இப்படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுவரும் வேளையில் ஒவ்வொரு நடிகர், நடிகைகளாக இணைந்து நடித்து வருகிறார்கள். தற்போது மேலும் ஒரு படியாக தெலுங்கு நடிகர்கள் ராணா, பிரபாஸ், ரவிதேஜா ஆகியோர் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
- இந்த நிலையில் மாஸ் படக்குழுவினருடன் ப்ரணிதாவும் இணைந்துள்ளார். இவர் இதற்கு முன் ‘உதயம்’, கார்த்தியுடன் இணைந்து ‘சகுனி’ படத்தில் நடித்திருந்தார். தற்போது மாஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யாவுடன் இணைந்து ப்ரணிதா நடிக்கவுள்ளார். ப்ரணிதா-சூர்யா நடிக்கும் காட்சிகளை படம்பிடிப்பதற்காக இப்படக்குழு இம்மாதம் பல்கேரியா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.