/tnea2015) வெளியிடப் பட்டுள்ளன. சென்னையில் கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், புரசைவாக்கம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பிராட்வே பாரதி அரசு மகளிர் கல்லூரி, குரோம்பேட்டை எம்ஐடி ஆகிய 4 மையங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பக்கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250. அவர்கள் சாதிச் சான்றிதழ் நகலை சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து மையங்களிலும் (ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள் நீங்கலாக) காலை 9.30 மணி முதல்மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும். தபால் மூலம் விண்ணப்பம் பெறுவதற்கு கட்டணம் ரூ.700. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.450. விண்ணப்பக் கட்டணத்தை ‘The Secretary, Tamilnadu Engineering Admissions’ என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க டிமாண்ட் டிராப்ட் எடுத்து ‘செயலாளர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 600025’ என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப படிவங்கள் மே 27-ம் தேதி வரை விநியோகிக்கப்படும். அண்ணா பல்கலைக்கழக மையத்தில் மட்டும் 29-ம் தேதி வரை விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 29-ம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர்பேராசிரியர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் அறிவித் துள்ளார். மேலும், மாணவர் களின் வசதிக்காக, கடந்த ஆண்டு எந்தெந்த பொறியியல் கல்லூரி களில் எந்த பாடப்பிரிவுகளில் எவ்வளவு கட் ஆஃப் மார்க் என்ற பட்டியல், 8-ம் தேதி இணை யதளத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ், வெளிமாநிலத்தில் பிளஸ் 2 படித்த மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ‘நேட்டிவிட்டி’ சான்றிதழை முன்கூட்டியே பெறவசதியாக அதன் மாதிரியை அண்ணா பல்கலைக்கழகம் முன்கூட்டியே இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது.
Thanks:Kalvimalar