WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Monday, 4 May 2015

கால் ஆணி நீங்க - இயற்கை வைத்தியம்

கால் ஆணி நீங்க - இயற்கை வைத்தியம்

பாதங்களைத் தாக்குவதில் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப் பது கால் ஆணி. இது பாதத்தைத் தரையில் வைக்க முடியாத அள விற்கு பிரச்சனையை ஏற்படுத்து ம். கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உரு வாகிறது.

அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழு த்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தைத் தரு கிறது. இந்தக் கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்ப டாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப் பு உண்டு.

கால் ஆணி ஏற்படக் காரணம்:

பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத்தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள்.

கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கு ம் கால் ஆணி வர வாய்ப்புள்ளது.
காலுக்குப் பொருந்தாத சிறிய அள வு செருப்புகளைப் பயன்படுத்தவ தாலும், வெறும் காலில் நடப்பதா லும் கூட கால் ஆணி ஏற்படும்.
கால் ஆணி ஏற்பட்டு விட்டால் அதனை உடனடியாகச் சரிபடுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். இதற்கு உரிய மருத்துவம் உள்ளது.

கால் ஆணிக்கு உரிய சிகிச்சை:

1) வெள்ளை எருக்கின் இலைகளை அரைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் பத்து போடவும்.

2)கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக் கும் இடங்களில் தடவி வரவும்.

3)அம்மான் பச்சரிசி செடி கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தச் செடியை உடைச்சு, அதில் இருந்து வரும் பாலை எடுத்து, கால் ஆணி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் வெகு விரைவில் குணமாகும்.

4)மருதாணி இலை கொஞ்சம், மஞ்சள் துண்டு கொஞ்சம் இரண்டையும் எடுத்து நன்றாக மையாக அரைக்கவேண்டும் . ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து, இரவு தூங்குவதிற்கு முன் கால் ஆணி உள்ள இடத்தில் வைத்து கட்டிவிட வேண்டும். தொடர்ந்து 10 நாள் செய்தால் குணமாகிவிடும்.

5)இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணி நிவாரணம் கிடைக்கும்.

6)மேலும், மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பற்று போடுங்கள்.பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும்.

7)மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள் மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.

காளான் மருத்துவ பயன்கள்

இந்தியாவில் 8 வகையான காளான்கள் உள்ளன. இவற்றுள் மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான் என்ற மூன்று வகை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. காளானில் உள்ள லென்ட்டைசின், எரிட்டிடைனின் என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது. இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது.

இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். மேலும் காளானில் உள்ள இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும். காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.

மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.

காளான் கழுவும் முறை: இதில் அதிக நார்ச்சத்து உள்ளதால் சீக்கிரம் அதிகத் தண்ணீரை உறிஞ்சி விடும். அதனால் கீரையை அலசுவது போல் ஓர் அகல பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு சீக்கிரமாக அலசி எடுக்கவும். மேல் பாகத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் கறுப்பான சிறிய திட்டுத் திட்டான பகுதி தண்ணீரில் வந்துவிடும்.

இரண்டுமுறை அலசலாம். தண்ணீரில் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து அலசி எடுத்தால் சீக்கிரம் கறுப்பு நிறமாக மாறாமல் இருக்கும். அலசிய பின் ஒரு துணியின் மீது பரப்பி அதிகப்படியான ஈரம் அதில் உறிஞ்சப்படும்படி சில நிமிடங்கள் வைத்து எடுத்து நறுக்கவும்.

இல்லாவிடில் வதக்கும்போது இதில் உறிஞ்சப்பட்ட தண்ணீர் வெளியே வந்துவிடும். பொதுவாக பாக்கெட்டில் வாங்கிய காளானை மூன்று நாட்கள் வரை ஃப்ரிஜ்ஜில் வைத்து உபயோகப்படுத்தலாம். ஃப்ரீசரில் வைக்கக்கூடாது. பாதி அளவு எடுத்து உபயோகப்படுத்தி விட்டு மறுநாள் மீதியை உபயோகப்படுத்தலாம்.

ஆனால், கவரை திறந்து அப்படியே வைக்கக்கூடாது. அப்படி செய்தால் காளான் கறுத்து விடும். ஒரு இறுக்கமான டப்பாவில் போட்டு மூடி வைத்தால் மூன்று நாள் வரை வைத்து உபயோகப்படுத்தலாம். (நறுக்கிய பிறகு கூட வைத்திருக்கலாம். சிறிது நிறம் மாறினால் பரவாயில்லை. ஆனால், பிசுபிசுப்பாக மாறினால் உபயோகப்படுத்தக் கூடாது.

