சிங்கப்பூரில் இருபது வயது நிரம்பிய ஒரு இளைஞனை மற்ற நாட்டு இளைஞர்கள் நேருக்கு நேர் மோதி ஜெயிப்பது வெகு சிரமம்.
ஏன் என்று கேட்கிறிர்களா....?
இதோ அதற்கான விடை...
சிங்கப்பூர்வாசிகளின் பிள்ளைகள் அனைவரும் 18 வயதை தொடும்போது மூன்றாண்டுகள் அவர்கள் கட்டாய ராணுவ பயிற்சியில் ஈடுபட்டே ஆகவேண்டும். இதற்கு National Service- தேசிய சேவை என்று பெயர்.
இதில் பணக்கார வீட்டு பிள்ளைகள், ஏழை வீட்டு பிள்ளைகள் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. பிரதமர் வீட்டு பிள்ளையாக இருந்தாலும் இந்த பயிற்சிகளை மேற்கொண்டே ஆக வேண்டும்.
பயிற்சி காலங்களில் அவர்களுக்கு தற்காப்பு கலைகளும், போர் யுத்திகளும்
இரவு பகல் பாராத கடுமையான பயிற்சிகளோடு தினம்தோறும் வழங்கப்பட்டு கொண்டே இருக்கும். இந்த மூன்று ஆண்டுகளில் ஞாயிற்று கிழமை மற்றும் பொது விடுமுறை தினங்களை தவிர்த்து ஏனைய நாட்களில் அவர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பயிற்சி முடிந்து வருகைத்தரும் ஒவ்வோரு வாலிபனும் கைதேர்ந்த ஒரு போர்வீரனாகத்தான் வெளியே வருவான்.
பயிற்சியில் இருக்கும் காலக்கட்டத்தில் இவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.
போர் என்று வந்துவிட்டால் 20 வயதை கடந்த, இராணுவ பயிற்சி முடித்த அத்தனை சிங்கப்பூரர்களுக்கும்...
★துப்பாக்கியால் சுட தெரியும்.
★பீரங்கிகளை இயக்க தெரியும்.
★வானூர்தி ஓட்டத்தெரியும்.
★அவசர காலங்களில் எப்படி
- செயல்படுவது எனத்தெரியும்.
★முதலுதவி செய்ய தெரியும்.
இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் தெரியுமா...?
அத்தியாவசிய தேவைகளாக குடிநீர், உணவுப்பொருட்கள், மின்சாரம் போன்ற விஷயங்களில் பிற நாடுகளை சார்ந்திருக்கும் ஒரு சிறிய நாடு... இன்றைக்கு பொருளாதார வளர்ச்சியிலே உலக நாடுகளுக்கெல்லாம் சவால் விடக்கூடிய் அளவுக்கு வளர்ந்து நிற்பதற்கு அந்த நாட்டின் கட்டுக்கோப்பான குடிமக்களும், நல்ல அரசாங்கமும்தானே காரணம்..?
இது ..ஏன் நம் தாய்நாட்டில் சாத்தியமில்லாமல் போனது..? எல்லா வளங்களும் இருந்தும் ஏன் நமக்கு இந்த நிலைமை..?
18 வயது நிரம்பினால் தன்னுடைய ஓட்டுக்களை விற்று காசாக்கலாம் என நினைக்கும் குடிமகன்கள் என் தேசத்தில் இருக்கும் வரை...
உலகநாடுகளின் குப்பை தொட்டியாகவே எம் தேசம்(தமிழ்நாடு) விளங்கும்.
Services
WELCOME
Important Services
- Home
- AnnaUnivNews
- Cricket News
- தமிழில் தொழில்நுட்ப தகவல்கள்
- School News
- Examination Tips
- Health Tips
- Samaiyal Tips
- Facebook Tricks
- Blogger Tips
- Computer Tricks
- SIM details
- Celebrity Birthdays(Daily)
- Cinema News
- watch trailers
- Colleges Info(தமிழ்நாடு)
- Langauges Learning
- GTA Save Games
- Earn Money Online
- Model Letters
- Dote News
- General Knowledge
- Placement Info
- Gate Books
- About
- Contact
- Privacy Policy
Saturday, 6 June 2015
சிங்கப்பூரில் இருபது வயது
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment