WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Monday, 14 September 2015

உன்னை பிரிந்து வாழ்ந்தாலும் மறந்து வாழ மாட்டேனடா...!!

அன்பை பொழிவதற்கு அம்மா
அக்கறை காட்டுவதற்கு அப்பா
தண்டிப்பதற்கு அண்ணன்
செல்லமாக சண்டையிட்டு
கொள்வதற்க்கு அக்கா தங்கை
இன்பத்தையும் துன்பத்தையும் பகிர்ந்து
கொள்வதற்க்கு நண்பர்கள்
இப்படி எத்தனையோ சொந்தங்கள்
அருகில் இருந்தும் உறவே இல்லாத உன்னை
உறவென நினைத்து இவை அனைத்தையும்
உன்னிடம் எதிர்பார்த்தது என் தவறுதான்
உன் மௌனம் சொல்லாமல் சொல்லி விட்டது
நீ எனக்கு எந்த உறவும் இல்லை என்று
இதுவரை வாழ்நாளில் அனுபவிக்காத
வலிகளையும் வேதனைகளையும் உன்னால்
இந்த ஒரு சில நாட்களில் அனுபவித்து விட்டேனடா
காரணம் எதுகும் சொல்லாமல் என்னிடம் இருந்து
விலகி விட்டாய். உன் பிரிவு ஆரம்பத்தில்
வலிகளை தந்தாலும் இப்பொழுது அந்த வலிகள்
உணர்த்தி விட்டது நீ என் வாழ்வில் இல்லை என்பதை.
உன் வாழ்வில் இனி நான் வரப்போவதில்லை.
உன்னை பிரிந்திருந்தால் உன்னை மறந்து
விடுவேன் என்று எண்ணி விடாதே
உன்னை பிரிந்து வாழ்ந்தாலும்
மறந்து வாழ மாட்டேனடா...!!

பெண்களிடம் ஒருபோதும் ஆண்கள் கேட்கக்கூடாத அந்த 10 விஷயங்கள்…!

காதலில் பெண்களுக்கென ஒரு தனிப்பட்ட விஷயங்கள் நிச்சயம் இருக்கும். அந்த விஷயத்தை பற்றி ஆண்கள் கேட்பதை பெண்கள் விரும்புவதில்லை. மேலும், ஒரு சில விஷயங்களை பெண்களிடம் கேட்காமலேயே அவர்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படி ஆண்களுக்கு பயனுள்ள சில விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த 10 விஷயங்கள் :

பெண்களிடம் எப்போதுமே முத்தம் ஒன்றைக் கேட்காதீர்கள். முத்தம் கேட்கும் ஆண்களை சிறுவர்களாகவே பெண்கள் நோக்குகின்றனர். இதற்கு அவர்கள் சம்மதித்தாலும் கூட உள்ளூர நல்ல அபிப்பிராயம் ஏற்படாது.

உன்னை எங்காவது வெளியில் அழைத்துப் செல்லவா? என்று ஒரு போதும் பெண்களைக்கேட்க வேண்டாம். ஏனெனில் அதை நீங்கள் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்ப்பார்ப்பு.

உங்களுடைய வாகனம் பற்றி அல்லது நீங்கள் வாழும் வீடு பற்றி ஒரு போதும் ஜம்பமாகப் பேச வேண்டாம். ஏனெனில் அவர்களை இலகுவாகக் கவர நீங்கள் எடுக்கும் முயற்சியாக அவர்கள் அதைக் கருதக்கூடும்.

இரவில் என்ன செய்யப்போகிறாய் என்று பெண்களைக் கேட்க வேண்டாம். ஏனெனில் அதற்கான திட்டம் ஆணிடம் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்ப்பார்ப்பு.

என்னை நீ விரும்புகின்றாயா என்றும் பெண்களைக் கேட்டு விடாதீர்கள். இந்த ஒரு கேள்வி ஒட்டுமொத்தக் கதையையே மாற்றிவிடக் கூடும்.

நீங்கள் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு பதில் கிடைக்காவிட்டாலும் அதைப்பற்றியும் பேசாதீர்கள். பதில் வராதது உங்களுக்கு கவலையளிப்பதாக அவர்கள் எண்ணக்கூடும்.

நீ இதற்கு முன் எத்தனை பேருடன் உறங்கியிருக்கின்றாய் என்றும் கேட்க வேண்டாம். இது அவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையாக அவர்கள் உணரக் கூடும்.

ஒரு பெண்ணைச் சந்தித்த முதல் சந்திப்பிலேயே அடுத்த சந்திப்புக்கான தேதியைக் கேட்காதீர்கள். உங்கள் மீதுள்ள ஆர்வம், அதனால் இழக்கக்கூடும்.

