WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Showing posts with label kavithaikal. Show all posts
Showing posts with label kavithaikal. Show all posts

Wednesday, 9 September 2015

கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்...

கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்...
நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா? அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம்- கணவரிடம்/ மனைவியிடம் எந்த அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”
கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும். அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!”
ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக்கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா? இல்லையே…! அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!”
இனி கண்ணாடி முன்னால் நின்று முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த அறிவுரைகள் உங்கள் மனதை அலங்கரிக்கட்டும்..

யார் சொன்னா??ஆண்கள் மட்டும் தான் வரதட்சணை எதிர் பாக்குறாங்கனு??

யார் சொன்னா??ஆண்கள் மட்டும் தான் வரதட்சணை எதிர் பாக்குறாங்கனு?? பெண்களும் தான் எதிர் பாக்குறாங்க!!!!
1. கார் வைத்து இருக்க வேண்டும்,
2. சொந்த வீடு இருக்க வேண்டும்,
கை நிறைய சம்பாதிக்க வேண்டும்(சாப்ட்வேர்/பாரீன் மாப்பிளை யாக இருக்கனும் உள்ளூர் பயல்க எல்லாம் ஆண்கள் இல்லையோ?),
3. ஆன்சைட் செல்லும் வாய்புகள் இருக்க வேண்டும்,
4. முக்கியமா திருமணதிற்கு பின் தனி குடுத்தனம் போக தயாராக இருக்க வேண்டும்,
5. அக்கா தங்கை இருக்க கூடாது,
6. அமெரிக்கன் அக்சென்ட் ஆங்கிலம் பேச வேண்டும்
7. உங்க தாய் தந்தையர் மீது மரியாதையும் பணிவும் இருக்க வேண்டும் (ஆனால் அதை உங்களிடம் எதிர்பார்க்க கூடாது!)
8. பிஸியாக இருக்கனும் ஆனாலும் உங்களுக்காக நேரம் ஒதுக்கணும்,
9. பிட்டாக இருக்க வேண்டும்,
10.அலுவலகத்திற்கு அருகிலே வீடு இருக்க வேண்டும் (மாமியார் வீடு மட்டும் மிக தூரத்தில் இருக்க வேண்டும்),
11.கேட்ட பழக்க வழக்கம் இருக்க கூடாது அதை நிரூபிக்க ரத்த சோதனை சான்றிதழ் அளிக்க வேண்டும்,
இதை அனைத்தையும் எதிர்பார்க்கும் நீங்கள், இதுவும் ஒரு வித வரதட்சணை என்று புரியவில்லையா?
மொத்தத்தில் எ டி எம் போன்ற மெசினுடன் வசதியான வாழ்க்கைக்கு நீங்கள் தரும் லட்சம் தான் இந்த வரதட்சணை.
காஸ்டிலியான மாப்பிள்ளை வேண்டும் என்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் குடுக்க தயாராக இருக்கும் நீங்கலும் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் சேட்டும் ஒன்று தான்.
இனியும் வரதட்சணைக்கு ஆண்கள் மட்டும் தான் காரணம் என்று புலம்புவதை நிறுத்துங்கள். தன்னால் விடியும்.......

