'மகா நடிகன்' படத்துல சத்தியராஜ்
நடிகராவே வருவார்...
அவர்க்கிட்ட
ரிப்போர்ட்டர் ஒருத்தர்
கேள்வி கேப்பார்...
'சார், உங்க படங்கள் எல்லாம் ஹிட் ஆகிட்டே இருக்கு. வேற
மொழி படங்கள்ல நடிப்பீங்களா...'?
'அய்யயோ...நான் எப்பவும் தமிழ்
படங்களில் மட்டும் தாங்க
நடிப்பேன்..ஏன்னா, இங்க தான்
இளிச்சி வாய ரசிகர்கள்
இருக்காங்க...
வெளியிலிருந்து வரவங்களுக்கு கோயில்
கட்டுவாங்க...
உள்ளூர்
நடிகர்களை செறுப்பால
அடிப்பாங்க'னு போட்டு தாக்குவார்...
இதே மாதிரி 'கோவை பிரதர்ஸ்'
படத்துல ஓப்பனிங் சீன்ல 'நீயும்
நானும் அண்ணன்
தம்பி டா'னு பாட்டு பாடிட்டு டான்ஸ்
ஆடிக்கிட்டு மார்கெட்
வழியா வருவாரு...
அப்போ அங்க மார்க்கெட்ல
வேலை செஞ்சிட்டு இருக்கிறவங்க
எல்லாரும் சத்தியராஜ்
பின்னாடி டான்ஸ்
ஆடுவாங்க...
உடனே சத்தியராஜ் டான்ஸ்
நிறுத்திட்டு பின்னாடி டான்ஸ்
ஆடினவங்கள பார்த்து....
'ஏண்டா டேய்....நடிக்கி
றது என்னோட தொழில். அதனால
நான் பாட்டு பாடிட்டு டான்ஸ்
ஆடிட்டு வரேன்...
நீங்க ஏண்டா உங்க வேலையவிட்டுட்டு என்
பின்னாடி வந்து ஆடுறீங்க...?'
'தலைவா..நீங்க
கருத்தா பாட்டு பாடிட்டு வந்தீங்க..அதான்
உங்க கூட ஆடினோம்...'
'ஹஹஹ்ஹாஹ....சரி, இப்ப நான்
'நீயும் நாணும் அண்ணன்
தம்பி'னு பாடுனேன்...எங்கே...எங்ககிட்ட ஒரு 2000 ரூபாய்
பணம் கேளு'
'தலைவா...ஒரு 2000 ரூபாய்
பணம் கொடு தலைவா...'
(சத்தியராஜ்
அவனை பளார்னு அறைஞ்சிட்டு)
'ஏண்டா டேய்...நான் பஞ்ச் டயலாக்பேசுறதும்,
கருத்தா பாட்டு பாடுறதும்
எல்லாம் கார் வாங்கவும்
பங்களா வாங்கவும் தான்...
இதுல
உனக்கு போய்
காசு தரனுமா...நீங்கலாம்
திருந்தவே மாட்டிங்களா...'?
இப்படி ஓப்பனா தன்னோட சக
நடிகர்களின் உண்மை முகத்தையும்
ரசிகர்களின் இளிச்சிவாய்த்தனத்தையும்
பட்டுனு உடைச்சி சொல்வார்...
# இதையே தான் நானும்
சொல்றேன்...நீங்க
யாருக்கு கொடி பிடிக்கிறீங்க..?
யாரை தலையில
தூக்கி வெச்சிட்டு ஆடுறீங்க...?
நடிகர்களுக்கு என்ன இல்ல...??
ஒரு ரசிகன் மாசம் 20 ஆயிரம்
ரூபாய் சம்பாதிக்கிறான்னு வெச்சிக்கிவோம்.
ஒரு வருஷத்துக்கு 2 லட்சத்து 40
ஆயிரம் ரூபாய். 25
வயசிலிருந்து 60 வயசு வரைக்கும்
சம்பாதிக்கும் பணம் 84 லட்ச
ரூபாய். சரி, இடையில் சம்பள
உயர்வு இருந்தாலும் கூட 1கோடி ரூபாய்னு வெச்சிக்குவோம்...
ஆனா, அந்த ரசிகனின் தலைவன்
ஒரு படத்திற்கு(5 மாதங்களில்)
வாங்கும் சம்பளம் 15 டூ 20கோடி. அதாவது, நீங்க ஆயுள்
முழுக்க சம்பாதிக்கும் பணத்தை,
உங்க தலைவன் 5 மாதத்தில் 20மடங்கு அதிகமாக
சம்பாதித்து விடுகிறார்...
அப்போ அவருடைய ஆயுள் முழுக்க எவ்வளவு சம்பாதிப்பார்...?
இவ்வளவு இருந்தும் இன்னும் இன்னும் ஏன்
அவங்களை தூக்கிக்கிட்டே இருக்கீங்க...
