இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஹீரோயினாக நயன்தாரா நடிப்பார் என உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. ராஜாராணியின் முக்கிய அட்ராக்ஷனாக இருந்தவர் நயன்தாரா. என்னை இதுவரை இயக்கியவர்களில் அட்லிதான் சிறந்தவர் என்று நயன்தாரா சான்றிதழ் தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரே படத்தில் பலரை தயாரிப்பாளர்களாக்கி ஒன்றுக்கு மேற்பட்டவர்களை சந்தோஷப்படுத்துவது ரஜினியின் வழக்கம். அதேபோல் இந்தப் படத்தை மூன்று பேர் தயாரிக்கிறார்கள். கலைப்புலி தாணு, த நெக்ஸ்ட் பிக் ஃபிலிம் மற்றும் விஜய் தொலைக்காட்சி மகேந்திரன்.
இதில் விஜய் தொலைக்காட்சி மகேந்திரன்தான் அட்லி ராஜாராணி படத்தை இயக்க காரணமாக இருந்தவர். அட்லி ராஜாராணி ஸ்கிரிப்டை தயார் செய்த போது அதில் நடிப்பதாக இருந்தவர் சிவ கார்த்திகேயன். காரணம், அட்லியின் குறும்படத்தில் அவர்தான் நடித்திருந்தார்.
நண்பா நாம சேர்ந்து படம் பண்ணுவோம் என்று சொன்ன அட்லி, ராஜாராணி படத்தின் கதையை மகேந்திரனிடம் கூற, அவர்தான் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா என பெரிய டீமை முருகதாஸ் மூலமாக அமைத்துக் கொடுத்தார். ஆர்யா, நயன் என்றதும் சிவ கார்த்திகேயனை போய்யா என்று அட்லி கழற்றிவிட்டது கலகல எபிசோட்.
2015 கோடையில் படம் தொடங்குகிறது.
No comments :
Post a Comment