BE படித்துப்பார்

BE படித்துப்பார்
உன்னைச் சுற்றி
நட்பு வட்டம் தோன்றும்
உலகம் விரியும்
ராத்திரியின் நீளம் சுருங்கும்
உனக்கும் கதை எழுத வரும்
தலையெழுத்து ஊசலாடும்
External தெய்வமாவான்
Assignment எழுதியே
கை உடையும்
கண்ணிரண்டும் பிதுங்கும்
BE படித்துப்பார்
புத்தகமே தலையணையாக்குவாய்
பல முறை bulb வாங்குவாய்
Study leave வந்தால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்
Semester வந்துவிட்டால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்
Arrear வைத்துப்பார்
ஆயம்மாகூட உன்னை கவனிக்கமாட்டார் - ஆனால்
கல்லூரியே உன்னையே கவனிப்பதாய் உணர்வாய்
Result அன்று
வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்
உன் அப்பா உன் HOD
அந்த staff இந்த principal
எல்லாம்
எமனின் ஏற்பாடுகள் என்பாய்
பொறியியல் படித்துப்பார்
இருப்பிடம் அடிக்கடி
இடம் மாறி இருக்கும்
நிசப்த அலைவரிசைகளில்
faculty குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்
உன் விதியே விளையாடி
உனக்கெதிராய் அம்பு விடும்
Padips image- ஐ
groupstudy கிழிக்கும்
Syllabus
நைல் நதியாய் பெருக்கெடுக்கும்
மதிப்பெண்கள் மட்டும்
சஹாராவாகும்
கனவுகள் சமுத்திரமாகும்
பின் outsourcingக்குள்
கனவுகள் அடங்கும்
BE படித்துப்பார்
Test எழுதி எழுதியே
சோர்ந்துபோக
உன்னால் முடியுமா?
Project guide-இன்
இம்சையை அடைந்ததுண்டா?
Border line இல் passஆகிற சுகம்
அறிந்ததுண்டா?
ஒரே நாளில் syllabus cover செய்ய தெரியுமா?
First bench ஐ தனிமையாக்கவும்
Last bench ஐ சபையாக்கவும்
உன்னால் முடியுமா?
Depression அடைய வேண்டுமா?
பல மாதம் சென்னையில்
பணி தேடும் படலத்தில்
பட்டினி கிடந்து பழகியதுண்டா?
BE படித்துப்பார்
சின்னச் சின்ன bitகளில்
சிலிர்க்க முடியுமே
அதற்காகவேனும்
Page நிரப்பியே
pass ஆக முடியுமே
அதற்காகவேனும்
Breakage என்ற சொல்லுக்கும்
Caution deposit என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தங்கள் விளங்குமே
அதற்காகவேனும்
Arrear வைத்துக்கொண்டே
படிக்கவும் முடியுமே
படித்துக்கொண்டே
Arrear எழுதவும் முடியுமே
அதற்காகவேனும்
பொறியியல் படித்துப்பார்
இறுதி ஆண்டு முடிக்கையில்
bank manager சட்டை பிடித்தாலும்
உறவுகள்
உயிரெடுத்தாலும்
விழித்துப் பார்க்கையில்
உன் கனவுகள்
களவு போயிருந்தாலும்
ஒரே பணிக்கு பலருக்கு
Offer letter கொடுக்கப்பட்டாலும்
நீ தேர்வான
companyஇல் இருந்து
உன்னை அழைக்க மறந்(றுத்)தாலும்
பொறியியல் படித்துப்பார்
BPO - journal edition
இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்
BE படித்துப்பார்
.....¿

காதலும்,ஊழலும் உறவுக்காரர்கள்

காதலும்,ஊழலும்
உறவுக்காரர்கள்
ஆம்,,,
இரண்டுமே
அரசல் புரசலாக
பேசப்பட்டு
கடைசியில்
காரி உமிழப்படுகிறது,
காதலுக்கும்
ஊழலுக்கும்
ஜாதி,மதம்,இனம்,மொழி
ஏதுமில்லை
எங்கும் நிறைந்திருக்கிறது,
காதலிலும்
ஊழலிலும்
ஏதோ ஒரு குடும்பம்
பாதிக்கப்படுகிறது,,,
காதல்
வாழ்க்கைக்கு ஆதாரம்
ஊழல்
வாழ்க்கைக்கு சேதாரம்
காதலும்
ஊழலும்
சமுகத்தில்
மாற்றத்தை ஏற்படுத்துகிறது
காதல் நல்வழியிலும்
ஊழல் தீயவழியிலும்
ஆம்,,,தோழர்களே
காதல்
நன்மை பயக்கும்
பாக்டீரியா,,,
ஊழல்
தீமை பயக்கும்
பாக்டீரியா,,,,!

கண்களை பாதுக்காப்போம் கண்தானம் செய்வோம்,,,!

உயிரினங்களின்
உண்மையான அழகு
கண்களில் மட்டுமே
காணப்படுகிறது,,,,!
அதனால்தான்
கண்களில் பட்டவுடன்
இதயத்தில் நுழைந்து~நம்மை
இம்சை செய்கிறது
காலங்காலமாய்
காதல்,,,,

காதலியையும்
மனைவியையும்
குழந்தைகளையும்கூட
கண்ணே மணியே
என்றுதானே
கொஞ்சுகிறோம்,,,

கண்கள்
தூய்மை விரும்பிகள்
ஒரு சிறு தூசிப்பட்டால்கூட
தாங்கிக்கொள்ள முடியாமல்
கண்ணீர் வடிக்கிறது,,,

கண்களைவிட
உயர்ந்த நிழற்பட கருவியை
எந்த நிறுவனங்களும்
இதுவரை உருவாக்கவில்லை
அப்படியே
உருவாக்க நினைத்தாலும்
அதையும் நம்
கண்களால் பார்த்தே
உருவாக்க வேண்டும்,,,

நல்லது,,,கெட்டது,,,
அத்தனையும்
தீர்மானிப்பது
கண்களே,,,
கண்களையும்
காதலையும் பாடாத
கவிஞர்களே இல்லை,,,,

ஏழையின் சிரிப்பில்
இறைவனையும்
கடைக்கண் பார்வையில்
காதலையும்
உலகத்தை உற்றுப்பார்க்க
உதவும் உண்ணத கருவி
கண்கள்,,,,

மனிதனுக்கு
மறுப்பிறவி உண்டோ,இல்லையோ
நிச்சயமாய்
கண்கள் மறுப்பிறவி
எடுத்துக்கொள்கிறது
கண்தானம் மூலமாக
கண்களை பாதுக்காப்போம்
கண்தானம் செய்வோம்,,,!