நடிகர்களை பாராட்டலாம்
ஆனா அவர் தான் எல்லாம்னு
மன்றங்கள், இயக்கங்கள்னு
உங்க வாழ்கையின் முக்கிய வேலைய
விட்டுட்டு சுத்துறது ஒரு மகா மகா மகா
#முட்டாள்த்தனம்
Services
- Home
- AnnaUnivNews
- Cricket News
- தமிழில் தொழில்நுட்ப தகவல்கள்
- School News
- Examination Tips
- Health Tips
- Samaiyal Tips
- Facebook Tricks
- Blogger Tips
- Computer Tricks
- SIM details
- Celebrity Birthdays(Daily)
- Cinema News
- watch trailers
- Colleges Info(தமிழ்நாடு)
- Langauges Learning
- GTA Save Games
- Earn Money Online
- Model Letters
- Dote News
- General Knowledge
- Placement Info
- Gate Books
- About
- Contact
- Privacy Policy
Saturday, 6 June 2015
முட்டாள்த்தனம்
#thalabathy back in action #puli
புலி'யிலும் பாடகர் விஜய்!
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'புலி' படத்தில் வைரமுத்து எழுதியுள்ள பாடல் ஒன்றை பாடியிருக்கிறார் விஜய்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'புலி'. ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் விஜய்யோடு நடித்து வருகிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்துக்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான படங்களில் அவரே ஒரு பாடல் பாடுவது வழக்கம். அதே போல 'புலி' படத்திலும் வைரமுத்து எழுதியிருக்கும் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார் விஜய்.
அப்பாடல் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் ஸ்டூடியோவில் வைத்து பதிவு செய்யப்பட்டது. பாடல் பதிவின் போது இயக்குநர் சிம்புதேவன், தயாரிப்பாளர்கள் பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன்ஸ் உடன் இருந்தார்கள்.
படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்து படக்குழுவிடம் விசாரித்த போது, "ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்த நாளன்று 'புலி' பர்ஸ்ட் லுக் வெளியிட தீர்மானித்திருக்கிறோம். விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினங்களை கணக்கில் கொண்டு செப்டம்பர் 17ம் தேதி படத்தை வெளியிட தீர்மானித்து இருக்கிறோம்" என்று தெரிவித்தார்கள்.
நண்பர்கள் கவனத்திற்கு... படித்து விட்டு ஷேர் செய்யுங்கள்....................
தற்போது சீனாவில் நடந்த துயரச் சம்பவம் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற சீன தேசத்தை சேர்ந்த ஒருவர் அங்கு கடையில் விற்பனை செய்த பலாப்பழத்தை வாங்கி சாப்பிட்டு விட்டு கூடவே coco-cola வையும் அருந்தி இருக்கிறார்..இதனால் சிறிது நேரம் கழித்து நெஞ்சடைத்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.. மருத்துவ மனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்த போது தான் உண்மை தெரிய வந்துள்ளது.. அது என்னவென்றால் பலாப்பழத்தை சாப்பிட்டு விட்டு உடனே COCO-COLA அருந்தியதால் அது விஷமாக மாறி இருக்கிறது.. அப்படி சாப்பிடுவது 5 அடி நாகப்பாம்பின் விஷத்துக்கு சமம்..அதனால் தயவு செய்து பலாப்பழம் சாப்பிட்டு எட்டு மணி நேரத்திற்கு COCO-COLA; PEPSI போன்ற பானங்களை அருந்தாதீர்கள்... தயவுசெய்து இதை அனைவருக்கும் பகிருங்கள்...
இவண்...... உங்களில் ஒருவன்.
பெட்ரோல் பங்குகளில் நாள்தோறும் நடக்கும் பகல் கொள்ளை தெரியுமா உங்களுக்கு?
இப்படியுமா ஏமாற்றுவார்கள் என்று என்னை ஆச்சரியம் அடைய வைத்த ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன்- இனிமேல் யாரும் இவ்வாறு ஏமாறக் கூடாது என்பதற்காக.
வழக்கமாக இரு சக்கர வாகன ஓட்டிகள்தான் இவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள்.
அதாவது, நீங்கள் கவனித்தது உண்டா - பெட்ரோல் முழுமையாக உங்கள் டேங்கில் நிரம்பும் முன்னதாகவே கையில் உள்ள லாக்கை அழுத்தி விடுவார்கள். உதாரணமாக நீங்கள் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட சொல்லி இருப்பீர்கள். அந்த நபர் 100 ரூபாய் என பொத்தானை அழுத்தி பெட்ரோல் போட ஆரம்பிப்பார். ஆனால் பெட்ரோல் இறங்கி கொண்டிருக்கும்போதே மீட்டரில் 90 ரூபாய்க்கு அருகில் வரும்போது அவர் கையில் உள்ள விசையை அழுத்தி பின் ரிலீஸ் செய்வார். பின்னர் பெட்ரோல் மெதுவாக இறங்கி 100 ரூபாயை தொடும்.
இது வழக்கமாக எல்லோரும் பார்க்கும் ஒரு விஷயம்தான். ஆனால் இந்த சாதாரண விஷயத்தினால் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை மதிப்புள்ள பெட்ரோல் உங்களுக்கு குறைகிறது என்று தெரியுமா?
