உயிரினங்களின்
உண்மையான அழகு
கண்களில் மட்டுமே
காணப்படுகிறது,,,,!
அதனால்தான்
கண்களில் பட்டவுடன்
இதயத்தில் நுழைந்து~நம்மை
இம்சை செய்கிறது
காலங்காலமாய்
காதல்,,,,
காதலியையும்
மனைவியையும்
குழந்தைகளையும்கூட
கண்ணே மணியே
என்றுதானே
கொஞ்சுகிறோம்,,,
கண்கள்
தூய்மை விரும்பிகள்
ஒரு சிறு தூசிப்பட்டால்கூட
தாங்கிக்கொள்ள முடியாமல்
கண்ணீர் வடிக்கிறது,,,
கண்களைவிட
உயர்ந்த நிழற்பட கருவியை
எந்த நிறுவனங்களும்
இதுவரை உருவாக்கவில்லை
அப்படியே
உருவாக்க நினைத்தாலும்
அதையும் நம்
கண்களால் பார்த்தே
உருவாக்க வேண்டும்,,,
நல்லது,,,கெட்டது,,,
அத்தனையும்
தீர்மானிப்பது
கண்களே,,,
கண்களையும்
காதலையும் பாடாத
கவிஞர்களே இல்லை,,,,
ஏழையின் சிரிப்பில்
இறைவனையும்
கடைக்கண் பார்வையில்
காதலையும்
உலகத்தை உற்றுப்பார்க்க
உதவும் உண்ணத கருவி
கண்கள்,,,,
மனிதனுக்கு
மறுப்பிறவி உண்டோ,இல்லையோ
நிச்சயமாய்
கண்கள் மறுப்பிறவி
எடுத்துக்கொள்கிறது
கண்தானம் மூலமாக
கண்களை பாதுக்காப்போம்
கண்தானம் செய்வோம்,,,!