WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Thursday, 17 September 2015

கேவலமான Education system-Anna university

நண்பர் ஒருவரின் புலம்பல்
குறிப்பாக BE CSE FINAL YEAR நண்பர் அவர்
அவரது சோக கதையை வெளியிடுகிறேன் இங்கே படியுங்கள் பகிருங்கள் நண்பர்களே!
கதை தலைப்பு:கேவலமான Education system
என் சோக கதையை கேளுங்க நண்பர்களே
+2 முடிச்சிட்டு engineering சேரலாம்னு பல கனவுகளோடு, என்ன department எடுக்கலாம்னு யோசிச்சேன்
mechanical - வேணாம் காருக்கு அடில படுக்கவிட்டுருவாங்க
electrical -அய்யோ shock அடிக்கும்
civil - வெயில்ல சுத்தனுமே
computer - ஹாம் AC roomல உட்காந்து வேலைப்பார்க்கலாம்...
computer பற்றி எல்லாம் தெரிஞ்சிக்கலாம்...
spider man மாதிரி graphics, chuti Tv மாதிரி animation, hackலாம் பண்ணலாம்னு computer department எடுத்தேன்...
1st yearல maths, physics, chemistryனு நடத்திட்டு இருந்தாங்க...
சார்... computer subject இன்னும் வரலனேன்
அதெலாம் 2nd yearல தான் உண்டுனாரு...
சரினு 2nd year போனா, அங்க electrical, mechanical, M.B.A, maths subjectனு ஒடிட்டு இருக்கு...
computer subject 2 தான் இருந்துச்சு...
சார் இந்த graphics, animationலாம் எப்ப வரும்னு கேட்டா,
final year ல வரும்.
அதுக்குனு Multimedia lap இருக்குனாங்க...
சரினு நானும் hollywood graphics laboratory range think பண்ணி போனா, அதே பழைய labல multimedia lapனு stricker ஒட்டி வைச்சிருக்கானுக,
சரினு உள்ளே போனா, அங்க vodofone zozoo மாதிரி ஒரு பொம்மைய flashல வரஞ்சிட்டு, இதான் animationனு சொல்றானுவ,
நானும் வரைஞ்சேன்.
but vodofone zozooக்கு T.P வந்தமாதிரி இருந்துச்சு,
இப்படி கேவலமான Education system இருந்தா, இளைஞர்கள் facebook twitterல குப்பை தான் கொட்ட முடியும்!
ஒரு விஞ்னானிய வெளங்கமாம ஆக்குனது, இந்த "Anna University" தான்.

Tuesday, 15 September 2015

48th Engineering day 15-09-15

இன்று 48வது “பொறியாளர் தினம்”- இந்தியாவின் முதல் பொறியாளர் விஸ்வேஸ்வரையா நினைவாக!
இந்தியாவில் வேலை இல்லாத் திண்டாடத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டாலும், மாணவர்கள் சாரை சாரையாக படையெடுக்கும் துறை பொறியியல். அத்தகைய சிறப்பு பெற்ற பொறியாளர்களுக்கான 48வது "பொறியாளர்கள் தினம்" இன்று கொண்டாடப்படுகின்றது.
அப்படி பொறியாளர்கள் அனைவருக்கும் முதன்மைப் பொறியாளராக இருந்த ஒருவரின் பிறந்தநாளே இந்தியாவில் பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் பிறந்த மோக்சகுந்தம் விஸ்வேஸ்வரையா தான் அந்தப் பெருமைக்குரிய பொறியாளர்.
"சர் எம்.வி" என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர். புனே பல்கலைக்கழகத்தின் காலேஜ் ஆப் எஞ்சினியரிங் கல்லூரியில் படித்த இவர், மும்பை பொதுப் பணித்துறையில் பணியாற்றி, பிறகு இந்திய நீர்பாசனத்துறை கமிஷனில் பொறியாளராக அரசால் நியமிக்கப்பட்டார்.

Monday, 14 September 2015

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..


1. எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும், ஒருவர்
எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.
.
2. கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில், தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.
.
3. மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.
.
4. இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய
பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்கூடாது. பொய்யின் ஆரம்பமே பயம் தான்.
.
5. எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள்
இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும். கணவன்
குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின்
குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது.தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.
.
6. மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்காவிட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.
.
7. மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும்.கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும். (இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)
.
8. கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம்
கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித்தான் நடத்துகின்றனர்.
.
9. கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் நேரமாய் வீடு திரும்ப வேண்டும். அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றக் கொள்ளவேண்டும்.
.
10. அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும்அவளை திட்டக் கூடாது. அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள்.
திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித்
தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள்
சமையலுக்காக. பக்குவம் பார்த்ததும் வந்து விடக்கூடியதல்ல. பல வருட அனுபவத்தில் வருவது.

நரகமாய் இருக்கும் வீடு சொர்க்கம் ஆவதும்,
சொர்க்கமாய் இருந்த வீடு நரகம் ஆவதும் கணவன்
மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது...
.
✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...

உன்னை பிரிந்து வாழ்ந்தாலும் மறந்து வாழ மாட்டேனடா...!!