எவ்வாறெனில், பெட்ரோல் பம்ப் மீட்டர் ஒரே சீராக இயங்கினால்தான் சரியாக 100 ரூபாய்க்கு பெட்ரோல் இறங்கும். நடுவில் தடை செய்யப்பட்டு பின்னர் மீண்டும் இயங்கினால், மீட்டர் recalibration ஆகி குறைவான அளவு பெட்ரோல் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும்.
இது போல நூதன திருட்டு மூலம் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் நாள்தோறும் 10000 ரூபாய் முதல் 20000 ரூபாய் வரை லாபம் அடைவதாக அறிந்தேன்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த விஷயத்தை பற்றி என் நண்பர் எனக்கு கூறும் வரை எனக்கும் இது தெரியாது. ஆனால் இப்போது நான் இதில் கவனமாக இருக்கிறேன். பெட்ரோல் போடும் நபர் விசையை அழுத்த இப்போது அனுமதிப்பதில்லை. பெட்ரோல் முழுமையாக இறங்கும் முன் விசையை அழுத்த முயற்சித்தால் கூடாது என எச்சரிக்கிறேன். தற்போதெல்லாம் என்னை பார்த்தாலே அவர்கள் உஷார் ஆகி விடுகிறார்கள். விசையின் மீது கையை வைப்பதே இல்லை.
விழிப்புடன் இருங்கள். ஏமாற்றப்படுவதை தவிருங்கள்.
சிங்கப்பூரில் இருபது வயது
சிங்கப்பூரில் இருபது வயது நிரம்பிய ஒரு இளைஞனை மற்ற நாட்டு இளைஞர்கள் நேருக்கு நேர் மோதி ஜெயிப்பது வெகு சிரமம்.
ஏன் என்று கேட்கிறிர்களா....?
இதோ அதற்கான விடை...
சிங்கப்பூர்வாசிகளின் பிள்ளைகள் அனைவரும் 18 வயதை தொடும்போது மூன்றாண்டுகள் அவர்கள் கட்டாய ராணுவ பயிற்சியில் ஈடுபட்டே ஆகவேண்டும். இதற்கு National Service- தேசிய சேவை என்று பெயர்.
இதில் பணக்கார வீட்டு பிள்ளைகள், ஏழை வீட்டு பிள்ளைகள் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. பிரதமர் வீட்டு பிள்ளையாக இருந்தாலும் இந்த பயிற்சிகளை மேற்கொண்டே ஆக வேண்டும்.
பயிற்சி காலங்களில் அவர்களுக்கு தற்காப்பு கலைகளும், போர் யுத்திகளும்
இரவு பகல் பாராத கடுமையான பயிற்சிகளோடு தினம்தோறும் வழங்கப்பட்டு கொண்டே இருக்கும். இந்த மூன்று ஆண்டுகளில் ஞாயிற்று கிழமை மற்றும் பொது விடுமுறை தினங்களை தவிர்த்து ஏனைய நாட்களில் அவர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பயிற்சி முடிந்து வருகைத்தரும் ஒவ்வோரு வாலிபனும் கைதேர்ந்த ஒரு போர்வீரனாகத்தான் வெளியே வருவான்.
பயிற்சியில் இருக்கும் காலக்கட்டத்தில் இவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.
போர் என்று வந்துவிட்டால் 20 வயதை கடந்த, இராணுவ பயிற்சி முடித்த அத்தனை சிங்கப்பூரர்களுக்கும்...
★துப்பாக்கியால் சுட தெரியும்.
★பீரங்கிகளை இயக்க தெரியும்.
★வானூர்தி ஓட்டத்தெரியும்.
★அவசர காலங்களில் எப்படி
- செயல்படுவது எனத்தெரியும்.
★முதலுதவி செய்ய தெரியும்.
இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் தெரியுமா...?
அத்தியாவசிய தேவைகளாக குடிநீர், உணவுப்பொருட்கள், மின்சாரம் போன்ற விஷயங்களில் பிற நாடுகளை சார்ந்திருக்கும் ஒரு சிறிய நாடு... இன்றைக்கு பொருளாதார வளர்ச்சியிலே உலக நாடுகளுக்கெல்லாம் சவால் விடக்கூடிய் அளவுக்கு வளர்ந்து நிற்பதற்கு அந்த நாட்டின் கட்டுக்கோப்பான குடிமக்களும், நல்ல அரசாங்கமும்தானே காரணம்..?
இது ..ஏன் நம் தாய்நாட்டில் சாத்தியமில்லாமல் போனது..? எல்லா வளங்களும் இருந்தும் ஏன் நமக்கு இந்த நிலைமை..?
18 வயது நிரம்பினால் தன்னுடைய ஓட்டுக்களை விற்று காசாக்கலாம் என நினைக்கும் குடிமகன்கள் என் தேசத்தில் இருக்கும் வரை...
உலகநாடுகளின் குப்பை தொட்டியாகவே எம் தேசம்(தமிழ்நாடு) விளங்கும்.