Friday, 20 March 2015

காதல்

எதையுமே எதிர்பார்க்காமல் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து வாழ எந்த மனம் துடிக்குதோ அதுவே உண்மையான காதல்...

Monday, 9 March 2015

Magalir dina vazhthukal-krtamilanz

பாசம் சுமந்தவள்
தங்கையாகிறாள்...
💐💐💐💐💐💐💐
உணர்வு புரிந்தவள்
தோழியாகிறாள்..
🌸🌸🌸🌸🌸🌸🌸
நேசம் புரிந்தவள்
மனைவியாகிறாள்
🌷🌷🌷🌷🌷🌷
உயிர் சுமந்தவள்
தாயாகிறாள்...
🍀🍀🍀🍀🍀
பெண்ணின்றி அமையாது
இவ்வுலகு.
🌹🌹🌹🌹🌹🌹
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

தமிழனடா நீ..Krtamilanz

68 :- ஆண்டுகளாய்த்தான் நீ இந்தியன்
200 :- ஆண்டுகளாய்த்தான் நீ
கிருத்துவன்
800 :- ஆண்டுகளாய்த்தான் நீ
இசுலாமியன்
2000:- ஆண்டுகளாய்த்தான் நீ இந்து
ஆனால்
100000
ஆண்டுகளுக்கு முன்பே மனித
இனம் தோன்றிய காலம் முதல்
குமரி கண்டம் லெமூரிய கண்டம்
நாகரீக காலம் தொட்டு,
2 கண்டங்களில் 13
தேசங்களை கட்டி ஆண்ட
வீர தமிழனடா நீ..

12th & 10th Exams-Krtamilanz

12th & 10th Exams :

தேர்வு நேரம் நெருங்கிவிட்டது தோழா... நம்

தேசத்திற்கு பெருமை சேர்ப்போம் தோழா..!

கடினமாக படிக்க முயற்சி செய்... நீ

கவலை மறந்து படித்து
வெற்றிப் பெற செய்..!

தேர்வு நேரத்தில் தான் கிரிக்கெட் வரும்... நீ

தன்னம்பிக்கையோடு படித்தால் உனக்கு
வெற்றி வரும்..!

கிரிக்கெட் ஆட்டத்தை தேர்வு முடிந்து Highlights பாரு...

கிட்டே நெருங்கும் தேர்விலே படிப்பில் கவனம் செலுத்திரு..!

பழங்கால பழமொழிகள் :- Krtamilanz

பழங்கால பழமொழிகள் :-

* இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.

* இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.

* உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.

* உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?

* எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.

* எறும்பூரக் கல்லும் தேயும்.

* ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.

* ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

* கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.

* கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.

கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?

* கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.

* கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.

* கழுதை அறியுமா கற்பூர வாசனை?

Sunday, 3 August 2014

பிறந்தநாள் வாழ்த்துகள்

பிறந்தநாள் வாழ்த்துகள்

karthick raja


பூக்களும் வர்ணமும்
சேர்ந்து தொடுத்த
நந்தவன தேருக்கு
இன்று பிறந்த நாள்

கல்லும் உளியும்
சேர்ந்து வடித்த
சிற்பத்திற்கு
இன்று பிறந்த நாள்


தமிழும் இலக்கணமும்
சேர்ந்து எழுதிய
கவிதைக்கு
இன்று பிறந்த நாள்


இசையும் குரலும்
சேர்ந்து படித்த
பாட்டுக்கு
இன்று பிறந்த நாள்


கடலும் காற்றும்
சேர்ந்து கொடுத்த
அலைக்கு
இன்று பிறந்த நாள்


சந்திரனும் சூரியனும்
அளித்த ஆலோசனை படி
இந்திரன் படைத்த
என் அழகு சுந்தரிக்கு
இன்று பிறந்த நாள்


என் உடலும் உள்ளமும்
ஒன்றாய் சேர்ந்து
உயிரின் உருவமாய் நிற்கும்
என் மனைவிக்கு
இன்று பிறந்த நாள்
என் இனியவளே
உனக்கு என்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
என்றும் உன்னை
என்னுள் வைத்திருக்கும்
உன் கணவன்

சுதந்திர தினம் பாதுகாப்பு

சுதந்திர தினம் கூட பாதுகாப்பு பலமாகத்தான் இருக்கின்றதுஎனினும் பயமாகவே இருக்கின்றதுசுதந்திர தினம்.


Related Posts Plugin for WordPress, Blogger...