அன்பை பொழிவதற்கு அம்மா
அக்கறை காட்டுவதற்கு அப்பா
தண்டிப்பதற்கு அண்ணன்
செல்லமாக சண்டையிட்டு
கொள்வதற்க்கு அக்கா தங்கை
இன்பத்தையும் துன்பத்தையும் பகிர்ந்து
கொள்வதற்க்கு நண்பர்கள்
இப்படி எத்தனையோ சொந்தங்கள்
அருகில் இருந்தும் உறவே இல்லாத உன்னை
உறவென நினைத்து இவை அனைத்தையும்
உன்னிடம் எதிர்பார்த்தது என் தவறுதான்
உன் மௌனம் சொல்லாமல் சொல்லி விட்டது
நீ எனக்கு எந்த உறவும் இல்லை என்று
இதுவரை வாழ்நாளில் அனுபவிக்காத
வலிகளையும் வேதனைகளையும் உன்னால்
இந்த ஒரு சில நாட்களில் அனுபவித்து விட்டேனடா
காரணம் எதுகும் சொல்லாமல் என்னிடம் இருந்து
விலகி விட்டாய். உன் பிரிவு ஆரம்பத்தில்
வலிகளை தந்தாலும் இப்பொழுது அந்த வலிகள்
உணர்த்தி விட்டது நீ என் வாழ்வில் இல்லை என்பதை.
உன் வாழ்வில் இனி நான் வரப்போவதில்லை.
உன்னை பிரிந்திருந்தால் உன்னை மறந்து
விடுவேன் என்று எண்ணி விடாதே
உன்னை பிரிந்து வாழ்ந்தாலும்
மறந்து வாழ மாட்டேனடா...!!

பெண்களிடம் ஒருபோதும் ஆண்கள் கேட்கக்கூடாத அந்த 10 விஷயங்கள்…!

காதலில் பெண்களுக்கென ஒரு தனிப்பட்ட விஷயங்கள் நிச்சயம் இருக்கும். அந்த விஷயத்தை பற்றி ஆண்கள் கேட்பதை பெண்கள் விரும்புவதில்லை. மேலும், ஒரு சில விஷயங்களை பெண்களிடம் கேட்காமலேயே அவர்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படி ஆண்களுக்கு பயனுள்ள சில விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த 10 விஷயங்கள் :

பெண்களிடம் எப்போதுமே முத்தம் ஒன்றைக் கேட்காதீர்கள். முத்தம் கேட்கும் ஆண்களை சிறுவர்களாகவே பெண்கள் நோக்குகின்றனர். இதற்கு அவர்கள் சம்மதித்தாலும் கூட உள்ளூர நல்ல அபிப்பிராயம் ஏற்படாது.

உன்னை எங்காவது வெளியில் அழைத்துப் செல்லவா? என்று ஒரு போதும் பெண்களைக்கேட்க வேண்டாம். ஏனெனில் அதை நீங்கள் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்ப்பார்ப்பு.

உங்களுடைய வாகனம் பற்றி அல்லது நீங்கள் வாழும் வீடு பற்றி ஒரு போதும் ஜம்பமாகப் பேச வேண்டாம். ஏனெனில் அவர்களை இலகுவாகக் கவர நீங்கள் எடுக்கும் முயற்சியாக அவர்கள் அதைக் கருதக்கூடும்.

இரவில் என்ன செய்யப்போகிறாய் என்று பெண்களைக் கேட்க வேண்டாம். ஏனெனில் அதற்கான திட்டம் ஆணிடம் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்ப்பார்ப்பு.

என்னை நீ விரும்புகின்றாயா என்றும் பெண்களைக் கேட்டு விடாதீர்கள். இந்த ஒரு கேள்வி ஒட்டுமொத்தக் கதையையே மாற்றிவிடக் கூடும்.

நீங்கள் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு பதில் கிடைக்காவிட்டாலும் அதைப்பற்றியும் பேசாதீர்கள். பதில் வராதது உங்களுக்கு கவலையளிப்பதாக அவர்கள் எண்ணக்கூடும்.

நீ இதற்கு முன் எத்தனை பேருடன் உறங்கியிருக்கின்றாய் என்றும் கேட்க வேண்டாம். இது அவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையாக அவர்கள் உணரக் கூடும்.

ஒரு பெண்ணைச் சந்தித்த முதல் சந்திப்பிலேயே அடுத்த சந்திப்புக்கான தேதியைக் கேட்காதீர்கள். உங்கள் மீதுள்ள ஆர்வம், அதனால் இழக்கக்கூடும்.

தொலைபேசியில் உரையாடும் போது நிதானமாகப் பேசுங்கள், அடுத்தக் கட்டத்தை தொலைபேசி மூலமே திட்டமிட முயற்சிக்க வேண்டாம்.

ஒரு பெண்ணின் ஆண் நண்பர்கள் பற்றி அவளிடம் தவறாகப் பேச வேண்டாம். ஏனெனில் உங்களைப் பற்றி மிகத்தவறான எண்ணங்களை இது ஏற்படுத்தி விடும்.

Related Posts Plugin for WordPress, Blogger...