தொலைபேசியில் உரையாடும் போது நிதானமாகப் பேசுங்கள், அடுத்தக் கட்டத்தை தொலைபேசி மூலமே திட்டமிட முயற்சிக்க வேண்டாம்.

ஒரு பெண்ணின் ஆண் நண்பர்கள் பற்றி அவளிடம் தவறாகப் பேச வேண்டாம். ஏனெனில் உங்களைப் பற்றி மிகத்தவறான எண்ணங்களை இது ஏற்படுத்தி விடும்.

Wednesday, 9 September 2015

Know ur bank account balance by giving a missed call

All banks started this. Know ur bank account balance by giving a missed call to below numbers...from your registered mobile number.
Don't waste your ATM transactions just to see your balance...
1. Axis bank - 09225892258
2. Andhra bank - 09223011300
3. Allahabad bank - 09224150150
4. Bank of baroda - 09223011311
5. Bhartiya Mahila bank - 09212438888
6. Dhanlaxmi bank - 08067747700
7. IDBI bank - 09212993399
8. Kotak Mahindra bank - 18002740110
9. Syndicate bank - 09664552255
10. Punjab national bank -18001802222
11. ICICI bank - 02230256767
12. HDFC bank - 18002703333
13. Bank of india - 02233598548
14. Canara bank - 09289292892
15. Central bank of india - 09222250000
16. Karnataka bank - 18004251445
17. Indian bank - 09289592895
18. State Bank of india - Get the balance via IVR
1800112211 and 18004253800
19. union bank of india - 09223009292
20. UCO bank - 09278792787
21. Vijaya bank - 18002665555
22. Yes bank - 09840909000
23. South indian bank- 092 23 008488
24. Indian Overseas Bank: 044 4222 0004.
Good information always shared with others.
Its working awesome..
Post it in others also.

கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்...

கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்...
நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா? அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம்- கணவரிடம்/ மனைவியிடம் எந்த அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”
கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும். அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!”
ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக்கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா? இல்லையே…! அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!”
இனி கண்ணாடி முன்னால் நின்று முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த அறிவுரைகள் உங்கள் மனதை அலங்கரிக்கட்டும்..

யார் சொன்னா??ஆண்கள் மட்டும் தான் வரதட்சணை எதிர் பாக்குறாங்கனு??

யார் சொன்னா??ஆண்கள் மட்டும் தான் வரதட்சணை எதிர் பாக்குறாங்கனு?? பெண்களும் தான் எதிர் பாக்குறாங்க!!!!
1. கார் வைத்து இருக்க வேண்டும்,
2. சொந்த வீடு இருக்க வேண்டும்,
கை நிறைய சம்பாதிக்க வேண்டும்(சாப்ட்வேர்/பாரீன் மாப்பிளை யாக இருக்கனும் உள்ளூர் பயல்க எல்லாம் ஆண்கள் இல்லையோ?),
3. ஆன்சைட் செல்லும் வாய்புகள் இருக்க வேண்டும்,
4. முக்கியமா திருமணதிற்கு பின் தனி குடுத்தனம் போக தயாராக இருக்க வேண்டும்,
5. அக்கா தங்கை இருக்க கூடாது,
6. அமெரிக்கன் அக்சென்ட் ஆங்கிலம் பேச வேண்டும்
7. உங்க தாய் தந்தையர் மீது மரியாதையும் பணிவும் இருக்க வேண்டும் (ஆனால் அதை உங்களிடம் எதிர்பார்க்க கூடாது!)
8. பிஸியாக இருக்கனும் ஆனாலும் உங்களுக்காக நேரம் ஒதுக்கணும்,
9. பிட்டாக இருக்க வேண்டும்,
10.அலுவலகத்திற்கு அருகிலே வீடு இருக்க வேண்டும் (மாமியார் வீடு மட்டும் மிக தூரத்தில் இருக்க வேண்டும்),
11.கேட்ட பழக்க வழக்கம் இருக்க கூடாது அதை நிரூபிக்க ரத்த சோதனை சான்றிதழ் அளிக்க வேண்டும்,
இதை அனைத்தையும் எதிர்பார்க்கும் நீங்கள், இதுவும் ஒரு வித வரதட்சணை என்று புரியவில்லையா?
மொத்தத்தில் எ டி எம் போன்ற மெசினுடன் வசதியான வாழ்க்கைக்கு நீங்கள் தரும் லட்சம் தான் இந்த வரதட்சணை.
காஸ்டிலியான மாப்பிள்ளை வேண்டும் என்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் குடுக்க தயாராக இருக்கும் நீங்கலும் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் சேட்டும் ஒன்று தான்.
இனியும் வரதட்சணைக்கு ஆண்கள் மட்டும் தான் காரணம் என்று புலம்புவதை நிறுத்துங்கள். தன்னால் விடியும்.......

Related Posts Plugin for WordPress, Blogger...