தினை அரிசி காலிஃப்ளவர் சாதம்

தேவையான பொருட்கள்:

தினைஅரிசி – 1 குவளை (150 கிராம்)
தண்ணீர் – 2 1/2 குவளை
காலி ஃப்ளவர் துண்டுகள் – 1 குவளை (100கிராம்)
பச்சை பட்டாணி – 1/4 குவளை (25 கிராம்)
தக்காளி – 2 அல்லது 3 (நடுத்தர அளவு)
சீரகம் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி – 2 சிட்டிகை
எலுமிச்சை – 1/2 துண்டு
கொத்தமல்லி தழை – 2 தேக்கரண்டி
புதினா இலைகள் – 8
இஞ்சி – 1/2 இன்ச் (துருவியது)
மிளகு – 6 முதல் 8 எண்ணிக்கை
நல்லெண்ணை – 2 தேக்கரண்டி
பிரியாணி இலை – 1
இந்துப்பு – சுவைக்கு ஏற்ப

செய்முறை:

வாணலியில் தினைஅரிசியை 3 நிமிடம் வறுத்துக் கொள்ளவும். பின் அரிசியைக் குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி அதனுடன் சில துளிகள் எண்ணை மற்றும் சிறிதளவு இந்துப்பு சேர்த்து வேக வைக்கவும். குக்கர் முதல் விசில் வந்ததும், தீயை மிதமான சூட்டிற்கு குறைக்கவும். பின் 8 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். குக்கரில் ஆவி போன பின்னர், 10 நிமிடங்கள் கழித்து சாதத்தை முள் கரண்டியால் கிளறி விட்டு, சாதத்தை தனியே வைக்கவும். காலிஃப்ளவர் சுத்தப்படுத்தி, சற்று பெரிய துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும். வெந்நீரில் 10 நிமிடங்கள் இரண்டு காய்கறிகளையும் ஊற வைக்கவும். பின்னர் நீரை வடிகட்டி, காய்கறியை தனியே வைக்கவும்.

வாணலியில் எண்ணையை ஊற்றி, அது காய்ந்ததும் சீரகம் போடவும். பின் இஞ்சி துருவல், புதினா போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். நறுக்கிய தக்காளி மற்றும் மஞ்சள் தூள் போட்டு நன்றாக வதக்கவும். பின்னர் ஊற வைத்த காலிஃப்ளவர் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். இப்பொழுது பச்சை பட்டாணியை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி முக்கால் பங்கு வேக வைக்கவும் (காய்கறிகள் முழுவதும் வெந்து விட்டால் குழைந்து விடும்). பின்னர் வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறவும். மிளகை பொடித்து சாதத்தில் சேர்க்கவும். எலுமிச்சம் பழத்தை பிழிந்து ஊற்றவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கொத்தமல்லி தழையை தூவி, ஏதாவது ஒரு வகை ராய்தாவுடன் பரிமாறவும்.

அன்றாட உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டிய சில ஊட்டச்சத்துக்கள்

* காலை 5 .30 மணிக்கு : தேன் கலந்து ஒரு தம்ளர் எலுமிச்சை ஜூஸ் பருகுங்கள். இதனால், அன்று முழுவதும், வயிறு லேசாக இருக்கும். எந்தப் பிரச்சனையும் சீக்கிரத்தில் அண்டாது.

* காலை 7.30 மணிக்கு வெரைட்டியான மூன்று வகை பழத்துண்டுகள், ஒரு தம்ளர் பால் அருந்துங்கள். மூளை புத்துணர்ச்சி பெறும்.

* காலை 9.30 மணிக்கு ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் கண்ணை பிரகாசமாக வைத்திருக்கும்.

* காலை 11.30 மணிக்கு ஒரு கிண்ணம் வேகவைத்த காய்கறிகள், முளைவிட்ட பயிறு கலந்து தயிர் சாலட். இது சருமத்தை பளபளவென வைத்திருக்கும்.

* மதியம் 2.30 மணிக்கு ஒரு டம்ளர் மோர். மாலை 4.30 மணிக்கு ஜூஸ், பழங்கள். 6 மணிக்கு ஒரு டம்ளர் கேரட் ஜூஸ். இப்படி நீர்சத்து நிறைந்த மோர், ஜூஸ், வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது உடலுக்கு குளிர்ச்சியும், மனதுக்கு மகிழ்ச்சியும் கிடைக்கும்.

* இரவு 7.40 மணிக்கு இரண்டு எண்ணெய் சேர்க்காத சப்பாத்தி, பழங்கள், தயிர்சாலட். சிறிது தால். வயிறை மிதமாக வைத்திருக்கும்.

இப்படி, ஒரு மாத உணவை பட்டியலிட்டு சாப்பிடும்போது, உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறிவிடும். உடலில் எடை கூடாது. சருமத்தில் நிறமும் பொலிவும் கூடும். உடலும் உள்ளமும் உற்சாகத்தில் மிதக்கும். தெரப்பியே தேவையில்லை என்பதுபோல், உணவிலும் உற்சாகமாக வைத்திருக்க... இந்த உணவைப் பின்பற்றுங்கள்.

நிலக்கடலைப் பால்


முளைகட்டிய நிலக்கடலை மணிகளை மிக்சியில் தண்ணீர்சேர்த்து அரைத்து அதில் நாட்டுச் சர்க்கரையும் ஏலக்காயும் சேர்த்துத் தயாரிக்க "நிலக்கடலைப் பால்" தயார்.

Related Posts Plugin for WordPress, Blogger...